கொரோனா வந்த சமயத்தில் தோன்றிய எண்ணம்.

 

கொரோனா வைரஸ் 2020

 

ஏய் கொரோனாவே..

ஏன் வந்தாய் பூமிக்கு..?

அச்சத்தை எங்கும் விதைத்தாய்.

இறைவன் இடங்கள் கூட

அடங்குகின்றது உன் வித்தையால்..!

நான் பார்க்கின்றேன்

உயிர்களை அழிக்கும் நுண்ணங்கியாக

அல்ல..!

உன்னை ஒற்றுமையை

ஓங்கச் செய்யும்  ஓர்  பேரரசாக..!

போராட்டங்களையும், பேராசைகளையும்

அழிக்கும் பேரங்கியாக..!

கொடுங்கோல் அரசர்களும்

கலங்கும் கண்ணுக்குப் புலப்படா

நீதவானாக..!

மனித அகம்பாவத்தால் ஏற்படும்

மரணங்கள் உயர வேண்டிய வேளையில்

உன் கோரத்தாண்டவம் பீதியை

பூமி எங்கும் கிளப்பி

அதன் எண்ணிக்கைகளைக் குறைகின்றன..!

 

மருத்துவம் காசு அள்ள என

வல்லரசுகள் மார்தட்டி

வயசானாலும் மரணத்தைத் தள்ள

நீ வந்து இறைவனின் கடமையை

கச்சிதமாய் செய்கின்றாய்..!

மதங்களை வளர்க்கும்

மானிடப்  பேராசையால் பூமாதேவியின் பாரத்தை

சிறிதளவேனும் குறைக்கின்றாய்...!

எனக்குத் தெரியும்

கலியுகம் முடிய நாலேகால இலட்சம்

வருடங்கள் இருக்க..!

உனது விளையாட்டு சில கணங்களுக்கு மட்டுமே.

மானிடம் மாண்பாக இன்னும்

உன்னைப்போல் பல இங்கு வர

வேண்டும்..!

வலியவன் என்று மார்தட்டும்

இழியவனை இனங்காட்ட வேண்டும்..!

பயந்து ஒடுங்கும் எளியவனை

இனியவனாக உலகு நோக்க

உன் தயவு நிச்சயம் வேண்டும்..!

                                        ஆ.கெ.கோ

(18-03-2020)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!