பயனுள்ள லீவு..!
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மதியம் போகத்திட்டமிட, காலையில் தலைமையக ஒன்லைன் கூட்டம் மதியம் இருப்பதாகச் செய்தி, வர திட்டம் இவ்வாறு மாற்றப்பட்டது..! “ஒன்லைன் கூட்டம் முடித்த பின்னர் போகலமென்று..! ” வழமையைவிட இந்தக்கூட்டம் 30 நிமிடங்களில் முடிந்துவிட்டது..! உடனே மதிய உணவை எடுத்துவிட்டு, கடந்த வாரம் போல இந்தவாரமும் சில ரொட்டிகளுக்கு ஓடர் கொடுத்துவிட்டு, சில அலுவலகக் கடமைகளைச் செய்துமுடித்த பின்னர் 2.30 மணி பஸ்ஸைப்பிடிக்க பஸ் தரிப்பிடத்திற்கு சென்றேன். போகும் போது ஓடர்கொடுத்த ரொட்டிகளையும் பெற்றுக்கொண்டேன். பஸ் 3.00 மணிக்கு கிட்டவாக வந்தது. கூட்டம் அதிகமாக இருந்தது. நின்று போக முடிவுசெய்து கொஞ்ச நேரம் நிற்க, மொரெவாவ பகுதியில் ஒருவர் இறங்க, சீற் கிடைத்தது..! இறைவனுக்கு நன்றி சொல்லியபடி பயணத்தைத் தொடர்ந்தேன். இறுதியாக வீடுவந்து சேர இரவு 8.00 மணியாகிவிட்டது. மனைவி பிள்ளைகளைச் சந்தித்துக்கதைத்துவிட்டு, பின்னர் குளித்து, இரவு உணவை முடித்து படுக்கைக்குப் போக இரவு 12.30 தாண்டிவிட்டது. திருகோணமலையில் இரவு 10.00 மணிக்கு முதலே படுத்துவிடுவேன். அதேபோல் காலை ஏறக...