காகிதச் சங்கிலிகள்….
காலம் என்னும் வண்டியில்
வயதுகள் பறந்தோட
சின்ன வயதிலே
சிந்தனைகளை சிதறவிட்டு
தொலைந்துபோன கல்லறைகளில்
தூய காதலைத் தேடி
தங்கள் மனதை பிரியவரிடம்
தொலைத்து விட்டு
காவியமும் ஆகாமல்
வெற்றியையும் பெறாமல்
இறைவன் தோட்டத்து
பசளையாக மாற ஏன்
முயல்கின்றார்கள் இவர்கள்...?
ஆம், காதலின் கவர்ச்சியில்
கவலைகள் தாங்கி
காகிதங்கள் தான்
விரயமாகின்றன…!
காதலின் காமம்
கர்ப்பம்வரை போய்விட
காரணமற்ற செயல்கள்
பிரியவர் மேல் வெறுப்பை
ஏற்படுத்த,
ஆழமற்ற அன்பின்
உறுதியற்ற பிணைப்பால்
காகிதச் சங்கிலிகள் போல்
காண்பவர் கண்களை
காவியம் பாட வைக்கும்...!
25-02-1994 ஆ.கெ.கோ
கருத்துகள்
கருத்துரையிடுக