இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விதியை வீதியில் மதி

வீதியில் போகின்றவன் எல்லாம் தலை விதியே என்றால் நினைத்த மாதிரியே செல்லுங்கள்… முயன்றால் கொஞ்சமாவது நன்மையை மற்றோருக்கு செய்யலாம்  என்று நம்புவர்கள் மாத்திரம் மேற்கொண்டு இதை படிக்கவும். தேவையின்றி வாகனத்தை வீதியில் இறக்காதீர்கள்.. தலைக்கவசம் மாட்டிச் செல்லுங்கள்.. கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில் செல்லுங்கள்.. வாகனத்தில் செல்கையில் போட்டி போடாதீர்கள்.. இயலாதவர்களும், சிறுவர்களும், முதியோரும் வீதிகளில் செல்லலாம். ஒவ்வொரு உயிரையும் உயர்வாய் எண்ணுங்கள்.. யாரையும் மோதிக் காயங்களை ஏற்படுத்தாதீர்கள்… வாகனத்தில் ஏறியபின் கைபேசியை கவனத்தில் எடுக்காதீர்கள்.. கவனம் முழுவதையும் வீதியிலே வையுங்கள்… உறவுகளை அநாதைகளாக்க அதிகூடிய வேகத்தில் செல்வோருக்கும் இயலுமாயின் அறிவுறுத்துங்கள்… உண்மையான வாழ்க்கை மற்றோரின் நன்மைக்கான வாழ்க்கையே…! 09-09-2016                                                 ஆ . கெ . கோ

அழகைத்தேடியவன் அநாதையானான்…

அழகே என்றான்.. தன்னவள் என்றான். கடந்து போய் இன்னொன்றைப் பார்த்தான். அது தான் மெய்யழகென்றான்.. நாட்கள் நகர அதையும் விட்டான். மிகவழகு என மீண்டும் ஒன்றைப் பிடித்தான். சந்தோசமாக வாழ்வான் என  நோக்கின்…! அதையும் தாண்டினான்…? அதையும்விட அதையும்விட அதையும்விட என்று அலைந்தவனை அனைவரும் விட்டுவிட்டனர் அநாதையாக…! ஆற்றொனா நோயுடன்   ஆதரவற்றே இருக்கின்றான்... அறிவிருந்தும் அழகைத்தேடி  அனைத்தையும் இழந்துவிட்டான்… 08-09-2016                                                 ஆ . கெ . கோ

ஒரே பார்வை....

படம்
எண்ணங்கள் ஒன்றாக.. உணர்வுகள் ஒன்றாக.. உறவுகள் ஒன்றாக.. பார்வைகள் ஒன்றாகின திருமண பந்தத்தால்....! 2001                                                     ஆ.கெ.கோ

கடவுளே எனக்கு இயற்கை தான்...!

உயிர்களே இயற்கை.. உறவுகளே இயற்கை.. சூரியனே இயற்கை.. பூமியே இயற்கை.. சந்திரனே இயற்கை.. கோள்களே இயற்கை.. கடலே இயற்கை.. காற்றே இயற்கை.. நோயே இயற்கை.. மருந்தே இயற்கை.. உயிர்ப்பே இயற்கை.. அழிவே இயற்கை.. யாவும் இயற்கை.. உடலும் இயற்கை.. கடவுளே எனக்கு இயற்கை தான்....! கண்ணுண்டு பார்ப்பதற்கு.. வாயுண்டு கதைப்பதற்கு.. காதுண்டு கேட்பதற்கு.. மூக்குண்டு நுகர்வதற்கு.. நாக்குண்டு ருசிப்பதற்கு.. தோலுண்டு உணர்வதற்கு.. கடவுளே எனக்கு இயற்கை தான்…! உறவுகளோடு வீட்டில்.. சுற்றத்தோடு ஊரில்.. இனங்களுடன் நாட்டில்.. உயிர்களுடன் உலகில்.. ஆவியாக அண்டத்தில்.. கடவுளே எனக்கு இயற்கை தான்…! நண்பர்கள் சில வீட்டில்.. நண்பர்கள் சில ஊரில்.. நண்பர்கள் சில அலுவலகத்தில்.. நண்பர்கள் சில நாட்டில்.. நண்பர்கள் சில உலகில்.. கடவுளே எனக்கு இயற்கை தான்...! மூச்சுக்கு காற்றுண்டு.. நிற்பதற்கு தரையுண்டு.. குடிப்பதற்கு நீருண்டு.. எல்லையாய் வானுண்டு.. கடவுளே எனக்கு இயற்கை தான்...!. கஷ்டப்பட்டது கொஞ்சம்.. உவகைப்பட்டது கொஞ்சம்.. சோர்ந்து இருந்தது க...

நிரந்தரத்தலைவர்கள்...

படித்தவன் எல்லாம் தலைவனும் இல்லை படிக்காதவன் எல்லாம் தோற்றவனும் இல்லை யாரும் தலைவனாக வருவதும் இல்லை சதிகள் மூலம் வந்தாலும் சரித்திரமாவதில்லை விதிகள் தெரிந்தவன்   எல்லாம் சட்டங்கள் கதைக்கலாம் தலைவன் ஆவது மட்டும் காலத்தின் கையில் தான் ...? அன்பும் கருணையும் உள்ளவனே நல்ல தலைவன்... உண்மையும் அறிவும் சேருமாயின் சிறந்த தலைவன்... இவற்றுடன்  சமூக அக்கறையும் உள்ளவனே நிரந்தரத்தலைவன்…! உண்மையான தலைவன்…! காலங்களாலும், வேசங்களாலும் வெளிப்படும் தலைவன் நீடிக்க வேண்டுமாயின்  நிரந்தரத்தலைவனுக்குரிய தகுதிகளை  வளர்த்தெடுக்க வேண்டும்… தற்காலிக வெற்றிகளைச் சரித்திரங்கள் மறந்துவிடும். நீடித்த வெற்றிகளை இறைவனின் ஆசியுள்ளவர்களே பெறமுடியும்… நிரந்தரத்தலைவர்கள்  இறைவனின் ஆசிபெற்றவர்களே…!!! 05-09-2016                                                 ஆ . கெ . கோ

சொல் சன்னங்கள்

படம்
வார்த்தைகள், வரைமுறை  தாண்டியதால் சொற்கள் சன்னங்களாக மாறிவிட்டது. அளவான பிரயோகத்தினால் மட்டுமே அன்பைக்  காயத்துடன்  ஆவது காப்பாற்ற முடியும்… 1998                                                 ஆ.கெ.கோ

தாய்

முந்நூறு நாட்கள் மடியினில் சுமந்து முத்தாய் என்னை உலகிற்குக் காட்டி முறியா அன்பை பாலுடன் புகட்டி முதிசமாய் முத்தங்கள் கொட்டும் ஜீவன்..! பசிகண்ட வயிற்றிற்கு பதமாய் உணவிட்டு பிணிகண்டவுடனே விரைந்து போக்கி நிறைகண்ட வாழ்க்கைக்கு கல்விதனை ஊட்டி இனங்கண்டு என்னைப்பாங்காய் வளர்த்த ஜீவன்...! துன்பங்கள் தனை மறைத்துக்கொண்டு எண்ணங்கள் தனை நெஞ்சில் நிறுத்தி பிள்ளையின் பெருமையை நாடு போற்ற ஆவலுடன் காத்திருக்கும் அருமை ஜீவன்...! 1995                                                                      ஆ.கெ.கோ

நவீன வண்டு...

படம்

மேலாடை

புகழ்பெற்ற கோவில்கள் சில தடைபோட்டது ஆண்களுக்கு மேலாடையுடன் உட்செல்ல…! நல்லது… பெயரே தெரியாத கோவில்கள் பல எப்படியாவது சனம் வந்தாலே போதும் எனத் தடைகளைத்  தகர்த்துவிட்டது…! கோவில்களில் தீபந்தங்கள் போய் மின்பந்தங்கள் வந்தாகிவிட்டது…! அடியார்கள் சுமந்த சுவாமி,  மோட்டார் வாகனத்தில் நகருலா போகின்றார்… கொப்பியும் பேணாவும் போய் கணினியும், கைபேசியும் தேவையாகிவிட்டது.. நடைப்பயணங்கள் போய் வாகனப்பயணங்கள் வரையறையற்று வந்துவிட்டது… கூழையும் களியையும்,  பிட்சாவும் பர்கரும் தொலைத்துவிட்டது… உறவுகள் தொலைந்த உதிர்ந்த வாழ்கை, சிறந்த வாழ்க்கையாகிவிட்டது… மெதுவாக நகர்ந்த வாழ்க்கை, பர பர என பறந்த வாழ்க்கையாகி விட்டது.. மாற்றங்கள் இப்படி வரும் போது….? பழையதை அப்படியே ஏற்பதா..? மாற்றங்களூடாக ஏற்பதா..? பிறநாட்டவர் ஒருவர் ஆண்களின் அரைநிர்வாணக் கோலத்தைப் பார்த்து ஆண்கள் கவர்ச்சி காட்டும் மையமா  கோவில்…? எனக்கேட்டார்… சிந்தித்துபார்த்தேன்… என்னறிவுக்குத் தோன்றியவை இதோ… ஆணாதிக்க சமுதாய வெளிப்பாடே அரைநிர்வாணம்… ...

