மேலாடை
புகழ்பெற்ற கோவில்கள் சில தடைபோட்டது ஆண்களுக்கு மேலாடையுடன் உட்செல்ல…! நல்லது… பெயரே தெரியாத கோவில்கள் பல எப்படியாவது சனம் வந்தாலே போதும் எனத் தடைகளைத் தகர்த்துவிட்டது…! கோவில்களில் தீபந்தங்கள் போய் மின்பந்தங்கள் வந்தாகிவிட்டது…! அடியார்கள் சுமந்த சுவாமி, மோட்டார் வாகனத்தில் நகருலா போகின்றார்… கொப்பியும் பேணாவும் போய் கணினியும், கைபேசியும் தேவையாகிவிட்டது.. நடைப்பயணங்கள் போய் வாகனப்பயணங்கள் வரையறையற்று வந்துவிட்டது… கூழையும் களியையும், பிட்சாவும் பர்கரும் தொலைத்துவிட்டது… உறவுகள் தொலைந்த உதிர்ந்த வாழ்கை, சிறந்த வாழ்க்கையாகிவிட்டது… மெதுவாக நகர்ந்த வாழ்க்கை, பர பர என பறந்த வாழ்க்கையாகி விட்டது.. மாற்றங்கள் இப்படி வரும் போது….? பழையதை அப்படியே ஏற்பதா..? மாற்றங்களூடாக ஏற்பதா..? பிறநாட்டவர் ஒருவர் ஆண்களின் அரைநிர்வாணக் கோலத்தைப் பார்த்து ஆண்கள் கவர்ச்சி காட்டும் மையமா கோவில்…? எனக்கேட்டார்… சிந்தித்துபார்த்தேன்… என்னறிவுக்குத் தோன்றியவை இதோ… ஆணாதிக்க சமுதாய வெளிப்பாடே அரைநிர்வாணம்… ...