ஏரிஐ..!
பல்கலைக்கழகம் போனால் தான் வாழ்க்கை என்ற காலத்தில், எனது உற்ற
நண்பனே அறிமுகப்படுத்தினான்
உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தை..!
அந்நேரம் நான் வவுனியாவில் இருந்து வந்து,
திருமலையில் உறவினர் உதவியுடன்
தங்கியிருந்தேன்..!
ஏறக்குறைய 1996 கடைசிகளில் அங்கே படிக்கும் மாணவர்கள் சிலர் “தொழிற்படு ஆராய்ச்சி..” என்ற பாடத்தை பற்றிக் கேட்டு,
அதனைப்படிப்பிக்க முடியுமா என என்னிடம் வினாவ,
நானும் தலையசைத்துவிட்டு தேடினேன் அது என்ன “தொழிற்படு ஆராய்ச்சி”..?
Operationnal Reseach என்ற ஆங்கிலத்தைப் பார்த்ததும்
புரிந்தது என்னால் முடியும் என்று..?
எனது பட்டத்தில் சில பகுதிகள் அதில் இருந்து படித்துள்ளேன்..!
ஆனால் அவை போதுமானதாக இருக்கவில்லை..? தேடினேன்..! அடிப்படைக்கொள்கை
அப்போது தான் புரிந்தது ..! அது “ சிறந்ததில்
சிறந்ததை தெரியும் முறை..!”
சுய கற்றலில் ஆர்வம் தொடங்கியது..! புத்தகங்கள் எனது அறைக்குள் நிறைய
வந்தன..! என்னால் இயன்றவரை அவற்றைப் புரட்டினேன்.
படிப்பித்தேன்..!
அந்தப் பழக்கம் இன்றுவரை தொடர்கின்றது..!
அதற்குள் பல மாற்றங்கள் நடந்துவிட்டன..!
எனக்கு திருமணம் ஆகியது..!
புதிய உறவுகள் வந்தன..!
மேலும் சில பட்டங்கள் வந்தன..!
பிள்ளைகள் வந்தன..!
வசதி வந்தது..!
வீடுகள் வந்தன..!
கார் வந்தது..!
இந்நிறுவனத்திலேயே நிரந்த விரிவுரையாளர் வேலை கிடைத்து தற்போது தரம்
1 பணிப்பாளர் வரை வர முடிந்தது..!
மேலும் என்னை, யாழ் உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்திலும் வளப்படுத்த
வழி அமைத்துத் தந்தது..!
இன்று மீண்டும் தன்னிடமே அழைத்துக்கொண்டு,
பொறுப்புக்களையும், தண்டனைகளையும், மரியாதைகளையும் அள்ளித் தருகின்றது..!
ஏரிஐயில் படிக்கவில்லை..! ஆனால் ஏரிஐயை வளர்க்க தொடர்ந்து படிக்க வைக்கின்றது..!
பட்டங்கள் பல பெறாவிட்டாலும்,
என்னை அளக்க எனக்கே முடியவில்லை..!
பாடங்களும் அப்படி..!
அனுபவங்களும் அப்படி..!
ஆய்வுகள் மூலம் தான் நமது அடைவு எத்தகையது என்று ஆவணப்படுத்த முடியும்.
அது ஆயிரம் பட்டங்களுக்குச் சமமான அறிவை தந்தாலும் நிறுத்த மாட்டேன்.
தொடர்ந்து படிப்பேன்..!
தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்துவோம்..!
பரப்புவோம்..!
அவற்றுடன் நிம்மதியான வாழ்வில் என்றும் பயணிக்க முனைவோம்.
ஆ.கெ.கோகிலன்
29-08-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக