விதியை வீதியில் மதி

வீதியில் போகின்றவன்
எல்லாம் தலை விதியே
என்றால் நினைத்த மாதிரியே
செல்லுங்கள்…

முயன்றால் கொஞ்சமாவது
நன்மையை மற்றோருக்கு
செய்யலாம்  என்று
நம்புவர்கள் மாத்திரம்
மேற்கொண்டு இதை படிக்கவும்.

தேவையின்றி வாகனத்தை
வீதியில் இறக்காதீர்கள்..
தலைக்கவசம் மாட்டிச்
செல்லுங்கள்..
கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில்
செல்லுங்கள்..
வாகனத்தில் செல்கையில் போட்டி
போடாதீர்கள்..
இயலாதவர்களும், சிறுவர்களும், முதியோரும்
வீதிகளில் செல்லலாம்.

ஒவ்வொரு உயிரையும் உயர்வாய்
எண்ணுங்கள்..
யாரையும் மோதிக் காயங்களை
ஏற்படுத்தாதீர்கள்…
வாகனத்தில் ஏறியபின் கைபேசியை
கவனத்தில் எடுக்காதீர்கள்..
கவனம் முழுவதையும் வீதியிலே
வையுங்கள்…
உறவுகளை அநாதைகளாக்க
அதிகூடிய வேகத்தில் செல்வோருக்கும்
இயலுமாயின் அறிவுறுத்துங்கள்…
உண்மையான வாழ்க்கை
மற்றோரின் நன்மைக்கான வாழ்க்கையே…!

09-09-2016                                                 ஆ . கெ . கோ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!