இடுகைகள்

செப்டம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விதியை வீதியில் மதி

வீதியில் போகின்றவன் எல்லாம் தலை விதியே என்றால் நினைத்த மாதிரியே செல்லுங்கள்… முயன்றால் கொஞ்சமாவது நன்மையை மற்றோருக்கு செய்யலாம்  என்று நம்புவர்கள் மாத்திரம் மேற்கொண்டு இதை படிக்கவும். தேவையின்றி வாகனத்தை வீதியில் இறக்காதீர்கள்.. தலைக்கவசம் மாட்டிச் செல்லுங்கள்.. கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில் செல்லுங்கள்.. வாகனத்தில் செல்கையில் போட்டி போடாதீர்கள்.. இயலாதவர்களும், சிறுவர்களும், முதியோரும் வீதிகளில் செல்லலாம். ஒவ்வொரு உயிரையும் உயர்வாய் எண்ணுங்கள்.. யாரையும் மோதிக் காயங்களை ஏற்படுத்தாதீர்கள்… வாகனத்தில் ஏறியபின் கைபேசியை கவனத்தில் எடுக்காதீர்கள்.. கவனம் முழுவதையும் வீதியிலே வையுங்கள்… உறவுகளை அநாதைகளாக்க அதிகூடிய வேகத்தில் செல்வோருக்கும் இயலுமாயின் அறிவுறுத்துங்கள்… உண்மையான வாழ்க்கை மற்றோரின் நன்மைக்கான வாழ்க்கையே…! 09-09-2016                                                 ஆ . கெ . கோ

அழகைத்தேடியவன் அநாதையானான்…

அழகே என்றான்.. தன்னவள் என்றான். கடந்து போய் இன்னொன்றைப் பார்த்தான். அது தான் மெய்யழகென்றான்.. நாட்கள் நகர அதையும் விட்டான். மிகவழகு என மீண்டும் ஒன்றைப் பிடித்தான். சந்தோசமாக வாழ்வான் என  நோக்கின்…! அதையும் தாண்டினான்…? அதையும்விட அதையும்விட அதையும்விட என்று அலைந்தவனை அனைவரும் விட்டுவிட்டனர் அநாதையாக…! ஆற்றொனா நோயுடன்   ஆதரவற்றே இருக்கின்றான்... அறிவிருந்தும் அழகைத்தேடி  அனைத்தையும் இழந்துவிட்டான்… 08-09-2016                                                 ஆ . கெ . கோ

ஒரே பார்வை....

படம்
எண்ணங்கள் ஒன்றாக.. உணர்வுகள் ஒன்றாக.. உறவுகள் ஒன்றாக.. பார்வைகள் ஒன்றாகின திருமண பந்தத்தால்....! 2001                                                     ஆ.கெ.கோ

கடவுளே எனக்கு இயற்கை தான்...!

உயிர்களே இயற்கை.. உறவுகளே இயற்கை.. சூரியனே இயற்கை.. பூமியே இயற்கை.. சந்திரனே இயற்கை.. கோள்களே இயற்கை.. கடலே இயற்கை.. காற்றே இயற்கை.. நோயே இயற்கை.. மருந்தே இயற்கை.. உயிர்ப்பே இயற்கை.. அழிவே இயற்கை.. யாவும் இயற்கை.. உடலும் இயற்கை.. கடவுளே எனக்கு இயற்கை தான்....! கண்ணுண்டு பார்ப்பதற்கு.. வாயுண்டு கதைப்பதற்கு.. காதுண்டு கேட்பதற்கு.. மூக்குண்டு நுகர்வதற்கு.. நாக்குண்டு ருசிப்பதற்கு.. தோலுண்டு உணர்வதற்கு.. கடவுளே எனக்கு இயற்கை தான்…! உறவுகளோடு வீட்டில்.. சுற்றத்தோடு ஊரில்.. இனங்களுடன் நாட்டில்.. உயிர்களுடன் உலகில்.. ஆவியாக அண்டத்தில்.. கடவுளே எனக்கு இயற்கை தான்…! நண்பர்கள் சில வீட்டில்.. நண்பர்கள் சில ஊரில்.. நண்பர்கள் சில அலுவலகத்தில்.. நண்பர்கள் சில நாட்டில்.. நண்பர்கள் சில உலகில்.. கடவுளே எனக்கு இயற்கை தான்...! மூச்சுக்கு காற்றுண்டு.. நிற்பதற்கு தரையுண்டு.. குடிப்பதற்கு நீருண்டு.. எல்லையாய் வானுண்டு.. கடவுளே எனக்கு இயற்கை தான்...!. கஷ்டப்பட்டது கொஞ்சம்.. உவகைப்பட்டது கொஞ்சம்.. சோர்ந்து இருந்தது க...

நிரந்தரத்தலைவர்கள்...

படித்தவன் எல்லாம் தலைவனும் இல்லை படிக்காதவன் எல்லாம் தோற்றவனும் இல்லை யாரும் தலைவனாக வருவதும் இல்லை சதிகள் மூலம் வந்தாலும் சரித்திரமாவதில்லை விதிகள் தெரிந்தவன்   எல்லாம் சட்டங்கள் கதைக்கலாம் தலைவன் ஆவது மட்டும் காலத்தின் கையில் தான் ...? அன்பும் கருணையும் உள்ளவனே நல்ல தலைவன்... உண்மையும் அறிவும் சேருமாயின் சிறந்த தலைவன்... இவற்றுடன்  சமூக அக்கறையும் உள்ளவனே நிரந்தரத்தலைவன்…! உண்மையான தலைவன்…! காலங்களாலும், வேசங்களாலும் வெளிப்படும் தலைவன் நீடிக்க வேண்டுமாயின்  நிரந்தரத்தலைவனுக்குரிய தகுதிகளை  வளர்த்தெடுக்க வேண்டும்… தற்காலிக வெற்றிகளைச் சரித்திரங்கள் மறந்துவிடும். நீடித்த வெற்றிகளை இறைவனின் ஆசியுள்ளவர்களே பெறமுடியும்… நிரந்தரத்தலைவர்கள்  இறைவனின் ஆசிபெற்றவர்களே…!!! 05-09-2016                                                 ஆ . கெ . கோ

சொல் சன்னங்கள்

படம்
வார்த்தைகள், வரைமுறை  தாண்டியதால் சொற்கள் சன்னங்களாக மாறிவிட்டது. அளவான பிரயோகத்தினால் மட்டுமே அன்பைக்  காயத்துடன்  ஆவது காப்பாற்ற முடியும்… 1998                                                 ஆ.கெ.கோ

தாய்

முந்நூறு நாட்கள் மடியினில் சுமந்து முத்தாய் என்னை உலகிற்குக் காட்டி முறியா அன்பை பாலுடன் புகட்டி முதிசமாய் முத்தங்கள் கொட்டும் ஜீவன்..! பசிகண்ட வயிற்றிற்கு பதமாய் உணவிட்டு பிணிகண்டவுடனே விரைந்து போக்கி நிறைகண்ட வாழ்க்கைக்கு கல்விதனை ஊட்டி இனங்கண்டு என்னைப்பாங்காய் வளர்த்த ஜீவன்...! துன்பங்கள் தனை மறைத்துக்கொண்டு எண்ணங்கள் தனை நெஞ்சில் நிறுத்தி பிள்ளையின் பெருமையை நாடு போற்ற ஆவலுடன் காத்திருக்கும் அருமை ஜீவன்...! 1995                                                                      ஆ.கெ.கோ

நவீன வண்டு...

படம்