ரைப்ரைட்டருடன் பொழுதுகள்....

படம்
90 களில்    பேனையும் ரைப்ரைட்டரும் அந்நேர  உணர்வுகளைப் பாரிமாற எனக்கு உதவின..!

காகிதச் சங்கிலிகள்….

காலம் என்னும் வண்டியில் வயதுகள் பறந்தோட சின்ன வயதிலே சிந்தனைகளை சிதறவிட்டு தொலைந்துபோன கல்லறைகளில் தூய காதலைத் தேடி தங்கள் மனதை பிரியவரிடம் தொலைத்து விட்டு காவியமும் ஆகாமல் வெற்றியையும் பெறாமல் இறைவன் தோட்டத்து பசளையாக மாற ஏன் முயல்கின்றார்கள் இவர்கள்...?  ஆம், காதலின் கவர்ச்சியில் கவலைகள் தாங்கி காகிதங்கள் தான் விரயமாகின்றன…! காதலின் காமம் கர்ப்பம்வரை போய்விட காரணமற்ற செயல்கள் பிரியவர் மேல் வெறுப்பை ஏற்படுத்த, ஆழமற்ற அன்பின் உறுதியற்ற பிணைப்பால் காகிதச் சங்கிலிகள் போல் காண்பவர் கண்களை காவியம் பாட வைக்கும்...! 25-02-1994                            ஆ.கெ.கோ

நடப்பது, நடக்க வேண்டிய நேரத்தில் தான், நடக்கும்...

எங்கள் வீட்டு ஆழ் கிணற்றில் தவறியோ அல்லது விரும்பியோ  விழுந்த சேவல், கூவுகின்றது  தனது மரணத்தை உலகிற்கு அறிவிக்க… வீட்டில் உள்ளோர் முயன்றனர் அதனை காப்பாற்றி வெளியே எடுக்க..! அடம்பிடித்து மறுத்தது அது, வெளியே வர… நாள் ஒன்று சென்றது  நானும் தூரப் பயணம் செய்து திரும்பியிருந்தேன்.. பாவம் அதனை  எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என கடும்  முயற்சியையும் இவ்வாறு எடுத்தேன் கிணற்று வாளியை மாற்றினேன்… பிளஸ்டிக் வாளியையும் போட்டுப் பார்த்தேன்… பயன் ஒன்றும் இல்லை. அடம்பிடித்தது உதவியை ஏற்க... அப்படியே விட மனமில்லை. மீண்டும் முயன்றேன். வாளியில் பலகை கட்டி இறக்கிப்பார்தேன்… ம் …ம்... ஒன்றும் நடக்கவில்லை. இறுதியாக, சாமான்கள் வாங்கும் பெரிய கூடையை  இறக்கிறேன்… அது, அதனுள் இறங்க மறுப்பதற்குரிய  உறுதியை இழக்கவில்லை… களைத்த  நான் இழந்துவிட்டேன்  அதனைக் காப்பாற்ற வேண்டும் என்ற எனது உறுதியை…! இருப்பினும்  கிணற்றினுள் கூடையை அப்படியே விட்டுவிட்டேன்… மழை வேறு தொடர்ந்து என்னை வீட்டின் உள்ளே வைத்திருந்தது.. நாள் இரண்டும் சென்றது. ...

திருமண வயதுக் குழப்பம்…

படம்
என்  தாய் பார்ப்பாள்…!? எனக்காக இன்னொரு தாயை… சலனங்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காதே… அவை உன்னைச் சாகடித்துவிடும்… கடவுளே உறுதிக்கு உததரவாதமளி…. உறுதியான மனங்கள் இளகக்கூடாது என்னால்… கடவுளே உறுதிக்கு உததரவாதமளி….

இன்னும் காத்திருக்கின்றாள்…

படம்
அவள் அவனில் அன்பைக் கறக்க காத்திருக்கின்றாள்… 20 வருடங்களாக காத்திருக்கின்றாள்… அழகைக் கலைக்காமல் எண்ணத்தில் குமரியாய் வசந்தத்தை நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றாள்…. அவளது ஜென்மக்காதலனும் ஏமாற்றவில்லை அவளின் காதலை ஏற்றான்… கலந்தான்… ஆனால்… விநாடியில் பிரிந்தான் அவனின் எதிர்காலத்தை முன்னிட்டு…! கலப்பின் இரசாயன விளைவாய் இன்னொருவனும் வந்தான்… வளர்ந்து கொண்டும் இருக்கின்றான்… ஆனால் அவளோ விநாடியில் பிரிந்த அவனுக்காக மிண்டும் காத்திருக்கின்றாள்… அவன் நிச்சயம் வருவான்… தன்னை இவ்வுலகத்திலிருந்து விடுவிப்பான் என்ற நம்பிக்கையில் இன்னும் காத்திருக்கின்றாள்… உலகம் அழிந்தாலும் கடவுள் கைவிட்டாலும் காதலன் கைவிடான் என்ற நம்பிக்கையில்…. காதல் நாத்தீகர்களுக்கு மத்தியில் காத்துக்கொண்டே இருக்கின்றாள்…. -ஆ.கெ.கோ-

