இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அயலான்..!

படம்
  2024 பிறந்த பிறகு, எனது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றம் வந்தது..! அதனை நான் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டேன். சிலவேளை எனது குடும்பத்தினருக்கு அது பிடிக்காமல் போயிருக்கலாம். இருந்தாலும் எனது மனதிற்குச் சரியென்றுபடுவதையே நான் செய்ய விரும்புவேன். இந்த சமயத்தில் எனது முடிவு, எனது மனதிற்கு நிம்மதியையும், ஒரு நிறைவையும் தந்துள்ளது. அதனைக்கொண்டாட பல வழிகளில் ஈடுபட்டுள்ளேன். இன்று அந்தவகையில் மனைவி, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு, யாழில் உள்ள பிரபல தியேட்டரில் அயலானைப் பார்த்தேன். படம், கணினி வரைபியலில் மிகச் சிறப்பாக இருந்தது..! கதையும் ரசிக்கக்கூடியதாக இருந்தது. பூமியை அழிப்பதில் அயல்கிரகங்களில் இருப்பவர்களைக் காட்டிலும், பேராசையாலும், ஆணவத்தாலும் மனிதர்கள் முயல்வதைப் பார்க்க வேதனையாக இருந்தது. நாமே நம்மீது அக்கறையில்லாமல் இருந்தால் யார் தான் நம்மைக் காப்பார்கள்..? இறைவன் மீது குறை சொல்வதைவிட இயற்கையைப் பேண முயலவேண்டும். மற்றைய மனிதர்களை அழித்து சம்பாதிக்கும் பணத்தால் நாம் எவ்வளவு காலம் நிறைவாகவும் நிம்மதியாகவும் இருக்க முடியும்..? பூமி அனைவருக்கும் சொந்தம். அனைவர் என்றால் மனிதர்...

மழையிலே அறிந்த தொடர்புகள்..!

படம்
  தமிழில் மாரி காலம் என்றால் மழை தான். ஆங்கில வருடத்தில் ஜனவரி வந்தாலும் தைப்பொங்கல் வரும்வரை, தமிழில் மார்கழியே என்பதை உணர்த்தும் வகையில் இயற்கை தொழிற்படுகின்றது. நேற்று அதிகாலை 4.00மணிக்கு வீட்டிலிருந்து வெளிக்கிட்டு திருகோணமலைவர   காலை 8 மணியைத் தாண்டிவிட்டது. இருந்தாலும் நான் மிகவிரைவாக வந்துவிட்டதாகவே நினைக்கின்றேன். ஹொறோப்பொத்தானை தாண்டிய பின்னர் பிடித்த மழை இரண்டு நாளாகத் தொடர்கின்றது..! வழமைபோல் அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு படுக்கச்செல்ல, ஒரு நண்பர் என்னைத்தேடி வந்தார். அவர்களுடன் சில மணிகள் எனது நிறுவனத்திலே செலவிட்டுவிட்டு, அவருடைய   பல வீடுகளில் ஒரு வீட்டிற்குச் சென்றேன். அங்கு பல விடயங்களை அவரிடம் கற்றுக்கொண்டேன். என்னைப்போல் ஒரு கணித பாட ஆசிரியராக இருந்துகொண்டு, பல வேலைகளைத் தானே செய்கின்றார். அது மட்டும் போதாது என்று பல பிள்ளைகளைப் படிப்பிக்கின்றார்..!   அதுவும் உறவினர் அல்லாத,   உதவிகள் கிடைக்காத கஷ்டப்பட்ட பிள்ளைகளுக்கு, பல விதங்களில் அவர்களது வாழ்க்கைத் திறனை விருத்திசெய்ய வேண்டிய வழிகளைக் காட்டிக்கொடுக்கின்றார். படிப்பதால் அரச வேலை...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்..!

படம்
    கடந்த தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம். கதை ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் போகப் போக கதை பிடிக்கத்தொடங்கிவிட்டது..! இதுவரை வராத புதிய களத்தில் படம் பயணிப்பதால் காட்சிகளும், கதாபாத்திரங்களும் புதுமையாத் தெரிந்தன. காடுகளுக்கு யானைகள் எவ்வளவு முக்கியமானது என்பதையும், அதனை மறந்து, யானைகளைத் தந்தங்களுக்காக அழிப்பதையும், அதனால் கோபமுற்ற யானைகள் மனிதர்கள் மேல் கொடூரத்தைக் காட்டுவதும், பின்னர், யானைகளைக்காக்க ஹீரோக்கள் முயல்வதால், அவையும் அவர்களை கனிவோடு நோக்குகின்றன. உண்மையான யானைகளா அல்லது கணினி வரைபியல் மூலம் உருபெற்ற யானைகளா என்பது தெரியவில்லை..! ஆனால் படம் பார்க்க ரசிக்க ஏதுவாக இருந்தது. யானைகளோடு மோதும் பாத்திரத்தில் நடித்தவர், உண்மையான புதிய ஒரு விலங்கு போலவே நடித்திருந்தார்..! மாலைவாழ் மக்களின் வாழ்க்கையும், அவர்கள் படும் துயரங்களையும், அரசியல் சூழ்ச்சிகளால் தங்களின் உயிர்களை இழக்கும் அப்பாவித்தனங்களும் மனதை காயப்படுத்தின. ஆட்சி அதிகாரங்களுக்காகப் பெரிய ஹீரோக்கள் உருவாவதையும், அவர்களின் உதவியுடன் ஆட்சியமைப்பதையும் காட்டித் தமிழகத்...

இடமாற்ற அனுபவம்..!

படம்
  காலை 3 மணிக்கு எலாம் (Alarm) வைத்துவிட்டு, இரவு வேளைக்கே படுத்துவிட்டேன். நித்திரை வரவில்லை..! இருந்தாலும் காலை நீட்டி சும்மா படுத்தேன். மூன்று மணிக்கு எழுந்து எலாமை நிறுத்திவிட்டு மீண்டும் அரை மணிநேரம் படுத்தேன். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தது மனதிற்கு நிறைவைத் தந்தாலும், போதிய நித்திரை இல்லாதது கவலையாக இருந்தது. கடந்த இரண்டு மூன்று நாட்கள் இப்படித்தான் இருந்தது..! பின்னர் குளித்து வெளிக்கிட்டு, காலை 4.30 இற்கு காரில் திருகோணமலை நோக்கிப்பயணமானேன். தனியாகப் போவதால் நித்திரை வரப்பார்த்தது. ஒருவாறு சமாளித்து, காலை 9.00மணிக்குள் சென்றுவிட்டேன்..!   பின்னர் சம்பிரதாயச்சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டன. SLIATE இன் தமிழ் கீதத்துடன் வேலைகள் தொடங்கின. பின்னர் புதிதாக வைக்கப்பட்ட சுவாமிப்படத்திற்கு   பூக்கள் வைத்து வணங்கிவிட்டு, வெளியே பால் காய்ச்சியபின்னர், மூன்று தேசியக்கொடி உட்பட மூன்று கொடிகளையும் கல்வி, முழு நிர்வாகம், அலுவலக நிர்வாகம்   என்ற வகையில் அதற்குப்பொறுப்பானவர்களால் முறையே ஏற்றிய பின்னர், மாநாட்டு அறையில் விளக்கு ஏற்றிப், பின்னர்   அலங்கரிக்கப்பட்ட பாற்ச்ச...