வெள்ளை நிறம்



வெள்ளையாய் நானிருக்கவில்லை
சுற்றியுள்ளவர்களும் வெள்ளையாய் இல்லை
வெள்ளைநிற காதலியும் வரவில்லை
மனைவி கூட வௌ்ளையாய் கிடைக்கவில்லை
பிள்ளைகளும் வெள்ளையாய்  இல்லை
இப்படி ஏமாற்றி  வேதனையளித்த வௌ்ளை
இப்போது அதிகமாய் வருகிறது 
தலையில் நரை முடிகளாய்...!
இப்போது  வந்தும் வேதனைப்படுத்துகின்றது
முதுமைக்கு விரைவாக  என்னை அழைப்பதால்.... 


                                                                                                   -ஆ.கெ.கோ-




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!