காயம் தரும் பாடம்..!

 


 


கதவில் கைமாட்டி, விரலில் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை. இருந்தாலும் காயம் பெருக்கவும் இல்லை..! நான் பொதுவாக எல்லா வைத்தியரிடமும் போவது இல்லை. எனக்கு மிக நம்பிக்கையான ஆட்களிடம் மாத்திரமே போவேன். குறிப்பாக எனது சிறுவயது நண்பர், உறவினர் என இருவழியிலும் தொடர்புபட்ட மருத்துவரையே நாடுவேன். அவரின் அறிவுரையை மாத்திரமே கேட்பது வழக்கம்.

அவரைப்பற்றி எனக்கு நன்கு தெரியும்.

 இந்த நிலையில்,  விரல் காயத்திற்கு மருந்து கட்டும்போதும்,  திருமலையில் இரு முறையும், யாழ் வீட்டில் இரு முறையும் காயத்துடன் பன்டேஜ் ஒட்டியிருப்பதால், அந்தப்புண் மாறாதது போலவே இருந்தது. இந்த நிலையில் இன்று, பன்டேஜைப் பிரித்து, சற்று நீர்விட்டு, ஒட்டியிருந்த அந்தத்துணியை எடுக்க, மீண்டும் காயப்பட்டு வலித்தது. மயக்கமும் வரப்பார்த்தது. பின்னர், மனைவி மூலம் பன்டேஜ் போட நினைத்தாலும், ஒவ்வொரு முறையும் உரிக்கும் போது ஏற்படும் வலி கொடுமையாக இருப்பதால், இனி பன்டேஜ் போடாமல் இருக்கவே பார்த்தேன்.

மதிய நேரம் காயத்தில் ஒருவித நீர் சுரந்தது..! ஈக்கள் படாமலும், துசு துணிக்கைகள் விழாமலும், நீர் தொடர்ந்து படாமலும், தாங்கப்படாமல் இருக்கவும் பார்த்துக்கொண்டு, மாலை சற்று நேரம் உறங்கினேன். அந்த நீர், கட்டியாக உறைந்து தற்போது ஒரு மேல்படை  உருவாகி வருகின்றது..! சில நாட்களுக்கு முன்னர், வலி காரணமாகவே பன்டேஜ் கட்டினேன். உண்மையில், இரத்தம் உறையும் வரை ஏதாவது செய்து, துப்பரவாக அந்த புண்ணுள்ள பகுதியை வைத்திருந்தால், உடலில் இருக்கும் இறைவனின் மருத்துவர்கள், அதனை இயல்பாக குணப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை வந்தது.

மனிதன் என்பது ஆண்,பெண்ணால் உருவாகினாலும், அது இயற்கையின் படைப்பு..! அந்த உடல் இயற்கையோடு எப்படியான தொடர்புகைளைப் பேண வேண்டும் என்பதை, அந்த இயற்கையே தீர்மானிக்கும்.  அதே போல் எந்தப்பெரிய மருத்துவரிடம் போனாலும், நோய்  சரிவரக்கூடாது என்றால் சரிவராது..!

மருத்துவம் என்பது சில தேவைகளுக்கு மாத்திரமே..! இறைவனையும்,  உடலையும் நம்பினால், பல வருத்தங்கள் தானாகவே குணமாகும்..! அதற்குப்பொறுமை அவசியம். நவீன வாழ்க்கை முறையில் அது அவ்வளவு சரிப்படாது. ஆனால் அந்த முறையைக் கொஞ்சமாவது பின்பற்றினால், எமது ஆரோக்கியத்தையும் கொஞ்சமாவது பேணலாம்.

 

ஆ.கெ.கோகிலன்

29-07-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!