டொக்ரர் அர்சுனா..!
யாழில் கண்ட விநோதம் நீ..!
சாவகச்சேரியில் நீ செய்த செயல்
நாடு தாண்டி தமிழர்களை உன்பாதையை நேசிக்க வைத்தது..!
உண்மைக்கு காலம் இல்லை என்ற எண்ணத்தை அரசு நிச்சயப்படுத்தினாலும்
மக்கள் விழித்துக்கொண்டது உன் தன்னலமற்ற செயலால்..!
கயவர்கள் வெளியில் இல்லை..!
மக்களாகவே உள்ளார்கள்.
மருத்துவத்தில் மட்டும் திருட்டு இல்லை..!
அது நுழையாத துறையே இல்லை.
அதைத்தூக்கிச் சுமப்பது மக்களே..!
உணர்ந்த மக்கள் மட்டும் சற்று தள்ளி நின்று பார்க்கின்றார்கள்..!
உண்மைகள் அவர்களுக்குப் புரிகின்றன..!
சேர்ந்தே இருப்பவருக்கு புரிய நாட்கள் தேவைப்படலாம்.
அது அவர்களின் ஆயுட்காலமாகக் கூட அமையலாம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
கஷ்டங்கள் இருந்தாலும் அதை நீ மறைக்கும் விதமே
தைரியம்..!
உனக்கு பின்னால் இருக்கும் மக்கள்
உண்மையாக இருந்தால், உனது உண்மை நிச்சயம் விரைவில் வெல்லும்.
இப்போதும் நீ பல விடயங்களில் வென்றுள்ளாய்..!
நல்ல மக்களின் மனங்களை வென்றுள்ளாய்..!
மக்களுக்காகச் சிக்கலிலும் மாட்டுகின்றாய்..!
மன்னார் பயணம் இளம் தாயின் மரண விசாரனையே என்றாலும் பொறுமையில்லாமல்
விலங்கை பெற்றுக்கொண்டாய்..!
சற்றுப்பொறு..!
வவுனியா சிறையில் இருந்தாலும்
அங்கே நேர்மையான நீதிபதி இளம்செழியன் இருந்தாலும்
கயவர் ஆளும் உலகில் நீ சிறுபான்மையினராய் இருக்கின்றாய்..!
நல்லது நடக்காவிட்டாலும் நிச்சயம்
நீ வெளியே வருவாய்..!
அரசியலுக்குள் நுழைவதற்காக தகுதியே சிறைசெல்வது தான்..!
அதுவும் உனக்கு வந்துவிட்டது..!
இந்த நிலை மாற,
உலகே உண்மையை மதிக்க
இயற்கை சரியான பாடங்களை
கொடுத்துக்கொண்டே வருகின்றது..!
உன்னையும் இயற்கையின் கருவியாகவே பார்க்கின்றேன்..!
இயற்கையின் பயன்படுத்தலும்,
சமூகத்திலும், நாட்டிலும், உலகத்திலும்
உன்னால் ஏற்படும் தாக்கங்கள் மூலம்
நல்லவர்கள் பெரும்பாண்மையினராக வரவேண்டும்..!
அனைத்தும் முன்னேற, உலகே அமைதியுடன் இயங்க
நானும் என்சார்பில் உன்பின்னால்
நல்லவர்களின் ஒருவனாய் நிச்சயம் நிற்பேன்..!
தப்பி வெளியே வந்ததும் உன்னை நம்பும் நல்லவர்களின் பெரும்பாண்மையை
அள்ளு..!
கயவர்கள் என்னும் முட்களைக்
கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளு..!
அன்புடன் நல்லவர்களை வழிநடத்து..!
நீயும் ஒரு மனித குல மாணிக்கமாய் தமிழர் மகுடத்தில்
பதிந்த வைரமாய் ஒளிவீசு..!
வாழ்க வாழ்வாங்கு..!
ஆ.கெ.கோகிலன்
04-08-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக