உகந்தை முருகன்..!
சில அற்புதங்கள் வாழ்க்கையில் நடக்கும்போதே எமக்கு எம்மையும் அறியாமல் எமக்குமேலேயுள்ள ஒரு சக்திபற்றிய தெளிவு வரும். அதுவரை நாம் யாரையும் நம்ப மாட்டோம். எம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற குருட்டு நம்பிக்கை மாத்திரம் வந்துவிடும். நம்மை விட உலகில் ஆளே இல்லை என்ற மாதிரி எண்ணமும் வந்துவிடும். சில சமயம் எமது எண்ணம் போல் காரியங்கள் நடக்க, எம்மையறியாமலே ஆணவமும் தலைக்கணமும் வந்துவிடும்..! எம்மை யாரும் அசைக்க முடியாது. யாராலும் எம்மை வெல்ல முடியாது. நாம் தான் ராஜா என்ற நிலை மனத்தில் வலுத்துவிடும். இந்த நிலையில் இருந்து மாற எல்லோருக்கும் வாய்ப்பு வந்ததோ தெரியவில்லை. எனக்கு 30 வயதுகளிலேயே வந்தது..! அது வந்த வடிவம் ஆச்சரியமானது. நான் திருமணம் செய்து, சில வருடங்கள் பிள்ளையில்லை என, மனைவி தவிக்கும் போது தான் ஏற்பட்டது..! அதுவரை எனக்குத் தெரியும் நான் யார் என்று..? எனது திறன் என்ன என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் இங்கு என்ன இருந்தும் ஒன்றும் நடக்கவில்லை..! மருத்துவ வியாபாரத்தைப் பற்றி முன்பே தெரிந்ததால் அது பற்றி நான் சிந்திக்கவே இல்லை. ஆனால் இறைவன் ஏதோ ஒரு பாடம் படிப்பிக்கப்ப...