உலகப்புகழ் சொற்பொழிவாளர் நேத்திரனின் சுயசரிதை( சுயசொற்தூறல்) …!



இரண்டு பெண்பிள்ளைகளுடன் இன்னோர்
ஆண்பிள்ளைக்கு ஆசைப்பாட்டார்கள் என் தாய் தந்தையர்….!
ஆசை நிறைவேறி சிசுவாக நானும் வெளிவரவேண்டிய நாள் வந்தது..
வெளிச்சத்தைப் பார்க்க தாயின்  கருவறையை விட்டு வெளியே வந்தேன்…
கண்ணைத்திறக்க முடியவில்லை.. அழுதழுதும் முயன்றேன் முடியவில்லை…


“ஏன் அம்மா எங்களுக்கு குருட்டுத் தம்பி பிறந்தான்…?  ” அக்காக்கள் கேட்க.
“அப்படிச்சொல்லாதேங்கோ….தம்பி என்றுசொல்லுங்கோ…” என்றாள் அம்மா...!
“மற்றவைகளுக்கு நல்ல தம்பி இருக்க.. ஏன் எங்களுக்கு இப்படி…?? ”எனத் தொடர்ந்தும் கேட்க.. 
“துணைக்கு ஒரு ஆண்பிள்ளை  வேண்டும் என்று தவம் இருந்தோம்
 பதிலாய் இறைவன் தந்தான் இந்தத் தம்பியை
அவனுக்கு கண்ணாய் நாங்களே இருப்போம்…” அம்மா கூற
அக்காக்கள் இருவரும் கனிவாய் பார்த்தார்கள்  என்னை….!
மெதுவாகத் தொட்டார்கள்…!
அன்பாகக் கொஞ்சினார்கள்…! 
தொடர்ந்தும் எனது பார்வையாய் இருக்கின்றார்கள்…!


யாரும் என்னை குருடன் என்றால் அவர்களுக்குப் பிடிக்காது.
நேத்திரன் என்று அவன் பெயரைச்சொல்லுங்கோ என்பார்கள்..!
மொழியிலும் சமயத்திலும் தேர்ச்சிபெற்று
சமய சொற்பொழிவை எனது ஊர் கோவிலிலே தொடங்கி
இன்று,  நாடு கடந்தும் சொற்பொழிவை ஆற்றுகின்றேன்…!
உதவியாளருடன், கணினியும் என்னோடு கண்ணாக மாற
மெய்யாகவும், மெய்நிகராகவும்  தொடர்கின்றேன் சேவையை உலகமெங்கும்…!


வாய்வழிச் சுவையோடு மகாபாரதமும், இராமாயாணமும் கேட்க
கூட்டம் எனக்கு தொடர்பறா சேவையிலும் கூட  உண்டு..!
உங்களை நான் காண இறைவன் வாய்ப்பளிக்கவில்லை…!
வாய்ப்பளித்துள்ளான் நீங்கள் என்னைக் காண... !
மனத்தை வலுப்படுத்தும் அன்பை வழங்கினால்..
ஊனமும் வலுவற்றுப்போகும் என்பதற்கு 
நானும் ஓர் எடுத்துக்காட்டு…! 

(யாவும் கற்பனையே…)
                                                                                                                             -ஆ.கெ.கோ-

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!