தமிழ் ஹீரோ படங்களின் தாக்கம்..!
இதுவரை தமிழ் திரைப்பட நடிகர்கள் நடித்து
வெளியான
படங்களின்
எண்ணிக்கை ஏறக்குறைய ரஜினி-17, கமல்
– 233, விஜய்
– 68, அஜித்
– 61, சூர்யா
– 42, விக்ரம்
– 60, தனுஷ்
– 50, சிம்பு
– 47, ஜீவா
– 37, ஶ்ரீகாந்த்
– 50, கார்த்தி
-26, ஜெயம்
ரவி
– 31, விஷால்
– 33, ஆர்யா
– 39, விஜய்
சேதுபதி
– 54, பரத்
– 52, விமல்
– 28, ஜெய்
– 31, சசிகுமார்
– 26, சுந்தர்
சி-19,
சிபிராஜ்
-18, அருண்
விஜய்
– 30, கெளதம்
கார்த்திக்
-16, விக்ரம்
பிரபு
– 22, அதர்வா-17,
அருள்நிதி
-19, ராகவா
லாரன்ஸ்
– 22, சிவகார்த்திகேயன் -22, சிவா-19, Hip Hop Tamizha ஆதி-8,
ஜீ
வி
பிரகாஷ்
குமார்
- 22, விஜய்
ஆண்டனி
-18, பிரபுதேவா
- 57 விக்ராந்த்
- 20, விஷ்ணு
விஷால்
-17, சித்தார்த்
– 36, வைபவ்
-26 என அமைகின்றன..! இன்னும் சில ஹீரோக்கள், தனியாக ஹீரோ மாதிரிக் காட்டும்
படங்களில் மாத்திரம் நடிக்காமல் வில்லன் கதாபாத்திரங்களிலும், குணசித்திர கதாபாத்திரங்களிலும்,
ஏன் காமெடிப்பாத்திரங்களிலும் நடித்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்..! ஆனால், மேலே
சொல்லப்பட்டவர்கள் ஏறக்குறைய கதையைத் தாங்கி நடிக்கும் நாயகர்களாக இருப்பதால் அவர்களை
மட்டும் இங்கே கவனத்தில் எடுக்கின்றேன்.
இவ்வளவு நாயகர்கள் நடித்த
சமூகத்திற்குப் பயனுள்ள படங்கள் என்று சொன்னால் எதைச்சொல்ல முடியும்..!
தமிழர் வரலாற்றைச் சொல்லக்கூடிய
படம் என்றால் யாருடைய படங்கள் அதனை அதிகம் செய்துள்ளது..?
ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, திரை தாண்டி நிஜத்திலும் சிறந்த நல்ல மனிதர்களாக
வாழ்ந்த ஹீரோக்கள் யார்..?
வாழ்க்கையில் கஷ்டங்கள் இருக்கும்.
இருந்தாலும் தங்களுடைய குடும்பங்களை அனுசரித்துப் போகவேண்டும். அவர்களது பிள்ளைகளுக்கும்,
மக்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அறிவு இருக்கு என்பதற்காக ஒரு புத்திசாலி,
கஞ்சா அடித்தால் தப்பு இல்லையா..?
இவ்வளவு நாயகர்கள் இருந்தும்,
பசித்து வரும் தமது ரசிகப்பெருமக்களுக்கு எத்தனை பேர் உணவு வழங்கியுள்ளார்கள்..?
எத்தனை பேர் இரத்ததானம் செய்துள்ளார்கள்..?
எத்தனை பேர் வசதியற்ற பிள்ளைகள் கல்வி கற்க
உதவியுள்ளார்கள்..? அதையும் தாண்டி எத்தனை பேர் இந்த நடிகர்களில் கல்வி கற்றுள்ளார்கள்..? நடிப்பதற்கும்
கல்வி வேண்டும். அப்போது தான், உங்கள் பின்னால் நிற்கும் அப்பாவி ரசிகர்களை மீட்க முடியும்.
அவர்களை நல்வழிப்படுத்த முடியும். இல்லையென்றால், இந்த நடிகர்களில் பெரியவர் ரஜினி
செய்தது மாதிரி பல ரசிகர்களை மென்டல் மாதிரி அலைய வைத்திருப்பார்..! அது தவறு. ரசிகர்களுக்குப்
புத்திமதி கூறி, தங்களது ஒவ்வொரு ரசிகனையும் அவனது குடும்பத்தின் தலைவனாக, அவனது ஊரின்
இளவரசனாக மாற்ற முயலவேண்டும். அதைவிடுத்து, தங்களது கட்அவுட்டுகளுக்கு பால் அபிசேகம்
செய்தால், அல்லது செய்ய வைத்தால் என்ன நடக்கும்..?
ரஜினி மாதிரியான நடிகர்கள்
எவ்வளவு படங்கள் நடிப்பது என்பதை விட, எத்தனை நல்ல படங்களில் நடித்தார்கள் என்பது அதைவிட
முக்கியம். அதுமாத்திரமன்றி, அவை சமூகத்தில்
என்ன மாற்றத்தைச் செய்தது என்பது அதைவிட முக்கியம்..!
சூரியாவின் திரைப்படமான ஜெய்பீம் ஒரு சமூக மாற்றத்தைச் செய்தது..!
பாதிக்கப்பட்ட இனக்குழுக்களிற்கு அரச உதவிகள் கிடைத்தது..!
ஒரே மசாலாப்படங்களாக நடித்து,
மக்களை தொடர்ந்து முட்டாள்களாக மாற்றக்கூடாது. அதேவேளை வன்முறைகளையும், சண்டைகளையும்
திணித்து, மக்களை அவதிக்கு உட்படுத்தக்கூடாது. பொழுதுபோக்குப் படங்கள் வேண்டும். ஆனால்,
அதனூடாக மக்களுக்கு நல்ல செய்திகளை வழங்கி, மேன்மைப்படுத்தப்பட்ட சிறந்த சமூகமாக, தமிழ்
இனம் இருக்க உதவ வேண்டும்.
குறிப்பாக நடிகர்கள் படங்களில்
பணம் சம்பாதிப்பதை மட்டும் நோக்காமல், தங்களுக்கும், சமூகத்திற்கும் பயன்தரக்கூடிய
படங்களில் நடிக்க வேண்டும். ஒரே மாதிரிப்படங்களில்
எத்தனை நடித்தாலும் அது ஒரு படத்திற்குத்தான் சமன். ஒவ்வொரு படங்களும் மக்களுக்கு பாடங்களைக்
கற்பிக்க வேண்டும். சினிமா என்பது பொழுது போக்கு என்றாலும், அந்த நேர விரயம், மக்கள்
வாழ்வில் ஏதோவோர் உயர்விற்கு உரமாக வேண்டும்.
ஆ.கெ.கோகிலன்
16-11-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக