விடுமுறை நாட்களில் அலுவலகத்தில் நின்ற அனுபவங்கள்..!
ஏறக்குறைய 6 வருடங்களுக்கு மேலாக பணிப்பாளராக இருந்த போதிலும், ஊழியர்கள் சமூகமளிக்காத சந்தர்ப்பங்களில் நான் வேலை செய்வது இல்லை. பொதுவாக எனது அலுவலகக் கடமை என்பது அரசு சொல்கின்ற விதிகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். உதாரணத்திற்கு 8.00 மணிக்கு ஒரு நிகழ்வு என்றால் நான் 8.00 மணிக்கு அந்த நிகழ்வில் இருக்கக்கூடிய வகையிலே திட்டங்களை மேற்கொள்வேன். அலுவலக நேரம் முடிந்தால் உடனே வீடு சென்றுவிடுவேன். அங்கும் எனக்கான வேலைகள் இருக்கும். அதனைச் செய்யாவிட்டாலும் எனது தலையே உருளும்..! யாரும் என்னை உருட்ட முடியாது. ஆனால் நானே என்னை உருட்டுவேன். நான் மற்றவர்களுக்குப் பயப்படுவதைவிட, எனக்குக் கூடப்பயப்படுவேன்..! இறைவன் எனக்குள் இருக்கின்றார் என்ற பெரு நம்பிக்கை வந்து நிறைய ஆண்டுகள் கடந்துவிட்டன..! அதேபோல் இறைவன் எல்லோருக்குள்ளும் இருக்கின்றார் என்பதும் தெரியும். அதனைப் புரிந்தால் உங்கள் வாழ்க்கை வேறுமாதிரியாக இருக்கும் என்பது நான் கண்ட உண்மை. கஷ்டங்கள் இருந்தாலும் வாழ்வில் ஒரு முழுமை கிடைக்கும். இப்படியான கொள்கைகளுடன் இருக்கும்போது, ஏப்பிரல் 6 மற்றும் 7 ஆம் திகதிகள் வேலைசெய்து...