பேரழிவு
பேரழிவு
பூமி நடுக்கம் சுனாமி
புயல் வெள்ளம் இவை
தான் இயற்கையின் சீற்றமா..?
கொரோனா கூட இயற்கையின்
சீற்றம் தான்..!
சீனாவுக்கு வர உலகே வாய் பார்த்தது.
அவர்கள் பழக்கமே இதற்கு காரணம் என்றது.
இப்போது உலகே முடங்கியது.
சீனாவைச் சிலர் குறை கூறுகின்றனர்.
வைரஸ் எப்படி வந்தது
யாரால் வந்தது
யாரைப் பாதித்தது என்று
ஆராய்வதை விடுத்து
மக்களை எப்படிக் காக்கலாம்
என சிந்திப்பார் குறைவு..!
இதிலும் வியாபாரம் பார்க்கவே
அனேக நாடுகள் முனைகின்றன..!
மனிதன் இறைவனாக
பொன்னான வாய்ப்பு
உதவுங்கள் தேவையானவர்களுக்கு
“போதும் மனிதம்
இருக்கு“ என்ற நம்பிக்கை
இறைவனுக்கு வர வேண்டும்.
வந்த வழியில் தானாக அடங்கும்
இப்புதிய இயற்கை சீற்றம்..!
குறை கூறுவதை விடுத்து
இயற்கையை புரியுங்கள்.
இறைவன் புரியும்..!
நீ யாரென்றும் உணர்த்தும்..!
ஆசையே அழிவுக்கு ஆதாரம்..!
உதவுங்கள்.
அதன் ஊடாக உய்யுங்கள் வாழ்க்கையில்..
ஆ.கெ.கோ
20-03-2020
கருத்துகள்
கருத்துரையிடுக