நாடு
இந்த உலகில் ஒவ்வொரு நாடும், அந்நாட்டு மக்களும் தமது நாடு நல்லா வரவேண்டும். பொருளாதாரத்தில் சிறக்க வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும் என்ற நோக்கோடு தான் செயற்படுவார்கள். அவ்வாறே தமது நாட்டின் அரசியலை முன்னெடுப்பார்கள். நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அரசையே மக்களும் தேர்ந்தெடுப்பார்கள். இவ்வாறான சூழலில் சில விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகள் மட்டும் சரியான கொள்கைகளும், கோட்பாடுகளும், இல்லாமல் மக்களை ஏமாற்றி, தேவையில்லாத விடயங்களை முன்நிலைப்படுத்தி, மக்களின் வாக்குகளைப்பெற்று, ஆட்சி என்ற பெயரில் நாட்டின் பொருளாதாரத்தை வீணடித்து, மக்களை மேலும் துன்பத்திற்குள் கொண்டுவந்துவிடுகின்றார்கள்..! அரசியல் வாதிகள் தான் மக்களையும், நாட்டையும் ஏமாற்றுகின்றார்கள் என்று பார்த்தால் பெரும்பாலான மக்களும் அதே எண்ணத்தில் தான் இருக்கின்றார்கள். உண்மைக்கும், நியாயத்திற்கும் மரியாதையில்லை. நாடு, தரும் எவ்வளவோ நன்மைகளைப் நாம் பெற்றுவிட்டு, நாடு கஷ்டத்தில் இருக்கும்போது ஓட எப்படி மனம் வருகின்றது..? எமது நாட்டுக்காக போராட ஏன் மனம் வரமாட்டேன...