ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்..!

 


 

கடந்த தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம்.

கதை ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் போகப் போக கதை பிடிக்கத்தொடங்கிவிட்டது..!

இதுவரை வராத புதிய களத்தில் படம் பயணிப்பதால் காட்சிகளும், கதாபாத்திரங்களும் புதுமையாத் தெரிந்தன.

காடுகளுக்கு யானைகள் எவ்வளவு முக்கியமானது என்பதையும், அதனை மறந்து, யானைகளைத் தந்தங்களுக்காக அழிப்பதையும், அதனால் கோபமுற்ற யானைகள் மனிதர்கள் மேல் கொடூரத்தைக் காட்டுவதும், பின்னர், யானைகளைக்காக்க ஹீரோக்கள் முயல்வதால், அவையும் அவர்களை கனிவோடு நோக்குகின்றன. உண்மையான யானைகளா அல்லது கணினி வரைபியல் மூலம் உருபெற்ற யானைகளா என்பது தெரியவில்லை..! ஆனால் படம் பார்க்க ரசிக்க ஏதுவாக இருந்தது. யானைகளோடு மோதும் பாத்திரத்தில் நடித்தவர், உண்மையான புதிய ஒரு விலங்கு போலவே நடித்திருந்தார்..!

மாலைவாழ் மக்களின் வாழ்க்கையும், அவர்கள் படும் துயரங்களையும், அரசியல் சூழ்ச்சிகளால் தங்களின் உயிர்களை இழக்கும் அப்பாவித்தனங்களும் மனதை காயப்படுத்தின.

ஆட்சி அதிகாரங்களுக்காகப் பெரிய ஹீரோக்கள் உருவாவதையும், அவர்களின் உதவியுடன் ஆட்சியமைப்பதையும் காட்டித் தமிழகத்தின் உண்மையான அரசியலைப் படம் தோலுரிக்கின்றது.

அண்மையில் வெளியான எஸ்.ஜே.சூரியாவின் படங்கள் எல்லாம் ரசிக்கக்கூடியதாக இருக்கின்றன.  இதுவும் அப்படியே..! அது மாத்திரமன்றி,  படத்தின் இன்னொரு முக்கிய ஹீரோவான ராகவா லோரன்ஸின் நடிப்பும்,  தரமாகவும் ரசிக்கும் வண்ணமும்  இருந்தன.

படத்தில் பல பாத்திரங்கள் வருகின்றன. பொலீஸ், கொள்ளையர்கள், பழங்குடிமக்கள் மற்றும் ஹீரோக்கள்  என பல விடயங்களுடன் தொடர்புபட்டு படம் நகர்கின்றது.

படம் முடியும்போது கிராமமே அழிவதும், வில்லன்களைப் பழிவாங்க  நேரடியாக மோத முடியாமல் போவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே..!

நடந்த ஒவ்வொரு விடயத்தையும் சினிமாவாக எடுத்து, அதனை மக்களுக்குப் போட்டுக்காட்டி, நாட்டின் அரசியல் போக்கை மாற்றுவதும், மக்களைக்கொண்டே,  நடிக்கும் மக்கள் நாயகர்களை தகர்ப்பதும் எனக்குப் பிடித்திருந்தது..!    

சந்தோஷ் நாராயணின் பாடல்களும் பின்னணி இசையும் நன்றாக இருந்தன. அனைத்துத் தொழில்நுட்பங்களும் சிறப்பு. படம் ரசிக்கும் விதத்தில் இருக்கின்றது. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூலம் படத்தை வெளியிட்டிருப்பது உச்சம்..!

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்திற்கு தனிப்பாராட்டே கொடுக்கலாம்.

 


 

ஆ.கெ.கோகிலன்

06-01-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!