சபாநாயகன்..!



2024 பிறந்த பிறகு ஒரு படம் பார்க்க நேரம் ஒதுக்க முடியாமல் சூழல் அமைந்துவிட்டது..! இருந்தாலும் இந்த முறை இணையத்தில் இருந்து நேரடியாக ஒரு திரைப்படத்தை பதிவிறக்கம் செய்து இரண்டு நாட்களாகப் பார்த்து முடித்தேன். அந்தப்படம் தான் சபாநாயகன்..! பார்க்கும் போது படம் போரடிக்காமல் சென்றது. இருந்தாலும் படத்தில் புதுமைகள் தென்படவில்லை. நாயகனுடன் மூன்றுக்கு மேற்பட்ட நாயகிகள் வந்து படத்தின் கதையை குழப்பியது போன்ற ஒரு நிலை வந்துவிட்டது..! கடைசியில் வந்த சில காட்சிகளைத் திரும்பத் திரும்பத் பார்த்தால் ஒழிய கதையைப் புரிவது கடினம்.   ஒருவன், பாடசாலையில் பார்த்த முதல் காதலை எப்படி நிஜமாக்குகின்றார் என்ற ஒருவரிக் கதையைக் கூற மூன்று நாயகிகள் பல நாயகர்கள் என அங்கும் இங்கும் பயணித்து, கடைசியில்  ஹீரோவுடன் ஹீரோயின் சேருவதாக கதையை முடித்து, வழமையான பார்வையாளர்களை நோகடிக்காமல் கதை முற்றுகின்றது. இந்தநிலையில், கதையின் இடையில் ஒரு பொலிஸ் அதிகாரியின்  காதல் உடைக்கப்பட்டு, ஆத்மார்த்தமான காதலியைத்தேடி (Soulmate) அவர் அலையவிடப்பட்டுள்ளார்..! சந்தர்ப்பத்தால் உருவான காதலை, இன்னொரு தொகுதி மனிதர்களால் புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்ட சந்தர்ப்பத்தின் மூலம் பிரித்து,  காதலிக்கு ஆரம்ப பாடசாலைக்காதலை உணர வைக்கின்றது கதை..!

அசோக்செல்வன், கார்த்திகா முரளிதரன்,  சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ்  என மூன்று நாயகிகள் நடித்துள்ளார்கள். நாயகனுடன் கூட நண்பர்களாக நடித்தவர்கள் நன்றாக நடித்துள்ளார்கள். சி.எஸ். கார்த்திகேயன் என்பவர் கதையெழுதி இயக்கியுள்ளார். படத்தை எதிர்பார்ப்பில்லாமல் சும்மா பார்க்கலாம்.  உண்மையான காதலைத் தேடி போகச்சொல்வதே கதையின் கரு..! இதனை நடைமுறையில் சிந்தித்தால், உலகே அழியவேண்டியது தான். எந்தச்சூழலையும் சமாளித்து வாழ்வதே வாழ்க்கை. அந்த வாழ்க்கை மற்றவர்களுக்கும் பயன்பட்டால் அது தான் சிறந்த வாழ்க்கை. இங்கு சொல்லப்படுவது, பிடிக்காவிட்டால் விட்டுவிட்டுப் பிடித்தவரைத் தேடுவதே சந்தோசமான வாழ்க்கை..!

 


ஆ.கே.கோகிலன்

31-03-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!