முதலும் நீ முடிவும் நீ..!

 


 


கிஷேன் தாஸ் என்ற யூடியூப்பர் உட்பட பல புதுமுகங்கள் நடித்த இந்தப்படத்தைப் பார்த்ததற்கு முதல் காரணம், குட்நைட் படத்தில் நடித்த மீதா ரகுநாத் என்ற நடிகையின் முதல் படம்  இதுவென்பதால்..!

ஆனால் நினைத்ததைவிடப் படம் சிறப்பாகவும் தரமாகவும் எனக்குத் தெரிந்தது. குறைந்த செலவில் எடுக்கப்பட்டாலும், வித்தியாசமாக கொண்டு சென்றுள்ளார்கள். 12பி படத்தைப்போல், இப்படிப் போனால் இப்படியாகும்..என்பதைச் சொல்லி எப்படிப் போகவேண்டும் என்பதைக்காட்டிய படம்..! தீர்மானங்கள் படத்தில் வேண்டும் என்றால் இயக்குனர் நினைத்தபடி மாற்றிக்கொள்ளலாம்..! நிஜவாழ்வில்  ஒன்றும் செய்ய முடியாது. சிலர் தமது முடிவுகள் தரும் வெற்றியால் தாம் சரியான பாதையில் செல்வதாக நினைக்கலாம். அது சரியாகவும் இருக்கலாம். தவறவும் இருக்க வாய்ப்புக்கள் உண்டு..! சிலர் தொடர்தோல்விகளால், துவண்ட வலிகளை உணர்ந்து, நடப்பதை ஏற்கும் பக்குவத்தை அடைந்திருக்கலாம். நல்லதோ கெட்டதோ ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள். இந்த இரண்டு நிலையிலும் அடங்காக பிரிவினரும் சாதாரண வாழ்க்கையில் பயணிப்பார்கள். வெற்றி சிலருக்கு நினைத்த மாதிரியே கிடைத்திருக்கும். சிலருக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும், நிறைவான நிம்மதியான வாழ்க்கை கிடைத்திருக்கும்.

கிடைத்ததை வைத்து திருப்தியடைந்து வாழ்ந்தால், வாழ்வு நன்றாக இருக்கும்.

பாடசாலை வாழ்க்கையையும், அங்கு இருந்த தொடர்புகளையும், சில காலங்களுக்குப் பிறகு எப்படி மாறுகின்றன என்பதை இருவேறு வடிவங்களில், ஒன்று கற்பனை போன்றும், ஒன்று நிஜம் போலவும் காட்டி, ஒரு தீர்வை காதலுக்கு நடித்துக் கொடுத்துள்ளார், இசையமைப்பாளரான இயக்குனர் தர்புகா சிவா. அதற்காக சில நெருக்கமான காட்சிகளையும் வைத்து, நவீன சமூகப்பிரச்சனைகளையும் நுழைத்து படத்தை ஒரு வலுவுள்ள படமாக மாற்றியுள்ளார்..! எனக்கும் படம் பிடித்திருந்தது. தொழில்நுட்பங்களும் தரம். இரண்டு காலகட்டங்களில் 3 விதமான கதைகள் நகர்கின்றன..!

ஒட்டுமொத்தமாக விரும்பிய பெண்ணை காலில் விழுந்தாவது கல்யாணம் செய்து, குழந்தையுடன் வாழ்வதே நிறைவானது என்றும், நினைத்த தொழிலைச் செய்யாவிட்டாலும், விரும்பியவரைக் கைப்பிடிப்பதே சிறந்தது என்ற உண்மையையும் உணர்த்தியுள்ளார் இயக்குனர்.

 


ஆ.கெ.கோகிலன்

26-04-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!