கன்னித்திரை சிகிச்சை (hymenoplasty)..!
முந்தைய காலங்களில் பெண்கள்
வேலைக்கு செல்லக்கூடாது, விளையாடக்கூடாது, வீட்டிற்குள் மட்டும் தான் இருக்க
வேண்டும்..! வெளியில் சென்றால், ஏதாவது வெளியிலுள்ள பிற ஆடவர்கள், அவளை துஷ்பிரயோகம்
செய்தால் அவர்களுக்கு வாழ்வே இல்லை..! அல்லது அந்தப்பெண், தான் விரும்பிய ஒரு ஆடவனுடன்
தனது காதலைப் பகிர்ந்து கொண்டால், பின்னர் அந்த ஆடவனைத் தவிர வேறு யாரையும் மணம் முடிக்க
இயலாது..! இயற்கையே அதனைக் காட்டிக்கொடுத்துவிடும்..!
அவளது கன்னித்தன்மையை மீளப்பெறவே முடியாது. இது தான் எனக்குத் தெரிய நீண்டகாலமாக இருக்கும்
பழக்கம் அல்லது நடைமுறை..!
ஆனால் நவீன மருத்துவத்தில் இதற்கு வசதி வந்துள்ளது..! பெண்களின் குறியில்
ஏற்பட்டுள்ள விரிவை தையல் மூலம் மீண்டும் பழையவாறு இருக்கச் செய்ய முடியும். இதற்குப்
பெயரே கன்னித்திரைச் சிகிச்சை..!
இந்தச் சிகிச்சை பொதுவாக யாருக்கு தேவை என்றால், திருமணம் ஆகாமல் ஏற்படும்
தவறான உறவுகளால், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பை நீக்க இந்த சிகிச்சை முறை உதவுகின்றது..!
யாரோ ஒரு ஆண், ஒரு பெண்ணை ஏமாற்றி, தனது இச்சைக்கு உட்படுத்திவிட்டு,
திருமணம் செய்யாமல் தவிர்த்துவிட்டால், அந்தப்பெண் என்ன செய்வது..? இவ்வாறான சூழலில்,
உயிரை விட்ட பெண்களும் தற்போது கூட இருக்கின்றார்கள்..! யாரோ ஒருவன் தன்னை ஏமாற்றினாலும்,
தான் யாரையும் ஏமாற்றக்கூடாது என்று நினைத்து, தனது குடும்பத்தாருக்கு அநீதியை ஏற்படுத்திவிட்டு,
மாண்டு போகின்றனர்..! இது தவறு. தவறுக்கான மனிதனை சமூகத்தின் முன் காட்ட வேண்டும்.
இவன் தான், என்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியவன் என்று சொல்ல வேண்டும்.
அவனைப் பெற்ற பெற்றோர், தனது பிள்ளையைச் சரியாக
வளர்க்கவில்லை என்று வேதனைப்பட வேண்டும். அதேநேரம், குறித்த பெண்ணுக்கு பாதிப்பு ஏற்படாத
வகையில், இந்த சிகிச்சை, அவளது மீள் வாழ்க்கைக்கு
உதவ வேண்டும். சில சமயம், இந்தச்சூழலில் பெண் கருவுற்றிருந்தால், அந்தக்கருவை வளர்த்து
குழந்தையாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு தான், அதனைப் பொறுப்பேற்று நற்பிரஜையாக
வளர்க்க வேண்டும். அல்லது குழந்தை இல்லாதவர்களுக்கு, அனைத்து சட்டரீதியிலான வழிமுறைகளுடன்
அந்தக்குழந்தையை கொடுக்கலாம். அந்தக்குழந்தையின்
எதிர்காலத்திற்கு அந்தக்குடும்பத்தைப் பொறுப்பாக்கலாம். அதேவேளை அந்தப்பிள்ளையின் தாய்கு
மறுவாழ்வு அளிக்கலாம். தீங்கு செய்த தந்தைக்கு சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் அறவிடலாம்.
இப்படியான கன்னித்திரைச் சிகிச்சைக்கு அந்தத் தண்டப்பணத்தைப் பயன்படுத்தலாம்.
எந்த ஒரு ஆணும் அல்லது பெண்ணும் இப்படியான சட்டபூர்வமற்ற உறவுகளுக்கு உட்படாது இருக்க
பாதுகாப்பு விதிமுறைகள் வழங்கப்பட வேண்டும். பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வுகள் வழங்கப்பட
வேண்டும். யாரும் பாதிக்கப்படாமல் அனைவரும் நாட்டில் நிம்மதியாக வாழ இவ்வாறான சிகிச்சைகள்
உதவ வேண்டும்.
திருமணம் ஆகி பல வருடங்கள் சென்ற பெண்களும் இவ்வாறான சிகிச்சைகளைச்
செய்து, தாம் இன்னும் இளமையாக இருப்பதாகக் காட்ட நினைப்பது தவறு இல்லை என்றாலும், அவர்களது
வயதிற்கும், ஆரோக்கியத்திற்கு தேவையில்லாத
சிக்கல்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தாமல் தவிர்க்கலாம்.
பாரம்பரிய முறைப்படி சில திருமண சம்பிரதாயங்களை நம்பும் அடிப்படை வாதிகளை ஏமாற்றவும் இந்த சிகிச்சை உதவலாம்..! என்னைப் பொறுத்தவரை,
யாரையும் ஏமாற்றுவது தவறு. ஆனால் சிலருக்கு என்ன சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாத
தன்மையுள்ள நிலையில், இப்படியான சிகிச்சைகள் அவர்களது வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவரலாம்.
அப்படியாவது மகிழ்ச்சி அவர்களுக்கு கிடைக்கட்டும்.
ஒரு வித வியாபார உலகில், இப்படியானவற்றைச் செய்தே ஒரு சிலர் நிறைவான
வாழ்க்கையை வாழ்கின்றார்கள்..! அவர்களுக்கு இந்தச் சிகிச்சை முறை, ஒரு குற்றமான சிகிச்சையாகத் தெரியாது. சிலருக்கு,
இந்த சிகிச்சையே சமூகத்தையும், இயற்கையின் படைப்பையும் ஏமாற்றுவதாகத் தெரியலாம். என்ன செய்வது..? இந்தப்பூமியே இரவும் பகலும் சேர்ந்தது
தான். ஏற்றுக்கொள்ள முயலுவோம்.
ஆ.கெ.கோகிலன்
06-01-2025.
கருத்துகள்
கருத்துரையிடுக