சிப்பி மாஸ்டர்

கேள்விப்பட்டேன் அவர் பெருமையை… ஜயனார் கோவில் விழா ஒன்றிலே சொன்னார் கவிதை ஒன்று… ஜெயராஜ் பேச்சின் சுவாரிஸ்யம் அவர் கவிதையிலும்… அன்று தான் கண்டேன் அவர் உருவம்…! ஒருவரின் துணையோடு மேடை வந்தார் சுவையோடு கவிதை சொன்னார்.. முதுமை ஒத்துழைக்காததால்  சென்றுவிட்டார் விரைவாக… நாட்கள் சென்றது.. நானும் மறந்து விட்டேன்… இன்று தீபாவழி நேற்றிரவு தம்பி சொன்னான் சிப்பிஜயா இறந்துவிட்டார் தன்னால் முடியாது… இயலுமென்றால் இன்றே போய் வா என்றான்… இரண்டு முறை குளித்தாகிவிட்டது மூன்றாம் முறை குளிக்க விரும்பவில்லை குளிர் நாள் என்பதால்… தீபாவளியன்று போவோம் என இருந்து விட்டேன்… தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கட்டிப்போட்டது என்னை இன்று… அம்மாவும் தம்பியும் பார்த்துவிட்டு வந்து சொன்னார்கள் மூன்று மணிக்கு எடுப்பினம் என்று… மதியம் சாப்பிட்டபின் போவோம் என நினைத்துக்கொண்டு தொலைக்காட்சியுடன் இருந்தேன் மதியம் வந்தது உண்டேன் உணவை நேரம் இரண்டாக சோம்பலுடன் தவிர்க்க நினைத்தேன்… மூத்தமகன் என்னுடன் ரியூட்டரிகளில் படித்தாலும் நட்பு இருந்தாலும்… தொடர்பு குறைவு என்பதால் தவிர்க்க நினைத்தேன். போய் விரைந்...

உலகப்புகழ் சொற்பொழிவாளர் நேத்திரனின் சுயசரிதை( சுயசொற்தூறல்) …!

இரண்டு பெண்பிள்ளைகளுடன் இன்னோர் ஆண்பிள்ளைக்கு ஆசைப்பாட்டார்கள் என் தாய் தந்தையர்….! ஆசை நிறைவேறி சிசுவாக நானும் வெளிவரவேண்டிய நாள் வந்தது.. வெளிச்சத்தைப் பார்க்க தாயின்  கருவறையை விட்டு வெளியே வந்தேன்… கண்ணைத்திறக்க முடியவில்லை.. அழுதழுதும் முயன்றேன் முடியவில்லை… “ஏன் அம்மா எங்களுக்கு குருட்டுத் தம்பி பிறந்தான்…?  ” அக்காக்கள் கேட்க. “அப்படிச்சொல்லாதேங்கோ….தம்பி என்றுசொல்லுங்கோ…” என்றாள் அம்மா...! “மற்றவைகளுக்கு நல்ல தம்பி இருக்க.. ஏன் எங்களுக்கு இப்படி…?? ”எனத் தொடர்ந்தும் கேட்க..  “துணைக்கு ஒரு ஆண்பிள்ளை  வேண்டும் என்று தவம் இருந்தோம்  பதிலாய் இறைவன் தந்தான் இந்தத் தம்பியை அவனுக்கு கண்ணாய் நாங்களே இருப்போம்…” அம்மா கூற அக்காக்கள் இருவரும் கனிவாய் பார்த்தார்கள்  என்னை….! மெதுவாகத் தொட்டார்கள்…! அன்பாகக் கொஞ்சினார்கள்…!  தொடர்ந்தும் எனது பார்வையாய் இருக்கின்றார்கள்…! யாரும் என்னை குருடன் என்றால் அவர்களுக்குப் பிடிக்காது. நேத்திரன் என்று அவன் பெயரைச்சொல்லுங்கோ என்பார்கள்..! மொழியிலும் சமயத்திலும் தேர்ச்சிபெற்று ...