ரெபோ (Turbo)..!

 

 


வழமையாக மலையாளப்படங்கள் என்றால் ஒரு நேர்த்தியும், காட்சிகளில் ஒரு தெளிவும் இருக்கும். இந்தப்படத்திலும் அது அமைந்திருந்தது.

மம்மூட்டி இந்த வயதிலும் சிறப்பாக நடித்து இருந்தார்.

சண்டைக்காட்சிகளிலும் வழமைபோல் கலக்கியிருந்தார். ஹீரோவைக் கொண்டாடும் படம் என்றாலும், தாயார், மகனைப்பற்றி சொல்லும் காட்சிகள் சுவாரசியமாக இருந்தன.

பல வகையான வில்லன்கள் வந்து வந்து பயமுறுத்திச் சென்றார்கள்..!

படத்தின் கதை என்று பார்த்தால், பயன்படுத்தாக வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை திருடி (Scam) பெரிய அரசியல் புள்ளிகளிடம் கொடுத்து அரச சிஸ்டத்தை தமக்கு ஏற்றது போல் வளைக்க முனையும் ஒரு ரவுடிக்கும்பலைப் போட்டுத்தள்ளுவதே கதை..!

அந்தக்கதைக்குள் பலர் இறக்கின்றார்கள்..! படம் தொடங்கும்போதே பெண் ஒருவர் தூக்கிலிடப்பட்டுக்கொல்வது முதல், படம் முழுக்க பெண்களையும், கதாநாயகியின் காதலனையும் தொங்கவிட்டே கொன்றார்கள்..!

படத்தின் தொழில்நுட்பங்கள் பரவாயில்லாமல் இருந்தன.  தெலுங்கு வில்லன் நடிகரான சுனிலின் பங்களிப்பும் சிரிக்க வைத்தது..!

ராஜ் பி.செட்டி என்ற வில்லன் கூட வித்தியாசமாகவும், நன்றாக ஆங்கிலம் பேசியும் நடித்து இருந்தார்.

சுறாக்கொம்பனியில் சுறாக்களுக்கு இடையே பெண்களையும் இறைச்சியாக்கி பொதிசெய்யும் வில்லன் இறுதியில் தானும் அவ்வாறே பொதியாவது சிறப்பு..!

படம் முடியும் தறுவாயில் “விக்ரம்” படப் பாணியில் விஜய் சேதுபதியின் குரலில் அடுத்த பாகம் எடுப்பதற்கான முன்மொழிவை வைக்கின்றார்கள்.

கதாநாயகி அஞ்யனா ஜெயபிரகாஷ்ஷை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கின்றார்..! அவரது உடலிடையால், வித்தியாசமாகத் தெரிகின்றார்..!

ஆகமொத்தம் போரடிக்காமல் படத்தைப் பார்க்கலாம்.

இந்தப் படத்தில் பெரிய புதுமைகள் ஒன்றுமில்லை.

வைசாக் (Vysakh) என்ற இயக்குனரை படத்தின் நேர்த்திக்காகப் பாராட்டலாம்.

 


ஆ.கெ.கோகிலன்

19-08-2024.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!