கடவுளே எனக்கு இயற்கை தான்...!
உயிர்களே இயற்கை..
உறவுகளே இயற்கை..
சூரியனே இயற்கை..
பூமியே இயற்கை..
சந்திரனே இயற்கை..
கோள்களே இயற்கை..
கடலே இயற்கை..
காற்றே இயற்கை..
நோயே இயற்கை..
மருந்தே இயற்கை..
உயிர்ப்பே இயற்கை..
அழிவே இயற்கை..
யாவும் இயற்கை..
உடலும் இயற்கை..
கடவுளே எனக்கு இயற்கை தான்....!
கண்ணுண்டு பார்ப்பதற்கு..
வாயுண்டு கதைப்பதற்கு..
காதுண்டு கேட்பதற்கு..
மூக்குண்டு நுகர்வதற்கு..
நாக்குண்டு ருசிப்பதற்கு..
தோலுண்டு உணர்வதற்கு..
கடவுளே எனக்கு இயற்கை தான்…!
உறவுகளோடு வீட்டில்..
சுற்றத்தோடு ஊரில்..
இனங்களுடன் நாட்டில்..
உயிர்களுடன் உலகில்..
ஆவியாக அண்டத்தில்..
கடவுளே எனக்கு இயற்கை தான்…!
நண்பர்கள் சில வீட்டில்..
நண்பர்கள் சில ஊரில்..
நண்பர்கள் சில அலுவலகத்தில்..
நண்பர்கள் சில நாட்டில்..
நண்பர்கள் சில உலகில்..
கடவுளே எனக்கு இயற்கை தான்...!
மூச்சுக்கு காற்றுண்டு..
நிற்பதற்கு தரையுண்டு..
குடிப்பதற்கு நீருண்டு..
எல்லையாய் வானுண்டு..
கடவுளே எனக்கு இயற்கை தான்...!.
கஷ்டப்பட்டது கொஞ்சம்..
உவகைப்பட்டது கொஞ்சம்..
சோர்ந்து இருந்தது கொஞ்சம்..
மூன்றும் கலந்தது கொஞ்சம்..
கடவுளே எனக்கு இயற்கை தான்....!
கொஞ்சக்காலம் வெப்பம்..
கொஞ்சக்காலம் குளிர்..
கொஞ்சக்காலம் இதம்..
கொஞ்சக்காலம் மழை..
கடவுளே எனக்கு இயற்கை தான்....!
குளிரில் வெப்பம் வேண்டும்..
வெப்பத்தில் குளிர் வேண்டும்..
துன்பத்தில் இன்பம் வேண்டும்..
இன்பத்தில் துன்பம் வேண்டும்..
எப்போதும் கடவுள் வேண்டும்..
கடவுளே எனக்கு இயற்கை தான்....!
06-09-2016
ஆ . கெ . கோ
கருத்துகள்
கருத்துரையிடுக