தாய்
முந்நூறு நாட்கள் மடியினில் சுமந்து
முத்தாய் என்னை உலகிற்குக் காட்டி
முறியா அன்பை பாலுடன் புகட்டி
முதிசமாய் முத்தங்கள் கொட்டும் ஜீவன்..!
பசிகண்ட வயிற்றிற்கு பதமாய் உணவிட்டு
பிணிகண்டவுடனே விரைந்து போக்கி
நிறைகண்ட வாழ்க்கைக்கு கல்விதனை ஊட்டி
இனங்கண்டு என்னைப்பாங்காய் வளர்த்த ஜீவன்...!
துன்பங்கள் தனை மறைத்துக்கொண்டு
எண்ணங்கள் தனை நெஞ்சில் நிறுத்தி
பிள்ளையின் பெருமையை நாடு போற்ற
ஆவலுடன் காத்திருக்கும் அருமை ஜீவன்...!
1995 ஆ.கெ.கோ
முத்தாய் என்னை உலகிற்குக் காட்டி
முறியா அன்பை பாலுடன் புகட்டி
முதிசமாய் முத்தங்கள் கொட்டும் ஜீவன்..!
பசிகண்ட வயிற்றிற்கு பதமாய் உணவிட்டு
பிணிகண்டவுடனே விரைந்து போக்கி
நிறைகண்ட வாழ்க்கைக்கு கல்விதனை ஊட்டி
இனங்கண்டு என்னைப்பாங்காய் வளர்த்த ஜீவன்...!
துன்பங்கள் தனை மறைத்துக்கொண்டு
எண்ணங்கள் தனை நெஞ்சில் நிறுத்தி
பிள்ளையின் பெருமையை நாடு போற்ற
ஆவலுடன் காத்திருக்கும் அருமை ஜீவன்...!
1995 ஆ.கெ.கோ
கருத்துகள்
கருத்துரையிடுக