ஜோ..!

 


மௌனராகம், ராஜா ராணி போன்ற படங்களின் வரிசையிலுள்ள படம்..!

80களில் ஏற்படுத்திய தாக்கமும்,  2000களில் ஏற்படுத்திய தாக்கமும் 2020களில் ஏற்படுத்திய தாக்கமும் எனக்கு ஒன்றாகவே தெரிகின்றது..! இந்த மூன்று படங்களையும் நான் வெவ்வேறு காலகட்டத்தில் ரசித்துப் பார்த்துள்ளேன்.

இரண்டு பக்கங்களிலும் காதல் வந்து காயத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது..!

காயப்பட்டவர்களை கட்டாயப்படுத்தி  கல்யாண பந்தத்திற்குள் தள்ள, கோபம், வெறுப்பு, பரிவு இறுதியில் அதற்குள் தேடிய காதல் முத்தாய் கிடைக்க, அனைவரும் மகிழ்ச்சி..! படமும் வெற்றி..!

இளைஞர்களின் தற்போதைய நிலை இது தான். ஈகோ பார்ப்பதும், பின்னர் துடிப்பதும், வெளித்தோற்றத்தைப் பார்த்து, காதலில் விழுந்து, உள்தோற்றம் கண்டு காதலையே வெறுப்பதையும் கணவன், மனைவியாக இருக்கும், இருவரும் கடந்து வந்துள்ளார்கள்..! காலம் அவர்களை இணைத்து, குடும்பங்களுக்கும், நட்புக்களுக்கும் ஏன் அவர்களுக்கும் நம்பிக்கையை கொடுக்கின்றது..!

மாநிலம் தாண்டிய காதல், அழகாகவும், அற்புதமாகவும் இருந்தது..! காதலில் ஏற்பட்ட களங்கம், காதலியைத் தற்கொலைவரை கூட்டிச்செல்ல, ஒரே குணம்கொண்ட காதலனும் தற்கொலைக்கு செல்ல, காலம் கூடக் காதலனின் நண்பன் ஒருவரையும் மருத்துவமனை வரை கூட்டிச்சென்று, இருவருக்கும் மறுவாழ்வைக் கொடுத்துள்ளது..!

இன்றைய காலத்தில், குறிப்பாக மைக்றோ குடும்பத்தில் ஒரு பிள்ளையே பிறக்கின்றது..! அதனை ஆசையாசையாய் வளர்த்து, தமது அனைத்து  ஆசைகளையும் தீர்க்க முனையும், பிள்ளைமேல் காதல் கொண்ட பெற்றோருக்கு, பிள்ளைகளின் தற்கொலைகள், அவர்களது வாழ்க்கையே புரட்டிப்போடுகின்றன..!

காதலிக்காகவும், காதலனுக்காகவும் பிள்ளைகள் சாக, பிள்ளைகளைத் தொலைத்ததற்காக பெற்றோர்களும் சாகவே முற்படுவார்கள்..! வாழ்க்கை என்பது என்ன..? கஷ்டங்கள் வந்தாலும் போராடி வாழ்ந்து, அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அனைவரும் நிறைவாக நிம்மதியாக இருக்க வேண்டும்..!

இந்தக்கதையில், இந்த உணர்வும் கலந்தது, கதையில் புதிய பரிமாணமாக வெளிப்பட்டது..!

படத்தில் நடித்த ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்வியா ரிக்கா உட்பட அனைத்துக்கலைஞர்களின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது. பாடல்களின் இசையும், எழுத்தும் நன்றாக அமைந்தன.

குறை சொல்ல முடியாத அளவிற்கு ஒரு சிறப்பான நடிப்பைக்கொடுத்து, ரியோ ராஜ்  ஒரு வெற்றிகரமான நடிகராகப் புகழடைந்துள்ளார்.

ஹரிகரன் ராம் எஸ்ஸின் இயக்கமும் தரமாக இருந்தது..!

நிச்சயம் இளைஞர்களை இந்தப்படம் கவரும்.

 


ஆ.கெ.கோகிலன்

12-04-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!