உயர்தொழில்நுட்பவியல் தாய்..!

 


திருமலையில் பல்கலைக்கழகத்திற்கு மாற்றாய்

இருக்கும் உயர்தொழில்நுட்பவியல்  தாயே

உன்சேவை என்றும் இங்கே வேண்டும்.

பல்கலைக்கழகக் கனவைக்

சொந்த இடத்திலே நிஜமாக்கியள் நீ..!

அனைவரையும் அரவணைத்து

அறிவை ஆழமாக ஊட்டி

அரியாசனத்தில் ஏற்றியவள் நீ..!

துறைமுக வீதியிலே

வசதிகள் அற்ற நிலையிலும்

எம்மை உயர்த்த,

உற்சாகமாய் இருந்தாய் நீ..!

வேகமாய் வந்த சுனாமி

உன்னைத்தூக்கி  செல்வநாயக புரத்தில் போட்டாலும்

உன் சேவை நிற்கவில்லை..!

நன்மைக்காய் அவதரித்த நீ

சுனாமியாலும் நன்மையே பெற்றாய்.

துவரங்காட்டிலே அழகான ஆடையை

சூடிக்கொண்டு யாருக்கும் சளைக்காமல்

தொடர்ந்து செய்கின்றாய்  உன்சேவையை..!

25 வருடங்கள் போனாலும் என்றும்

குறையாது மக்களுக்கான உனது சேவை..!

தாயே ஆரம்பத்திலே கணக்கியலைக் கையில் எடுத்தாய்..!

சில வருடங்களில் ஆங்கில மொழியையும்

புகட்டத்தொடங்கினாய்..!

காலங்கள் சில ஓட, தகவல் தொழில்நுட்பமும் இனி வேண்டும் என்று அதனையும் இணைத்துக்கொண்டாய்..!

திருகோணமலை என்றாலே

சுற்றுலாத்துறை என்பதை

நினைத்தோ என்னவோ சுற்றுலாத்துறை கற்கையையும் கொடுத்தாய் நீ..!

பலநூறு ஆண்டுகளுக்கு இன்னும் பல கற்கைகளைக் கொடுத்து எல்லாத்துறையிலும் நிபுணர்களை

வழங்க வேண்டும் நீ..!

எல்லா வளமும் மிக்க பிரதேசமாக என்றும்

திகழவேண்டும் இந்தப்பூமி..!

என்றும் அதற்கு துணையாய்

இருக்கவேண்டும்  தாயே நீ..!

 

 

ஆ.கெ.கோகிலன்

29-08-2024.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!