இன்னும் காத்திருக்கின்றாள்…
அவள்
அவனில் அன்பைக் கறக்க
காத்திருக்கின்றாள்…
20 வருடங்களாக
காத்திருக்கின்றாள்…
அழகைக் கலைக்காமல்
எண்ணத்தில் குமரியாய்
வசந்தத்தை நோக்கி
ஆவலுடன் காத்திருக்கின்றாள்….
அவளது ஜென்மக்காதலனும்
ஏமாற்றவில்லை
அவளின் காதலை
ஏற்றான்…
கலந்தான்…
ஆனால்…
விநாடியில் பிரிந்தான்
அவனின்
எதிர்காலத்தை முன்னிட்டு…!
விளைவாய்
இன்னொருவனும்
வந்தான்…
வளர்ந்து கொண்டும்
இருக்கின்றான்…
ஆனால் அவளோ
விநாடியில் பிரிந்த
அவனுக்காக
மிண்டும்
காத்திருக்கின்றாள்…
அவன்
நிச்சயம் வருவான்…
தன்னை இவ்வுலகத்திலிருந்து
விடுவிப்பான்
என்ற
நம்பிக்கையில்
இன்னும்
காத்திருக்கின்றாள்…
உலகம்
அழிந்தாலும்
கடவுள்
கைவிட்டாலும்
காதலன் கைவிடான்
என்ற நம்பிக்கையில்….
காதல் நாத்தீகர்களுக்கு
மத்தியில்
காத்துக்கொண்டே
இருக்கின்றாள்….
-ஆ.கெ.கோ-
கருத்துகள்
கருத்துரையிடுக