இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மஞ்சுமல்போய்ஸ்..!

படம்
  இந்தக்காலத்தில் மக்களுக்குப் படம் பார்த்து அலுத்துவிட்டது..! பல நாட்களாக இவ்வாறான குளு குளு வண்டியில் படம் போடுவதில்லை. ஏன் பாட்டுக்களே போடுவதில்லை..? ஆளாளுக்கு அவர்களது மோபைல் போனை நோண்டுவார்கள்..! இல்லை என்றால் உறங்குவார்கள். அருகில் இருப்பவர்களுடன் கதைப்பது கூடக் குறைவு. இன்று என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை, இந்தப்படத்தைப் போட்டார்கள்..! நான் ,  பட்டமளிப்பு விழாக்களின்   ஆறு அமர்வுகள்     கலந்துகொண்ட   களைப்புக் காரணமாகத் தூங்கித் தூங்கியே , AC Bus இல்     போட்ட இந்தப்படத்தைப்பார்த்தேன்..! ஒரு கட்டத்தில் தூங்கமுடியாமல் , தொடர்ந்து பார்த்தேன்..!     ” மனிதன் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல..! அதையும் தாண்டிப்புனிதமானது..” என்ற வரி படத்தில் ஒரு நிஜத்தையும் ஈர்ப்பையும் கொண்டுவந்துவிட்டது..!   உண்மையில் சிறப்பான படம். தொடர்ந்து உறங்கமுடியவில்லை..! இன்னும் ஒரு முறை முழுமையாகப் பார்த்துவிட்டு, ஒட்டுமொத்தமான கருத்தையும் சொல்ல நினைக்கின்றேன்.   ஆ.கெ.கோகிலன் 10-05-2024.   இரண்டு வாரங்களில் படத்தை இணையத்தில்...

வெசாக் பண்டிகை..!

படம்
  நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனை, பல பண்டிகைகளை வெகுவிமர்சையாக நடாத்தத்தடையாக இருக்கின்றது. மக்களின் கைகளில் பணப்பற்றாக்குறை நிலவுகின்றது. போதாததற்கு விலைவாசிகளும் அதிகம். இந்நிலையில் கொண்டாட்டங்களுக்குப் பணம் கேட்பது   என்பது சற்றுக்கடினமான காரியம். இருந்தாலும் இம்முறை நான் திருகோணமலையில் இருப்பதால், எப்படியாவது சிறிய அளவிலேனும் வெசாக் நிகழ்வை நடாத்த திட்டமிட்டோம்.   வெசாக்கை நடாத்தக் கோரிக்கைகள் பல வந்தன. ஆனால் எதிர்பார்த்த அளவு நிதி கிடைக்கவில்லை. இருந்தாலும் எம்மால் இயன்றவரை   வெசாக் விளக்குகளை எமது மாணவர்கள் மூலம் கட்டினோம். கிட்டத்தட்ட மூன்று நான்கு நாட்கள் எனது வகுப்பைத் தியாகம் பண்ணி அவற்றினைக் கட்ட வைத்தேன். நான் மாத்திரமல்ல.. என்னைப்போல் பலரின் விரிவுரைகள் இந்த நிகழ்வால் தடைப்பட்டன. நாம் தமிழர்களாக இருந்தாலும் மற்றைய நிகழ்வுகளையும் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளோம்.   மற்றவர்களை மதிக்கும் பண்பு எங்களுக்கு இருக்கின்றது. சிங்கள் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், தமிழ் மற்றும் முஸ்லீம் மாணவர்களின் உதவியுடனேயே   இவையெல்லாம் நடந்தேறின....

10 கட்டளைகள்..!

