இடுகைகள்

திருகோணமலை பஸ் சேவை..!

படம்
  நான் இங்கு வந்து ஏறக்குறைய 6 மாதங்களுக்கு மேலாகின்றது. ஆரம்பத்தில் காரில் வந்தாலும், பின்னர் அரச பேருந்திலே   பயணிக்கின்றேன்.   போகும்போதும் வரும்போதும் எமது நிறுவனத்தை தாண்டித்தான்   செல்லவேண்டும். அதனால் பஸ்ஸில் பயணிப்பது இலகு என்றாலும், ஒவ்வொரு முறையும் திருகோணமலையில் இருந்து யாழ்வரும்போது சீட் கிடைப்பது கடினம்.   நின்று தான் வரவேண்டும். வவுனியா தாண்டுவதற்குள் எப்படியாவது சீட் கிடைத்துவிடும். யாழில் இருந்து வரும்போது புக்பண்ணி வருவதால் சீட் எப்படியும் கிடைக்கும்.   இருந்தாலும் இவ்வாறு யாழிற்கும், திருகோணமலைக்கும் செல்லும் பஸ்களின் தரம் மிகவும் குறைவாகவே இருக்கும். சீட்கவர்கள் கிழிந்து கேவலமாக இருக்கும். சீற் கம்பிகளும் சரியான முறையில் வெல்டிங் செய்யாதபடியால் உடைவது போலிருக்கும்..! நேற்று, யாழில் இருந்து வெளிக்கிடும்போதே கடும் சனம். மூச்சுவிட முடியவில்லை. போனகிழமை இரு நாட்கள் லீவு வந்ததால், மக்கள் தூர இடங்களுக்கு சென்றுவந்துள்ளார்கள். அதனால் வழமையை விட அதிக கூட்டம்..! இந்த நிலையில் புக்பண்ணி வந்தாலும் மக்களின் கஷ்டங்களைப் பார்த்தால் நாங்களும் தொடர்ந்து இருந்து வருவதில் சங்கடங்கள்

பச்சிலர்..! (Bachelor)

படம்
  சில வருடங்களாக, இந்தப்படத்தைப் பார்க்கவேண்டும் என்று நினைத்தாலும், இன்று தான் அதற்கான சூழலமைந்தது. திருமணம் முடிக்க முதல், ஆடும் ஆட்டங்களும் அதனால் வரும் ஆர்ப்பாட்டங்களும், அவமானங்களும் சேர்ந்து, அறிவாளியாக மாறும் மனிதர்களே உலகில் அதிகம்..! குடி, கும்மாளம் எனக் கூத்தடிக்கும் இளைஞர்களும், நாகரீக வாழ்க்கைக்குத் தயாரான நவீன பெண்களும் சேர்ந்து, குளிர்நாடுகளில் தோன்றும் கலாசாரங்களை, வெப்பநாடுகளிலும் கொண்டுவந்தால் பல குழப்பங்கள் வந்து தான் ஆகும்..! எமது நாடுகளின் வாழ்க்கை முறைகள் வேறு. பெண்களைத் தாயாகவும், குடும்பத்தலைவியாகவும், குடும்பங்களின் மையமாகவும், வாழ்க்கையின் ஆதாரமாகவும், சில இடங்களில் கடவுளாகவும் விளங்குவதை நீண்டகாலமாக உணர்ந்து வருகின்றோம்..! ஆங்காங்கே சிறு சிறு தப்புகள் செய்து, தமது வாழ்வை அழித்துக்கொள்ளும் பெண்களையும் பார்த்திருக்கின்றோம். காதலிப்பது போல் நடித்து,  பெண்ணை லாவகமாக ஏமாற்றி, தமது இச்சைகளை தீர்த்துவிட்டு, தவிக்கவிட்டுச் செல்லும், ஆண்களையும், அவர்கள் வாழ்க்கையும் பார்த்திருக்கின்றோம். காதல் என்று உணராமல், ஒரே இடத்தில் வாழும் சூழல் ஏற்படும் போது, ஏற்படும் கரிசணங்கள்

அயோத்தி..!

படம்
    இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள ராமர் கோவிலுடன் தொடர்புடைய ஒரு இந்து ஆச்சார குடும்பத்தின் தலைவன், பெண்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை..! அதேபோல் தென்னிந்தியர்களையும் கேவலமான மனிதர்களாகவே பார்க்கின்றான்..! அவனின் குடும்பத்தில் மனைவி, பருவ வயது மகள் மற்றும் ஒரு சிறு மகன் இருக்கின்றார்கள். அவன் வீட்டிலும் மனைவி பிள்ளைகளிடம் அன்பாக இருப்பதில்லை.   “பான்பராக்”   போட்டுக்கொண்டு, தன்சார்பிலேயே அனைத்தையும் பார்க்கின்றான். மனைவி பொறுத்துப்போனாலும், மகளுக்கும் மகனுக்கும் அவனது இயல்புகள் பிடிக்கவில்லை. தள்ளியே இருக்கின்றார்கள். இந்த நிலையில், இராமேஸ்வரத்திலுள்ள ராமரைத் தரிசிக்க விரும்புகின்றான்.   மனைவி மற்றும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு ரெயிலில் பிராயாணம் செய்கின்றான். அயோத்தியில் இருந்து மதுரை வந்ததும், தவிர்க்க முடியாத சூழலில், டக்ஸி மூலம் ராமேஸ்வரம் போக குடும்பத்தினரை வற்புறுத்திக் கூட்டிச்செல்கின்றான். அந்நேரம் மகள் உடலுபாதையைக் கழிக்க சந்தர்ப்பம் கேட்ட, மறுத்து தனது கோபத்தை வெளிப்படுத்தி, அவளையும் அடக்கிவரத் தூண்டிக் கஷ்டப்படுத்துகின்றான்..!   டக்ஸியில் ஏறினாலும் அதன் சாரதி

ஸ்டார்..!

படம்
  நடிப்பு என்பதைத் தொழிலாக செய்யவிரும்பும் ஒருவரின் தொடர் முயற்சியே கதை..! இங்கு, வாழ்க்கையிலே நூற்றிற்கு தொன்னூறு வீதமானவர்கள் நடித்துத்தான் வாழ்கின்றார்கள்..! சினிமாவில் நடிக்க முயற்சிக்காவிட்டாலும், நிஜத்தில் திறமையான நடிகர்களாகவே பெரும்பாலானோர் இருக்கின்றார்கள்..! நிஜமாக, நடிக்காமல் உண்மையாக இருந்தால், இந்தப்பூமியில் வாழ்வது கஷ்டம் எனப்பலர் நினைக்கின்றார்கள். குறிப்பிட்ட ஒருசிலரே, நிஜத்தில் நடிக்காமல் வரும் துன்பங்களையும், துயரங்களையும் தாங்கிக்கொண்டு, இயற்கையினதும் இறைவனினதும் இறுதி முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். இந்தப்படத்தைப் பொறுத்தவரை தந்தை லால், நடிக்க ஆசைப்பட்டு அது முடியாமல் போக, பிள்ளையை சிறுவயதில் இருந்தே தூண்டிவர, அவனுக்கும் அது ஒரு பேராசையாக எழ, தானும் வாழமுடியாமல், வந்தவர்களையும் வாழவிடாமல் போக, ஒரு இடத்தில் “கட்” சொல்லி முடிகின்றது கதை..! படத்தில் இரண்டு காதல்கள் வருகின்றன. ஒன்று முறிந்ததற்கான காரணம் மேலோட்டமாக இருந்தது. ஆழம் போதாது..! இரண்டாவது காதல் கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும் அதனையும் தொடர முடியாமல் கவின் வெளியேறுவது, கவினுக்கு ஏதோ நோய் என்

ரத்தினம்..!

படம்
    நடிகர் விஷாலின் படங்கள் என்றால் சண்டைகளுக்குப் பஞ்சம் இருக்காது. அதேபோல் இயக்குனர் ஹரியின் படங்களும் விறுவிறுப்புக்கு பாங்கம் இருக்காது. அவர்களின் வழமையான சூத்திரத்தின் அடிப்படையிலேயே இந்தப்படமும் அமைந்துள்ளது. இதன் காரணமாக, இவர்கள் இருவர்களின் படங்களிலும் எனக்கு ஆர்வம் குறைவு. இருந்தாலும் நீண்டகாலத்திற்குப் பிறகு ஏதாவது புதுமையாகச் செய்திருப்பார்களா என்று பார்த்தால், எல்லாப்படங்களின் சேர்மானமாகவே இந்தப்படமும் இருப்பது ரசிக்க முடியவில்லை. ஒரே ஒரு ஆறுதல்..! இந்தப்படத்தில் ஹீரோ ஹீரோயினை காதலிக்க முடியாத வகையில் கதையைக்கொண்டுபோயுள்ளார் இயக்குனர்..! ஆகவே காதல் பாட்டுக்கள் இல்லை. சோகப் பாட்டுக்களே அங்காங்கே இருந்தன. படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை ரத்தம், சதை, கை, கால், தலை, உயிர்கள் என அறுத்து வீசுகின்றார்கள். இறைச்சிக்கடையில் வேலைசெய்தவர்கள் கூட இப்படி அறுக்க மாட்டார்கள். படத்தின் தொடக்கத்திலேயே கொள்ளையடிப்பதற்காக ஒரு பஸ்ஸையே மலையில் இருந்து விழுத்துகின்றார்கள்..! பின்னர், விழுந்த பஸ்ஸில் ஒன்றிரண்டி பேர், தப்பி உயிர்பிழைக்க, அவர்களின் காதுகளையும், கைகளையும் அறுத்துக்க

ரோமியோ..!

படம்
  தனது மகளின் இறப்பின் பின் விஜய் அன்ரனி நடிப்பில் மீண்டும் கவனம் எடுத்து மாறுபட்ட கதைக்களமுள்ள படங்களில் நடித்துவருவது பாராட்டிற்கு உரியது. நம்பி பார்க்கலாம் என்ற வகையிலே அவரது படங்கள் இருக்கும்..! அந்த வகையில் இந்தப்படமும் இருக்கின்றது. ஆனால் சில குழப்பமான கட்சிகள் வருவதால், எல்லோருக்கும் பிடிக்குமா என எண்ணத்தோன்றுகின்றது. கதைப்படி சற்று வயது அதிகமான கதாநாயகன், தன்னைவிட 10 வயது குறைவான பெண்ணைக்கண்டதும் திருமணம் செய்ய விரும்புகின்றார். ஆனால் பெண்ணின் பூரண சம்மதம் அறியாமல், ஏதோ வேறோர் ஆசையில் அவளும் சம்மதிக்க, திருமணம் நடக்கின்றது. அதன் பின்னர் தான் புரிகின்றது, பெண்ணிற்கு தனது கனவுத்தொழிலான நடிப்பில் நட்சத்திரமாக   ஜொலிக்க வேண்டும் என்பது..! இதனால் கட்டிய கணவனை ஒரு பொருட்டாக மதிப்பது கிடையாது, மாறாக, அவரைவிட்டு விலகத் துடிக்கின்றார்..! அத்துடன் தனது இலட்சியத்தை அடைய முனைகின்றார். மனைவியின் இந்த நடவடிக்கையால் தடுமாறிய ஹீரோ, இன்னோர் வழியில் தன்னை யார் என்று சொல்லாமல் மறைத்து, ஒரு ரசிகனாகக் கைபேசியூடாக   அறிமுகமாகி, கட்டிய மனைவியுடன் உரையாடுகின்றான்..! காலப்போக்கில், அருகிலுள்ள கணவ

டார்லிங்..!

படம்
  இந்தப்படத்தை நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஏதோ தள்ளிப்போய்விட்டது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னர், 2015இல் வெளிவந்த திரில்லர் படம். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக அறிமுகமான படம். ஒரு பங்களாவில் தற்கொலை செய்யச் சென்ற குழு, கொள்கைமாறி, காதலில் விழ, அதற்குள் இன்னொரு காதல் ஜோடி, அந்த பங்களாவிற்குள் கொல்லப்பட்டு இறந்து, அதற்குப்பழிவாங்க, ஆவியான பெண் காதலி, தற்போதைய பெண் காதலியின் உடலுக்குள் புகுந்து செய்யும் சேட்டைகளும், அதனால் உண்டாகும் காமெடிகளும், கடைசியில், புதிய ஜோடியை வைத்து பழைய ஜோடியை அழித்த கயவர்களை கண்டறிந்து, அவர்களை பொலிசிடம் கொடுக்காமல் தாமே தண்டனை கொடுப்பதாகப் படம் முடிகின்றது. அந்த நேரத்தில் இது ஒரு பெரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. அதைத்தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமாரும் இசையமைப்பாளர் தாண்டி ஒரு ஹீரோவாக கொலிவூட்டில் வலம் வருகின்றார். இந்தப்படத்தில் நடித்த அனைவரும் தமது சிறப்பான நடிப்பால் மக்களைக் கவர்கின்றார்கள். படத்தில் வரும் இன்னொரு ஹீரோ கலையரசன், படத்தின் முதலிலும், கடைசியிலும்   வந்து படத்தை முடித்து வைக்கின்றார்.   நிக்கி க