நடப்பது, நடக்க வேண்டிய நேரத்தில் தான், நடக்கும்...

எங்கள் வீட்டு ஆழ் கிணற்றில் தவறியோ அல்லது விரும்பியோ 
விழுந்த சேவல்,
கூவுகின்றது 
தனது மரணத்தை உலகிற்கு அறிவிக்க…

வீட்டில் உள்ளோர் முயன்றனர் அதனை காப்பாற்றி வெளியே எடுக்க..!
அடம்பிடித்து மறுத்தது அது, வெளியே வர…

நாள் ஒன்று சென்றது 
நானும் தூரப் பயணம் செய்து திரும்பியிருந்தேன்..
பாவம் அதனை 
எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என கடும் 
முயற்சியையும் இவ்வாறு எடுத்தேன்
கிணற்று வாளியை மாற்றினேன்…
பிளஸ்டிக் வாளியையும் போட்டுப் பார்த்தேன்…
பயன் ஒன்றும் இல்லை.
அடம்பிடித்தது உதவியை ஏற்க...
அப்படியே விட மனமில்லை.
மீண்டும் முயன்றேன்.
வாளியில் பலகை கட்டி இறக்கிப்பார்தேன்…
ம் …ம்... ஒன்றும் நடக்கவில்லை.
இறுதியாக,
சாமான்கள் வாங்கும் பெரிய கூடையை 
இறக்கிறேன்…
அது, அதனுள் இறங்க மறுப்பதற்குரிய 
உறுதியை இழக்கவில்லை…
களைத்த 
நான் இழந்துவிட்டேன் 
அதனைக் காப்பாற்ற வேண்டும் என்ற
எனது உறுதியை…!
இருப்பினும் 
கிணற்றினுள் கூடையை அப்படியே விட்டுவிட்டேன்…
மழை வேறு தொடர்ந்து என்னை வீட்டின் உள்ளே வைத்திருந்தது..

நாள் இரண்டும் சென்றது.
“என் வீட்டுக் கிணற்றில் தான் அதன் இறுதிக் கிரிகை”
என்ற நினைப்பில் கிடந்த போது,
மூன்றாம் நாளும் வந்தது.
கூடை நாறும் தண்ணியில் என்று, 
கூடையை கிணற்றில் இருந்து
எடுக்க நானும் முனைந்தேன்..
என்ன ஆச்சரியம்...…! 
கோழியும் கூட, கூடையுடன்
தோற்றிக்கொண்டது...!
அது விரும்பியோ அல்லது விரும்பாமலோ
தோற்றிக்கொண்டது...
காரணம்  நான் அறியேன்.

மிகக் கவனமாய் வெளியே
எடுத்து, அதற்கு உணவும் அளித்தேன்..
மகளும் உணவை அதற்கு கொடுத்தாள்..
எங்களின் வீடே தன்னுடையது
என வாழுகின்றது…

இனி, யார் கேட்டு வந்தாலும் 
அதனைக் கொடுக்க மனம்  இன்னும் எனக்கு இல்லை.
அப்படி வந்தால்,
அக்கறையற்ற உங்களுக்கு அது ஏன்...?
என்று நிச்சயம் அவர்களிடம் கேட்பேன்..

நடந்த ஆச்சரியம் ஒன்றை மட்டும்
எனக்கு உணர்த்தியது.
அது,
எப்பெப்ப எது நடக்க வேண்டுமோ
அப்பப்ப அது நடக்கும்.
என்ற உலக உண்மையை....!

20-10-2007

(உண்மைச் சம்பவம்)                                                           ஆ.கெ.கோ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!