தேவரா 1..!
ராஜமௌலியின் பாகுபலி வந்த பின்னர் பிரமாண்டமான திரைப்படங்கள்
நிறைய வரத்தொடங்கிவிட்டன. முன்பு கமெரா ரிக்ஸ் என்று சொல்லிச்செய்த விடயங்கள் எல்லாம்
தற்போது கணினி வரைபியலூடாக மிகச்சுலபமாகச்
செய்ய முடிகின்றது..! எந்த சிக்கலான காட்சிகளையும் இலகுவாக எடுக்க முடிகின்றது..! செலவுகள் கூட என்றாலும், கற்பனைகளை திரைகளில் நிஜமாக்க முடிகின்றது..!
ஜூனியர் என்ரியாரின் படங்கள் என்றால் மாஸ் தான். லொஜிக் பார்த்தால்,
படத்தை ரசிக்க முடியாது.
இந்தப்படத்தின் கதையே விசித்திரமாக இருக்கின்றது..! கடல்
தீவுகளில் இருக்கும் சில மனிதர்கள், கடலில் வரும் பெரிய கப்பல்களில் இருந்து பொருட்கள்
பலவற்றைத் திருடி இன்னொரு கும்பலுக்கு கூலிக்கு கொடுக்கின்றார்கள். அதனூடாகப் பணம்
வருகின்றது. அவர்கள் நிம்மதியாக வாழ நினைக்க,
இவர்கள் கடத்தும் பொருட்கள், இவர்களது மக்களுக்கே ஆபத்தாக வர, இனிமேல் கடலில்
இவ்வாறான தப்பான காரியங்கள் செய்யக்கூடாது என்று நாயகன் கட்டளையிட, இன்னொரு பகுதிக்கு
அதில் உடன்பாடு இல்லாமல் கடத்தலில் இறங்க, நாயகன் தேவராவால் கடத்தில் ஈடுபட்ட அனைவரும்
கொல்லப்பட்டு, தேவராவும் கொல்லப்படுகின்றார். ஆனால், அவர் இறந்ததை யாருக்கும் தெரியாத வகையில் மறைத்து,
யாரும் கடத்தலுக்காகக் கடலுக்குள் இறங்கக்கூடாது என்றும், மீன்பிடிக்க இறங்கலாம் என்றும் சொல்லப்படும் தேவராவின்
கட்டளையை மக்கள் நம்புகின்றார்கள்..! காலம் கடக்கின்றன..! தேவராவின் மகன் பயந்தாங்கொள்ளியாக இருக்க, அவனை உசுப்பேத்தி, வீரனாக்கி,
இறுதியில் எதிராளிகள் அவனையே கடலில் இறக்க, திரும்பத் தேவரா வந்து அனைவரையும் கொன்று,
கரையில் போடுகின்றான். யாரும் கடத்தலுக்காக கடலுக்குள் இறங்கக்கூடாது என்ற கட்டளையை
மீண்டும் நிறுவுகின்றான்..!
தந்தை, மகன் இருவரும் இறந்தாலும், அவர்களது நோக்கம் கடலுக்குள்
தப்புச்செய்யக்கூடாது என்பது தான்.
இந்தக்கதையை லொஜிக் இல்லாமல் சும்மா ரசனையோடு பார்த்தால்
நன்றாகவே இருக்கின்றது..!
நடிகர்களின் பங்களிப்பு சிறப்பு. தொழில்நுட்பங்கள் தரம்.
கொரத்தல சிவா என்ற இயக்குனர் படத்தை விறு விறுப்பாக இயக்கியுள்ளார்..! படத்தில் பாடல்கள்
சற்று வேகத்தடையாக இருக்கின்றன..!
நீளமான படம் என்றாலும் ஒரு முறை பார்க்கக்கூடிய படம். குறைந்த
பட்சம் பாகம் 2 ஐ பார்ப்பதற்காவது பாகம் 1ஐப் பாருங்கள்..!
ஆ.கெ.கோகிலன்
24-11-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக