நிரந்தரத்தலைவர்கள்...
படித்தவன் எல்லாம் தலைவனும் இல்லை
படிக்காதவன் எல்லாம் தோற்றவனும் இல்லை
யாரும் தலைவனாக வருவதும் இல்லை
சதிகள் மூலம் வந்தாலும் சரித்திரமாவதில்லை
விதிகள் தெரிந்தவன் எல்லாம் சட்டங்கள் கதைக்கலாம்
தலைவன் ஆவது மட்டும் காலத்தின் கையில் தான்...?
அன்பும் கருணையும் உள்ளவனே நல்ல தலைவன்...
உண்மையும் அறிவும் சேருமாயின் சிறந்த தலைவன்...
இவற்றுடன்
சமூக அக்கறையும் உள்ளவனே நிரந்தரத்தலைவன்…!
உண்மையான தலைவன்…!
காலங்களாலும், வேசங்களாலும்
வெளிப்படும் தலைவன்
நீடிக்க வேண்டுமாயின்
நிரந்தரத்தலைவனுக்குரிய தகுதிகளை
வளர்த்தெடுக்க வேண்டும்…
தற்காலிக வெற்றிகளைச் சரித்திரங்கள் மறந்துவிடும்.
நீடித்த வெற்றிகளை இறைவனின் ஆசியுள்ளவர்களே பெறமுடியும்…
நிரந்தரத்தலைவர்கள் இறைவனின் ஆசிபெற்றவர்களே…!!!
05-09-2016 ஆ
. கெ . கோ
கருத்துகள்
கருத்துரையிடுக