மறுதலைக் கற்கை..!
கடலில் கூடு அமைத்து மீன் வளர்க்கும் தென்னாசியாவிலுள்ள முதலாவது பண்ணை திருகோணமலையில் தான் இருக்கின்றது..!
இந்தப்பண்ணையில் எமது நிறுவனத்தில்
படித்த ஒரு மாணவரும் தற்போது வேலைசெய்கின்றார். அவர் சொன்ன தகவலின் படி, கடலுற்பத்திகளை
இவ்வாறு செய்வதன் ஊடாக பெரிய அளவில் அந்நிய செலாவணியைப் பெறக்கூடியதாக இருக்கின்றது.
இந்தப்பண்ணையில் தற்போது ஒரே வகை மீன் இனத்தை மாத்திரம் வளர்த்து விற்கின்றார்கள்..!
திருகோணமலை சீனக்குடாவிற்கு கிட்டவாக இந்தப்பண்ணையுள்ளது.
ஏறக்குறைய 60 பேர் அங்கே வேலைசெய்கின்றார்கள். ரூபா.50,000 தொடக்கம் ரூபா.2,000,000
வரை சம்பளம் வழங்குவதாக அறிந்தேன்..! இங்கு
வளர்க்கும் மீன் இனத்தை பாராமுண்டி (BARRAMUNDI) என்று சொல்கின்றார்கள்..!
தரையில் காணிகளை மக்களிடம் பகிர்ந்து கொடுத்தது போல், கடலில் கொடுத்ததாகத்
தெரியவில்லை. இந்தப்பகுதிக் கடலின் அதிகாரம், துறைமுக அதிகார சபையிடம் இருக்கின்றது. கடலில் குறிப்பிட்ட துண்டு நீர்ப்பரப்பை, குறிப்பிட்ட
தொகைப்பணத்தைக் குத்தகையாகக் கொடுத்து வாங்கி,
அதில் கூடுகள் அமைத்து, மீன்களை வளர்க்கின்றார்கள்..! ஒரு மீன் சுமார் ஒன்றரைக் கிலோ வரை நிறைபோகின்றது. ஏறக்குறைய
1000 ரூபா செலவழித்து, 5000 ரூபா எடுப்பதாக
அந்த மாணவர் சொன்னார்..! 4000 ரூபா இலாபமாக வருவதாகவும் மற்றும் கடலுணவுகளுக்கும்,
நோய்கள் வராமல் தடுப்பதற்கும், ஏனைய வேலைகளுக்கும்
என்று 1000 ரூபா வரையான செலவுகள் வருவதாகச் சொன்னார்..! நான் நினைக்கின்றேன், சொன்னதைவிட
இலாபம் கூடவாக இருக்கலாம் என்பது தான். போதிய விபரங்களை https://www.oceanpick.com/sustainability/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம் என்பதுடன் யூரியூப்பிலும்
இது தொடர்பான விபரங்கள் உண்டு. இவ்வாறான முதலீடுகளில் ஈடுபட விரும்புவோர், அவற்றை அறிந்து
தமது முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
அரச நிறுவனங்களிலுள்ள சம்பளங்களை விட அங்கு அதிகம். ஆனால், ஒரு தனியாருக்கு
கீழ் வேலைசெய்வதால், எமது வேலைகளில் ஏதாவது குறைகள் இருந்தால், அந்தத்தனி நபரோ அல்லது
அவரது குழு தான், எமது தலைவிதியைத் தீர்மானிக்கும்..!
அதேபோல் எமது சேவைப்பங்களிப்பு அவர்களுக்குத்
திருப்தியாக இருந்தால், எந்த எல்லைவரை சென்றும் எம்மை உயர்த்தலாம்..! இன்னும் சில வருடங்கள்
மட்டும் தான்
என்னால் அரச சேவையில் இருக்க
முடியும். அதன்பின்னர் பார்ப்போம் முதலாளியாவதா..? அல்லது தொழிலாளியாவதா..? என்பதை..!
இன்று, எமது மாணவர்களுக்கான செமஸ்டர் இறுதிப் பரீட்சை தொடங்கியது. பரீட்சை சுமூகமாக நடந்துகொண்டிருக்கும் போது ஒரு மாணவி, சிறு எழுத்துக்களில் எழுதிய விடைத்துண்டை வைத்திருந்ததால், பரீட்சை மேற்பார்வையாளர் அதனைப் பிடித்துவிட்டார்..! இதனை உணர்ந்த மாணவி, கத்திக் குளறி, உருண்டு பிரண்டு அடம் பிடித்து பெரிய ஆர்பாட்டத்தையே நடாத்திவிட்டார்..! எனக்குக்கூட முறைப்பாடு வந்தது..! கொஞ்ச நேரம் என்னால் கூடக்கட்டுப்படுத்த முடியவில்லை..! பின்னர் அதட்டிக்கூட்டிச்சென்று, சில ஆலோசனை வழங்கக்கூடிய பெண் ஊழியர்களையும், சில மாணவிகளையும் கவனமாகப் பார்க்கச்சொல்லிவிட்டு, பெற்றோருக்கு நிலைமையை விளக்கி, அவர்களை வரவளைத்துப் பிள்ளையை ஒப்படைத்தோம். ஏறக்குறைய எனது 30 வருட அனுபவத்தில் இப்படியொரு மாணவியை இன்று தான் பார்த்தேன்..!
தற்போது படிக்கும் மாணவர்கள், தலைமுறை இசற்றைச் (Generation Z) சேர்ந்தவர்கள். அவர்களது மனப்போக்குகள்
பெரிதும் எம்மைவிட மாறியுள்ளன..! ஆனால், அதற்கேற்ப
எமது சூழல் மாறவில்லை. நாம் மாறவில்லை..! இந்த முரண்பாடுகள் இனிவரும் காலத்தில் பெரிய
தலையிடியாக மாறவும் வாய்ப்புண்டு.
நேற்றில் இருந்து தலைமுறை பீற்றா தொடங்குகின்றது..! இனிவரும் காலத்தில் தலைமுறை பீற்றாவுடன் அதிகபட்சம் போராடப் போறவர்கள் தலைமுறை அல்பாவும், தலைமுறை இசற்றும் தான்..! தலைமுறை எக்ஸிற்கு தலையிடி கொடுக்கும் தலைமுறை அல்பா,
வாங்கிக்கட்டப்போவது தலைமுறை பீற்றாவிடம் தான்..!
நேற்று மூன்றுவேளை உணவும் இருப்பிடத்திற்கே வந்து, வருட ஆரம்பம் சிறப்பாகத்
தொடங்கியது..! இன்று மாலை உணவு, உடற்பயிற்சியாலே கிடைத்தது..! அவ்வாறு தொடர்ந்தால்
ஆரோக்கியம் சிறக்கும்..! இல்லையேல் திரும்பவும், வயிறு தான் பெருக்கும்..!
ஆ.கெ.கோகிலன்
02-01-2025.
கருத்துகள்
கருத்துரையிடுக