படம்
    “The Ten Commandments” என்ற   ஆங்கிலத் தொடரின் தமிழ்மொழி பெயர்பை நேற்றுத்தொடங்கி இன்று பார்த்து முடித்தேன். ஏறக்குறைய 2 மணி 55 நிமிடங்கள் எடுக்கக்கூடிய இந்தப்படத்தின் கதை மோஸஸின் வாழ்வைப் பற்றியது.   எங்கோ பிறந்த ஒருவனால், தேசத்திற்கு ஆபத்து வரும் என்று அந்நாட்டு அரசன் பிறந்த குழந்தைகளைக் கொல்ல, அதற்குப் பயந்து   வேறுவழியின்றி, ஒரு பேழையில்   குழந்தை மோஸஸை ஆற்றில் விடுகின்றார் தயார்..! பின்னர் அக்குழந்தை ஒரு ராணியிடம் வளர்ந்து, ராஜாவாக வரக்கூடிய சூழலில், நன்மையின் நிமித்தம் நடந்த ஒரு கொலையால், நாட்டைவிட்டு துரத்தப்பட்டு, பாலைவனத்தில் அலைந்து, இறுதியில் ஒரு பெண்ணைத் திருமணம் முடித்து வாழ, இறைவன் தனது இருப்பை மலையிலுள்ள ஒரு மரத்தில் அக்கினியை ஏற்படுத்தி அதனூடாக வெளிப்படுத்தி, மோஸஸைத் தனது கருவியாக மாற்றிப் பல விடயங்களைச் செய்கின்றார்..!   இறைவனின் நம்பிக்கையில்   மோஸஸ் செய்யும் காரியங்கள், பல சந்தேகங்களையும், சங்கடங்களையும் எகிப்திய அடிமைச்சமூகத்திற்கு ஏற்படுத்தினாலும், பலர் இவரது வழியிலே சென்று நிறைவாக வாழ்வதாகவும்,   மோஸஸ் முதுமையடைந்து...

கடற்குளியல்..!

படம்
  இன்று நாள் மிகப்பரபரப்பாகப் போய்கொண்டு இருந்தது. மகளுடன் கதைத்து இன்று மதியம் எல்லோரும் காங்கேசன்துறைக்கடற்கரைக்கு சென்று, குளித்துவிட்டு வருவோம் எனத்தீர்மானித்து இருந்தேன். இடையில் உறவினர், கேட்டதற்கு இணங்க யாழ் செல்லவேண்டிய சூழல் வந்தது. சரி இன்னொரு நாளைக்குப் போகலாம் என நினைத்து, அவர்களை எனது காரில் ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாண நகரம் சென்றேன். அவர்கள், இறங்கி, ”தேவை என்றால் அழைக்கின்றோம்..!” ஏன் நீங்கள் சும்மா அலையவேண்டும் எனநினைத்து என்னைப் போக அனுமதித்தார்கள்..! வீடு வந்ததும் மகளிற்கு சந்தோசம்..! உடனேயே எல்லோரும் வெளிக்கிட்டு குளிக்க காங்கேசன் துறைக்குச் சென்றோம். கடந்த பல வாரங்களாக சூரியர் எம்மைப் படாதபாடு படுத்துகின்றார். ஒரே வியர்வை..! உடுப்புக்களில் உப்புக்கறை..! உடலே ஒரே கச கச என ஒரு மாதிரி வெறுப்பாகவே இருக்கின்றது. எங்கும் படுக்க முடியவில்லை..! சூடு..! சூடு தான்..! யாழிலும் அதே தான்..! திருகோணமலையிலும் அதே தான்..! ஏன் பட்டமளிப்பு விழாவிற்கு கொழும்பு சென்றேன், அங்கும் அப்படித் தான்..! மின்விசிறியைப் போட்டாலும் காற்று சூடாகவே வருகின்றது. ஏசிக்குள் படுத்தால் தொண்டையே க...

நாமும் நாயும்..!

படம்
    சிறுவயதில் இருந்தே எனக்கு நாய்கள் மீது பற்றோ பாசமோ கிடையாது. எமது வீட்டு நிலமை அப்படித் தான்..!  அதனாலோ என்னவோ வீதிகளில் போகும் போது நாய்கள் குரைத்தால், கடிக்க வந்தால் உடல் சிலிர்க்கும். எனக்கும் ஒரு பயம் கலந்த எதிர்ப்பு உணர்ச்சி மேலோங்கும். அதன் விளைவால் நாயைக்கல்லால் அடிப்பதோ தடியால் அடிப்பதோ முடியாவிட்டால் ஓடுவதோ நடக்கும். ஏறக்குறைய 15 வயதுவரை இப்படியான நிலமை. பின்னர் வளர்ந்த பிறகு, நின்று எதிர்க்கும் தைரியம் வந்துவிட்டது. பயமும் போய்விட்டது. ஒன்றில் நாய் அல்லது நான் என்று பார்க்கும் தைரியம் நிறைய வந்துவிட்டது. பின்னர் நாய்களைத் துரத்துவதும் நாய் வளர்ப்போரையே பிடிக்காமலும் போய்விட்டது..! இந்தியாவில் நான் அகதிமுகாமில் இருந்த காலத்தில் பல இளைஞர்கள் ஒன்றாக இருந்தோம். ஒன்றாகச் சமைத்து சாப்பிட்டு, காலத்தைக்கடத்தினோம். அவ்வேளை நான் சிலம்பம் கற்றுக்கொண்டிருந்தேன். ஒரு நாள் நாம் சமைத்த உணவு அனைத்தையும் ஒரு பெரிய நாய் காலியாக்கிவிட்டது..! எல்லோரும் கடும் பசியுடன் அன்று படுத்தோம். அடுத்த சிலநாட்களுள் தடம் வைத்து,அந்நாயைப்பிடித்து, எனது சிலம்புத்தடியால் அடித்தே கொன்று...

