மிஷன் சாப்டர் 1..!
நீண்டகாலமாகப் போராடி தானும் ஒரு சிறந்த ஹீரோ என்பதை இந்தப்படத்திலும் அருண்விஜய் நிரூபித்துள்ளார்..!
படத்தில் கதை என்று பார்த்தால் விஜயகாந்த் காலத்துக்கதை..!
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலும், இந்தியாவிற்கும் உலகிற்கும் அச்சுறுத்தலை அவர்கள் ஏற்படுத்துவதும், அதற்காக வழமைபோல் குண்டுவெடிப்புக்களுக்குத்
திட்டங்கள் போடுவதும், அதற்கு எதிராக நிற்கும் அனைவரையும் அழிப்பதும் என வழமையான பாணிக்கதை
என்றாலும் படம் பார்க்க விறுவிறுப்பாக இருந்தது உண்மை.
அருண்விஜயின் மகளாக நடித்திருக்கும் இயல் என்ற சிறுமி அனைவர்
மனதையும் கொள்ளைகொள்கின்றார்..! எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சாஜயன் என்ற ஒரு மலையாள
நடிகையும் சிறப்பாக நடித்துள்ளார்கள். ஏனையவர்களின் நடிப்பும் நன்றாக இருந்தன.
அருண்விஜய் சில இடங்களில்
செய்யும் சாகசங்கள் யதார்த்தத்தை விட்டு தூர விலகியிருக்கின்றது. நான், ஆரம்பத்திலே
சொன்ன மாதிரி அனைத்தும் அவரே செய்யவேண்டும் என்ற வழமையான ஹீரோ போமுலாக் கதையாகப் பயணிப்பது,
கதையில் புதுமை குறைவாக இருக்கின்றது. இருந்தாலும் சில இடங்களில், ஹீரோ அடிக்கவேண்டும்
என எமக்குத் தோன்றுவது இயக்குனரின் வெற்றி..!
படம் முழுக்கக் காட்சிகளை விறு விறுப்பாக நகர்த்தியிருப்பது
ரசிக்க முடிகின்றது. லொஜிக் மீறல்களை அவதானிக்க நேரம் கொடுக்கவில்லை.
நடிகர்களின் பங்களிப்பும், ஏனைய தொழில்நுட்பக்கலைஞர்களின்
பங்களிப்பும் சிறப்பாக இருப்பதால் படத்தை ஒரு முறை யாரும் பார்க்கலாம்.
சில காட்சிகள் ஜெயிலர் படம் போல் இருந்தாலும், ஜெயிலர் போல்
இந்தப்படமும் பலரைக் கவர்ந்திருக்கும் என நம்புகின்றேன்.
பல நல்ல படங்களைக் கொடுத்த, ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.
லைக்கா சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அதனால் லண்டன் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன..!
வழமைபோல் மசாலாப் படம் என்றாலும் பலருக்குப் பிடிக்கக்கூடிய
வாய்ப்பு உண்டு.
ஆ.கெ.கோகிலன்
16-04-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக