கேடு நினைத்தால்..!

 


காதலிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். காதலுடன் காமம் கலக்க,  அதுவும் முறையற்ற விதத்தில்  நடந்தால், துன்பங்கள் தொடர்கதையாகும்.

எனது நண்பர் படிக்கும் காலத்தில் ஒரு அழகான பெண்ணுடன் காதல் வயப்பட்டு, கொஞ்சநாட்கள் தாடியுடன் அலைந்தார்..!

சில மாதங்கள் கழியத் தாடியைக்காணவில்லை. மகிழ்ச்சியாகத்  திரிந்தார்..! அப்போது புரிந்தது, அவரது காதல் கைகூடியுள்ளது என்பது..! சில மாதங்கள் கழிய மீண்டும் முகத்தில் வாட்டம் தெரிந்தது..! வினாவ, காதல் கட்டில் வரை போனதால் கரு உருவாகிவிட்டது..! கலியானமே நடக்காமல், இது தெரிந்தால் இரு குடும்பங்களும் நாறும்..! அது மாத்திரமன்றி, இன்னும் பெற்றோருக்கு இந்த விடயம் தெரியாது..! இருவரும் சேர்ந்து, தெரிந்த வைத்தியர் ஒருவரிடம், ஆலோசனை பெற்று கருவைக் கலைத்தனர்..!

திரும்ப, நண்பரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.  தான் ஏதோ வென்று விட்டதாக நினைத்தார். ஆனால் காதலியின் முகத்தில், ஒருவித வாட்டத்தை அவதானித்தேன். நண்பரிடம் கேட்கவில்லை.

காலங்கள் சென்றது..! காதலை இரு குடும்பமும் எற்றுக்கொண்டது. முதலில் கட்சி மாற, நினைத்த நண்பனும் மனம் திருந்தி, அந்தக் காதலியைக் கரம் பிடித்தான்.

மீண்டும் சில காலங்கள் சென்றது..! வீட்டின் பெரியோர் புதுவரவை எதிர்பார்த்தார்கள்..! அது நடக்கவில்லை. இரு குடும்பத்துப் பெரியவர்களும் காலம் செல்லச்செல்ல காத்திருந்து இறந்தே போனார்கள்..! பிள்ளை இல்லை என்ற துயர் இருவரையும் வாட்டி வதைத்தது. இந்தியா சென்றார்கள். உள்ள பணத்தை செலவு செய்தார்கள். அழகான பிள்ளைக்கு தாய், தந்தை ஆனார்கள்..!

காலம் மீண்டும் சென்றது..! அப்போது தான் அந்த அழகான பிள்ளைக்கு இருந்த குறை வெளிப்பட்டது..!

என்ன செய்ய..? இறைவனாய் தரும்போது, சமூகத்திற்குப் பயந்து, கொலையே செய்தார்கள்..! இப்போது வலிந்து எடுத்து, அந்தப்பிள்ளையைப் பார்த்துப் பார்த்து வெந்து சாகின்றார்கள்..!

எனக்கே  நண்பரின் நிலையைப் பார்க்க என்ன சொல்வதென்றே தெரியவில்லை..? யாருக்குத் தெரியும் இவ்வாறு நடக்கும் என்று..! இயற்கை மிகவும் பொல்லாதது..! அனைத்தையும் அவதானித்துக்கொண்டே இருக்கின்றது..! தருணம் வரும்போது தனது தாண்டவத்தைக் காட்டும்.

நல்லது செய்தால் நல்லது கிடைக்கும்..!

கெட்டது செய்தால்.. அவ்வளவு தான்..!

 

ஆ.கெ.கோகிலன்

24-08-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!