சின்னப்பாட்டியின் மரணச்சடங்கு..!

படம்
  இம்முறை பட்டமளிப்பு விழாவிற்கு வழமையைவிட வேறுவகையில் அதுவும் குறிப்பாக பட்டமளிப்பு விழாவன்று காலையில் கொழும்பு சேரத்திட்டம் போட்டு, அதற்கேற்ப குளு குளு பஸ்ஸை புக்செய்து வைத்திருந்தேன். திடிரென நிலைமை போனமுறை போன்று மாறியது..! அதற்கு ஒரு மரணச்செய்தி காரணமானது..! பட்டமளிப்பு விழாவில் வழமைபோல் முதலாவது அமர்வு எனது வாசிப்பில் தொடங்கியது..! மேலும் புதிதாக 6வது அமர்விலும் எனக்கான ஒரு வாசிப்பு, இருந்தது. இந்த நிலையில் யாழில் இருந்து துக்கச்செய்தி வந்தது. மனைவியின் சின்ன பாட்டி   இறந்துவிட்டார் என்றும் நாளை எடுப்பதாகவும் இயலுமென்றால் வரும்படியும் கூறினார்கள். வீட்டருகில் நடக்கும் சடங்கில் கலந்துகொள்ளாவிட்டால், உறவுகளுக்கு இடையே நல்லாக இருக்காது என்பதால், எனது 6வது அமர்வின் கடமையைச் செய்துவிட்டு, மேலதிகாரிகளுக்கும் தெரியப்படுத்திவிட்டு, விடுதிபோய் உடுப்புக்களை மாற்றிக்கொண்டு, குளு குளு பஸ் நிலையம் வந்து 8.00 மணிக்கு, புறப்பட்ட பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். நன்றாக நித்திரை வந்தாலும் பஸ் அவ்வளவு சௌகரிகமாக இருக்கவில்லை. நித்திரையும் கொள்ளமுடியவில்லை. கடும் வெயில் காரணமாக விடுதியிலும், ஏன்...

சித்தரை வெய்யிலும், எமது நிகழ்வுகளும்..!

படம்
    நான் திருகோணமலை உயர்தொழில்நுட்ப நிறுவனத்திற்கு மாற்றலாகி வந்தபிறகு, ஏதாவது பயனுள்ள விடயங்களில் மாணவர் கவனத்தைத் திருப்பலாம் என்று பார்த்தால் காலநிலை கடும்போக்காக நிற்கின்றது..! கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எல்லாம் பற்றி எரிவது போல் இருக்கின்றது சூழல்..! வெளியில் செல்வதே கடினம்..! நான் பணிப்பாளராக இருப்பதால் பான்   (Fan) காற்றிலும், குளு குளு ஏசியிலும் இருப்பதால் மற்றவர்களோடு ஒப்பிடும்போது பராவாயில்லை என்றே தோன்றுகின்றது. ஆனாலும் இந்த வசதிகளுடன் தொடர்ந்து இருப்பது கடினம். அதேவேளை வெளியே கடும் வெய்யில் அடித்தாலும், மரநிழல்களிலும், காற்றுவரும் பகுதிகளிலும் இருக்கும் சுவாத்தியம் அலாதியானது மாத்திரமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட..! இந்தச் சூழலில் கடந்த   ஏப்பிரல் 25 இல் இரத்த தான முகாமை எமது மாணவர்கள் மூலம் அமைத்து, திருகோணமலை வைத்தியசாலைக்கு 56 நபர்களின் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது. குறிப்பாக மனிதநேய மதிப்பு தொடர்பான   பாடத்திற்கான ஒரு செயற்றிட்டமாக இந்நிகழ்வை எமது மாணவர்கள் நடாத்தினார்கள். பணிப்பாளர் என்ற வகையில் கலந்துகொண்டு நிகழ்வைத் தொடக்கி வைத்ததுடன் ந...

புதிய சிற்றூண்டிச்சாலை..!

படம்
    நான் திருகோணமலைக்கு வந்ததில் இருந்து எமது நிறுவனச்சிற்றூண்டிச்சாலையில் உணவு எடுப்பது மிகக்குறைவு..! காரணம் அது தொடர்பாக பல முறைப்பாடுகள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து வந்ததால், சரியான விசாரணைக்கு  அதுதொடர்பானவர்களை உட்படுத்த முனைந்தேன். நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த அவர்கள் முன்னாள் பணிப்பாளரினை கைக்குள் போட்டுக்கொண்டு விலைகளில் பல மாற்றங்களைச் செய்து வந்துள்ளார்கள்..!  தற்போது நான் வந்த பின்னரும் அவர்களுடன் சில விடயங்களைக்கதைத்து திருத்தச்சொன்னேன். ஓம் என்றார்கள். ஆனால் செய்யவில்லை. எமது நிறுவனப் பிரச்சனைகள் தொடர்பான   பொதுக்கூட்டத்தில் மாணவர்களுடனும், ஊழியர்களுடனும் கதைத்தேன். மாணவ பிரதிநிதிகள் நிச்சயம்   அதனை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.   அதன் பிறகு வழமையான அலுவலக நடைமுறைகள் மூலம் சிற்றூண்டிச்சாலை நாடத்த விரும்புபவர்களிடம் கோரிக்கை விடப்பட்டு, அவர்களது விலைகளுக்கு ஏற்ப புதிய சிற்றூண்டிச்சாலை மாற்றப்பட்டது..! பழையவர்களுக்கு சிறிது கவலை இருந்தாலும் மாணவர்கள் வெறுப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. குறிப்பாக உணவுகளின...

வேடிக்கை வாழ்வியல்..!

படம்
  ஜோதிடங்கள் சொல்வது ஒன்று..! உண்மையில் நடப்பது வேறோன்று..! பல ஜோதிடர்கள்   கொள்கைகளிலேயே வேறுபடுகின்றார்கள்..! கேட்டால் கணித வேற்றுமைகள் காரணம் என்கின்றார்கள்..! ஒரு கேள்விக்கு ஒரு விடை தான் வரவேண்டும். அது தான் சரியான கணக்கு..! ஆனால் ஒரு பிரச்சனைக்கு பல தீர்வுகள்..! ஒவ்வொருவர்   ஒவ்வொருமாதிரித் தீர்ப்பை வழங்குகின்றார்கள்..! கேட்டால், இது ராகு, சனி, குரு, சுக்கிரன் என்று சொல்லி மழுப்புகின்றார்கள்..! உண்மையில் நடக்க வேண்டியது நடந்து தான் ஆகும். ஜோதிடத்தை நம்புவதைவிட, நீங்கள் உங்களை நம்பலாம்..! முயற்சி செய்யுங்கள்..! தோல்வி வந்தாலும் ஒரு பாடம் படித்த அனுபவம் கிடைக்கும்..! இரு வாரங்களுக்கு முன்னர் என்னை ஏமாற்றிய ஒருவர் இன்று வந்து தலைகுனிந்து நின்றார்..! அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது.!. நிறைய அறிவுரைகளைக் கூறி, அவரது நிலையைப் புரிந்து, அனுப்பி வைத்தேன். எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகள் தான் பிறக்கும் போது..! பின்னர் வாழ்க்கை அவர்களை மாற்றுகின்றது..! சிலர் தாங்கள் புத்திசாலிகள் என்றோ அல்லது மற்றவர்களை மடையர்கள் என்றோ நினைத்து வாழுகின்றார்கள். உண்மையில் இறை...

இப்படியொரு மனிதர்..!

