நான் பிறந்த 60களின் கடைசியில் எமக்கு கல்வீடே கிடையாது..! அந்தச்சமயத்தில் பகுதி மண் வீடோ அல்லது மண்வீடோ இருந்தது. ஆனால் இரவு விளக்குகள் எரியும். மண்ணெண்ணை அல்லது தேங்காய் எண்ணெய் விளக்குகளே அதிகம் பயன்பட்டது. எல்லோரும் கூட்டமாக இருந்து கதைப்போம். சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுவார்கள். வீட்டில் பொழுது போக்குகள் கிடையாது. பெரிவர்கள் அவர்களது வேலைகளைச் செய்வார்கள். 10 மணிக்கு முன்னரே அனைவரும் படுத்துவிடுவார்கள். காலை 4 மணிக்கு முன்னரே எழுந்துவிடுவார்கள். சாப்பாடுகள் பல மாதிரியும் இருந்தாலும், பழைய சோறு அல்லது பழஞ்சோறு, பழம்தண்ணீர் என்பன நிறைவான உணவு. இரவு மிச்சங்கள் எல்லாம் அடுத்தநாள் உணவில் தோன்றும். வருத்தங்கள் வருவது குறைவு. அந்தக்காலத்தில் நிறைவும் நிம்மதியும் இருந்தன என்றால் மிகையாகாது..! 70 தொடக்கங்களில் கல்வீடு வந்தது..! நான் தவழும் காலத்தில் கல்வீடு வந்தது. இருந்தாலும் விளக்குகள் இருந்தன. வீட்டின் ஒரு பகுதியில் வெங்காயக் கட்டுகள் தொங்கிக்கொண்டிருந்தன. இன்னோர் பகுதியில் பூசனிக்காய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அம்மா, அப்பா,...
கருத்துகள்
கருத்துரையிடுக