அழகைத்தேடியவன் அநாதையானான்…
அழகே என்றான்..
தன்னவள் என்றான்.
கடந்து போய்
இன்னொன்றைப் பார்த்தான்.
அது தான் மெய்யழகென்றான்..
நாட்கள் நகர
அதையும் விட்டான்.
மிகவழகு என மீண்டும் ஒன்றைப் பிடித்தான்.
சந்தோசமாக வாழ்வான்
என நோக்கின்…!
அதையும் தாண்டினான்…?
அதையும்விட அதையும்விட அதையும்விட
என்று அலைந்தவனை
அனைவரும் விட்டுவிட்டனர் அநாதையாக…!
ஆற்றொனா நோயுடன்
ஆதரவற்றே
இருக்கின்றான்...
அறிவிருந்தும் அழகைத்தேடி
அனைத்தையும் இழந்துவிட்டான்…
08-09-2016
ஆ . கெ . கோ
கருத்துகள்
கருத்துரையிடுக