படம்
    அன்று ஒரு செவ்வாய் கிழமை மாலை எனது அலுவலகத்தில் அடுத்த நாள் வகுப்பிற்கான பாடத் தயார்படுத்தலில் இருக்கும்போது எமது நிறுவனத்தில் தற்காலிகமாக கடமையாற்றும் வருகைதரு விரிவுரையாளர் ஒருவர் என்னிடம் வந்து, ஒரு 1000 ரூபாய் கிடைக்குமா..? என்றார். அவர் எனது நிறுவனத்தில் வேலை செய்வது   பற்றித்தெரியும். அண்மையில் நடந்த ஒரு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு, நொண்டி நொண்டி அலுவலகம் வந்தபோது கனிவாக என்ன நடந்தது..? எனக்கேட்க   விபத்துப்பற்றிச் சொன்னார். அவ்வளவு தான் எனக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்..!   ஒரு நாள் வருகைதரு விரிவுரையாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு, அங்கே நான் கதைத்ததில் இருந்து, என்னைப்பற்றி ஓரளவிற்கு அறிந்திருப்பார். இந்த நிலையிலே இவ்வளவு உரிமையுடன் என்னிடம் பணம் கேட்க, மனம் முதலில் சந்தேகப்பட்டது..! இது பெரிய தொகைப்பணம் அல்ல..! ஆனால் அவர் பிள்ளைகளுக்கு கல்வி வழங்கும் ஒரு குரு..! ஏன் இப்படிக்கேட்டார் என நினைத்தபோது, சிலவேளை உண்மையில் ஏதாவது தேவையிருக்கும். வேறுவழியின்றிச் சங்கடப்பட்டுக்கொண்டு, எப்படியென்றாலும் பணிப்பாளர் தானே..! அவர் தானே சம்பளம் தரவேண்டும் ...

சித்தா..!

படம்
    நீண்டகாலத்திற்குப் பிறகு சித்தார்த் நடித்த, ஒரு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படமாக இது இருக்கின்றது..! இந்தப்படத்தின் கதையே, தந்தையை இழந்த பெண்குழந்தையுடன் திருமணமே செய்யாமல், அண்ணன் குழந்தைக்காக வாழும் சித்தப்பாவின் கதை..! சிறுமிகளின் வாழ்க்கையில் நடைபெறக்கூடிய அபாயகரமான சூழ்நிலைகளில் படம் பயணிப்பதால் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லை. ஒரு சில ஆண்கள் அதுவும் வயது கூடிய, முத்தியடைய வேண்டிய நிலையில் இருப்பவர்களின்   இன்னொரு கேவலமான முகத்தை காட்டும்போது, கொலைவெறியே வருகின்றது..! குழந்தைகள் தெய்வத்திற்குச் சமமானவர்கள்.   அந்தச்சிறுமிகளிடம் பாலியல் தேவைகளை தேடும் இம்மாதிரியான விலங்குகளைத் மனிதத் தாய்களே பெற்றுள்ளார்கள்..! சாதாரண குடும்பங்களிலும் சுயரூபம் தெரியாமல், மறைத்து வாழ்க்கின்றார்கள்..! இவர்களைக் கண்டறித்து சமூகத்தில் இருந்து விலத்தி வைக்கவேண்டும். இல்லை என்றால் சிறைச்சாலைகளில் போட வேண்டும். அதுவும் நடைபெறவில்லை என்றால் குறைந்த பட்சம் மனநல மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும். மனிதர்கள் எல்லோரும், சரியான மனநிலையில் இருக்கின்றார்களா என்பதே ஒரு சந்தேகத்...

மேதகு 2..!

படம்
  யாழில் நான்   இருந்த காலத்தில்  நடந்த சம்பவங்களைக்   காட்சிகளாகப் பார்க்கும்போது பல கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கின்றன..! என்னுடைய நிலைப்பாடுகளிலும் சில நெகிழ்ச்சிகளை ஏற்படுத்தவேண்டியது உண்மை, என்று புரிகின்றது..! இருந்தாலும் ஒருவருடைய பார்வையை 100 சதவீதம் என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் உள்ளவர்களில் அவர் மேன்மையானவராக இருக்கலாம். காலம் என்ன சொல்கின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இந்தப்படம் மேதகு 1 இன் தொடர்ச்சிபோல் காட்டப்படுகின்றது. உலகிலுள்ள பலர், இதனைத் தயாரிக்க உதவியுள்ளார்கள். சிலர் பெயர்களைக்கூட தெரிவிக்க இன்றுவரை பயப்படுகின்றார்கள். இது தான் யதார்த்தம். இலங்கையில் இருந்து கொண்டு, இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்பட்டால் அது தவறு என்பது அரசியல் சாசனம். அதேபோல் இந்தியாவில் இருந்துகொண்டு, இந்திய அரசிற்கு எதிராகச் செயற்பட்டால் அதுவும் தவறுதான். இந்த இரண்டும் இந்தப்படத்தில் கவனிக்கப்பட்டுள்ளது..! மேற்கு உலகத்தவர் படையெடுப்பிற்கு முன்னுள்ள நிலைக்கு சென்றால், படத்தில் சொல்லப்படும் விடயங்கள் தவறு அல்ல..! ஆக இந்த சிக்கல்களுக்குக் காரணம் மேற்கு உலகத்தின...