ஊழியர் கூட்டம்..!
நான் யாழ்ப்பாணம் வந்த காலத்தில் இருந்து ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே சிறிய பனிப்போர் இருந்துகொண்டே இருந்தது. அந்தக்காலத்தில் மூன்று பணிப்பாளர்களின் கீழ் வேலைசெய்யக்கூடிய வாய்ப்பையும் யாழ் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் தந்தது. நான் கடந்த காலங்களில் பட்ட பாடங்களால், யாருடனும் முரண்படாமல் எனது வேலையை என்னால் இயன்றவரை யாரையும் ஏமாற்றாமல் செய்யவே முனைந்திருக்கின்றேன். மிகவும் குறைவான நாட்களே லீவே எடுத்துள்ளேன். அருகிலுள்ள கோயில் திருவிழாக்களுக்குக் கூட போவதைத் தவிர்த்து எனது கடமையை செய்துள்ளேன். அதன் பரிசாகவே எனது தற்போதைய பதவி வந்துள்ளது என நம்புகின்றேன். யார் ஆண்டாலும், ஆளாவிட்டாலும் எனது கடமையை தவறாமல் செய்யவே நான் முனைவேன். எனது கணக்கை இயற்கைக்கே காட்டுகின்றேன். பிரபஞ்சம் என்னை அவதானிப்பதாக நம்புகின்றேன். அதனை ஏமாற்ற எனக்கு விருப்பம் கிடையாது. அதேபோல் பிரபஞ்சமும் என்னை ஏமாற்றாது என்ற நம்பிக்கையும் எனது வாழ்க்கைப்பாடத்தில் வந்துள்ளது. இவ்வாறே தொடர்வேன்..! இந்த மனநிலையில் நான் இருக்கும்போது, இன்று ஊழியர் கூட்டம் எமது நிறுவன நூல்நிலையத்தில் நடந்தது. நாட்டின் ...
கருத்துகள்
கருத்துரையிடுக