சமத்துவம்..!

 

 




இது ஏன் இன்று கதைக்கவேண்டிய ஒரு விடயமாகிவிட்டது என்றால் ஒரு சிலர்  எது சரி..? எது பிழை என்பதையே புரியமுடியாமல் இருப்பது தான்..!

எமது நாடு பல இன மக்களைக்கொண்டது. இந்நாடு அத்துணை இன மக்களுக்கும் பொதுவானது. பெரும்பாண்மைகள் மாறு படலாம். இன்று சிறுபாண்மையாக இருப்பவர்கள், நாளை பெரும்பாண்மை ஆகலாம். அவ்வாறு ஆகாமலும் போகலாம்.

 திருகோணமலை ஒரு காலத்தில் தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் பிரதேசமாக இருந்தது..! தற்போது மூன்று இனங்களும் ஏறக்குறைய சம அளவில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் சரியான விபரம் எனக்கு இன்னும் தெரியவில்லை..! கிடைத்த விபரத்தின் படி முஸ்லீம் மக்கள் 43 சதவீதமும் தமிழ்கள் 30 சதவீதமும் மீதி 26 சதவீதம் சிங்களவர்களும் மிகுதி ஏனைய இனங்களும் அடங்குவதாகச் சொல்லப்படுகின்றது.

இருந்தாலும் காணி, ஏனைய வசதிகள், பதவிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று பார்த்தால்  ஏறக்குறைய சமமாகவோ அல்லது முஸ்லீம் பிரதிநிதித்துவம் சற்று கூடுதலாகவோ அமையலாம்.

கால மாற்றங்கள், வெளிநாட்டு மோகங்கள், ஏனைய சில நிலைமைகள் காரணமாக இவற்றில் மாற்றங்கள் வரும்காலத்தில் ஏற்படலாம்.

இதற்கு ஒப்பாக எமது நிறுவனத்திலும் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன..! அனைவரும் சமமாக வாழக்கூடிய நிலையில் இருந்தாலும்வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன..! இந்த வேறுபாடுகளை நாங்கள் வெறுப்பாக நோக்காது, எமது பலமாகவும், பாலமாகவும் நோக்க வேண்டும்..! இவ்வாறாகப் பல இனங்கள் இருந்தால், பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புக்கள் உண்டு. யாருக்கும், யாரையும் கீழேயோ அல்லது மேலேயோ வைத்துப்பார்க்க வேண்டிய சூழல் நமக்கு இல்லை என்பதைப் புரிய வேண்டும். ஒவ்வொரு இனத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.  அவர்களது பெரும்பாண்மையை மதிக்க வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அவர்களுக்கே செல்ல வேண்டும். ஒருவரின் தகுதியை, அவருக்கு கிடைக்கவேண்டியதை தட்டிப் பறித்து இன்னொருவருக்கு கொடுப்பதால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. ஆனால், வாழ்க்கை சுமையாகுமே தவிர வேறொன்றும் நடக்காது.

அன்பு, பாசம், நேசம், உதவி போன்ற நல்ல குணங்கள் ஊடாக  அவை மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மக்களை ஒற்றுமையாக வைத்திருக்க வேண்டும். இது தான் நாட்டின் வெற்றிக்கும், பொருளாதாரத்தின் உய்வுக்கும், மக்களின் மகிழ்ச்சிக்கும் வழியமைக்கும்.

ஒற்றுமையே பலம்..!  தேவன்கள் பல இருந்தாலும்,

நாட்டின் முன்னேற்றமே அனைவருக்கும் வெற்றி..!

ஒன்று படுங்கள்..! வெற்றியை நுகருங்கள்..!

 

ஆ.கே.கோகிலன்

21-08-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!