வழமை திரும்பியது..!

 

கடந்த சில வாரங்கள், கையில் ஏற்பட்டகாயம்  காரணமாக என்னால் பல விடயங்களைச் செய்ய முடியவில்லை. குறிப்பாக உடற்பயிற்சி..! அது செய்யாவிட்டால் எனக்கு ஒரு மாதிரியாகவே இருக்கும்..! உதாரணத்திற்கு குளிக்காது விட்டால் எப்படி எமது மனம் இருக்குமோ..? எனக்கு பயிற்சிகள் செய்யாவிட்டால் ஏதோ ஒன்றைத் தொலைத்துவிட்டது போல் மனம் இருக்கும்..! இன்று தான் மனம் திரும்ப வழமைக்கு வந்தது.

கடந்த ஜூலை 25ம் திகதி கையில் ஏற்பட்ட காயம், ஓகஸ்ட் 7வரை என்னை முடக்கியது..! இன்னும் முற்றாக நான் வழமைக்கு வரவில்லை என்றாலும் இன்று அந்தக்காயத்தில் தண்ணீர்படக்குளித்தேன். அதுவே பெரிய மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தக்காலப்பகுதியில் பல மாற்றங்களும் நடந்தன. எமது உதவிப்பதிவாளர், பதவி  உயர்வு பெற்று இன்னோர் நிறுவனத்திற்குச் சென்றார்..! அதேபோல் துப்பரவுப்பணியாளர்கள் இருவர் வேலையை விட்டு நின்றார்கள். அதேபோல் பயிற்சிபயிலுனராக இருக்கும் பெண் ஒருவர், படிப்பதற்காக அந்தக்கடமையில் இருந்து விலகினார். இதனால் அலுவலக நிலைமைகள் சற்று இறுக்கமானதாகத் தெரிந்தன. அத்துடன்  எனது கைவலியும் பயமுறுத்தியது.

அந்தநிலைமை இன்று மாறியதாக உணர்ந்தேன்..! இரு துப்பரவுப்பணியாளர்கள் கடமையில் இணைந்தார்கள். பதில் பதிவாளராக ஒரு முகாமைத்துவப் பணியாளரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ததுடன் ஒரு தகவல் தொழில்நுட்ப துறைத்தலைவரையும் தெரிந்து, தலைமையகத்தின் அனுமதிக்காக கடிதங்கள் அனுப்பியுள்ளேன்.

2023 மாணவர்களின் பதிவும், பாதிட்டுக்கூட்டமும் ஓரே நேரத்தில் நடக்கும் நிலையில், மின்சாரம் கூடப்போய்விட்டது..! இருந்தாலும் ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு எமது சேவைகளைச் செய்தோம்.

வழமையைவிட எல்லாம் சிறப்பாக நடந்ததாகச் சொன்னார்கள்.   பகல் போல் இரவும் நிறைவான சுவையான கடை உணவுடன் கழிந்தது..!

இன்று என்ன கிடைக்க வேண்டும் என்று எழுதப்பட்டு இருக்கின்றதோ அது கிடைத்தே ஆகும்.

அதேபோல் எது கிடைக்கக்கூடாது என்று இருக்கின்றதோ அது கிடைக்காது. அது தான் இறைவன் வகுத்த விதம். அதை புரிந்தால், வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்க முடியும். இல்லை என்றால் வாயைக்காட்டி, வம்பை வாங்கிக்கட்ட வேண்டும்.

எது விருப்பம்..? நாமே தெரிய வேண்டும்..!

 

ஆ.கெ.கோகிலன்

08-08-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!