ரேடியன் கமாஸூம் லெமியாவும்..
ரேடியன்கமாஸூம் பெற்றோர், சகோதரங்கள் அழைப்பதால், அவனும்
கூடச் சென்றான். எல்லோரும் கப்பலில் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக தீவைநோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.
ரேடியன் மாத்திரம் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். 2 மணித்தியாலம் கடந்திருப்பார்கள்.
மிக ஆழமான கடற்பகுதியில் கப்பல் போய்கொண்டிருக்கின்றது. அந்நேரம் வானம் தீடிரென இருட்டியது.
ரேடியனுக்கு அந்நேரம் வானில் தோன்றிய மின்னலில் ஒரு பெரிய பெண் தேவதை தெரிந்தது. பின்னர் பெரிய சத்தத்துடன் இடி இடித்தது. ரேடியன் தனது பெற்றோரிடம் தான் பார்த்த தேவதையைப் பற்றிக் கூறினான். அவர்கள் சிரித்தார்கள். இவனின் செயற்பாடு எப்போதும் அவர்களுக்கு விநோதமாகவே
இருக்கும். இன்றும் அவ்வாறே நடந்தது. அவர்கள் சிரிப்பதை ரசிக்க முடியாமல் மீண்டும்
வானத்தைப் பார்த்தான். திரும்பவும் அதே தேவதை
தோன்றினாள். எல்லாம் திரும்ப நடந்தது. ஒருவரும் அவனது கதையைக் கேட்பதாக இல்லை. இன்னும்
அரை மணி நேரத்தில் அந்தத்தீவை அடையமுடியும். அது கடலுக்கு நடுவிலுள்ள ஒரு அழகான தீவு.
மலை, காடு, ஏரி, நீர்வீழ்ச்சி, உல்லாச விடுதிகள், உணவுவசதிகள் என எல்லாம் அங்கே இருந்தன.
இன்னும் வானத்தை விட்டு கண்ணை அகற்ற முடியாமல் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். மீண்டும் அதே மின்னல் தேவதை தெரிந்தாள். சிறிது நேரத்தில் பெரிய இடி விழுந்தது கப்பலில்..! கப்பல் பிளந்து எல்லோரும் கடலில் தத்தளித்தார்கள். அதே நேரம் ரேடியன் ரேடியன் எனக்கத்திக்கொண்டிருந்தார்கள். ஆனால் ரேடியன் மின்னல் தேவதையுடன் சென்றுகொண்டிருந்தான்..! மின்னல் தேவதை என்ற லெமியா அதிக வேகத்தில் ரேடியனையும் இழுத்துக்கொண்டு பறந்தாள். போகும்போது தெரிந்தது. நகரம், நாடு தாண்டி பூமியும் தாண்டிச் சென்றுகொண்டிருந்தார்கள். பிரபஞ்சத்திலுள்ள நேர்த் என்ற இன்னோரு உயிர்கள் உள்ள உலகத்தினுள் செகோமியா என்ற நாட்டில் வெனிக்கோ என்ற நகரில் ஜூசுவா என்ற 22வயது இளைஞன் மரணமடைந்து ஒரு கட்டில்போன்ற ஒன்றில் படுக்க வைக்கப்பட்டிருந்தான். கூட ஜூசுவாவின் உறவினர்கள் அழுதபடியும், இறைவனிடமும் வேண்டிக்கொண்டும் இருந்தார்கள். அவர்களின் வேண்டுதல்கள் மின்னல் தேவைதையின் காதில் விழுந்துகொண்டிருந்தன. அதுவரை ரேடியன் கமாஸை இழுத்து வந்த அந்தத்தேவதை, அவனுக்கு என்ன நடக்கின்றது என்பதைத் தெரிவித்தாள்.
நீ பூமியல் இறந்துவிட்டாய்.
உனது உடல் அங்கு எனது இடியால் எரிந்து கடலிலும் காற்றிலும் கலந்துவிட்டது. நீ அந்த
உடலின் உயிர். ஆத்மா. அந்த உடலின் சக்தி தான் நீ..! ஜூசுவாவின் பெற்றோர் எனது பக்தர்கள். நேர்த் பூமி போல் அல்லாமல் எல்லாம் வித்தியாசமாகவே
இருக்கும். கடல் மேலே இருக்கும். ஆகாயம் கீழே இருக்கும். உயிரமைப்புக்களும் வித்தியாசம்.
மனிதர் போன்ற உயிர்களும் இங்கே உண்டு. ஆனால் உருவங்கள் வித்தியாசம். இங்கு 6 செவிகளும்
3 மூக்குகளும் ஒரு கண்ணுமுள்ள சதுர உடலில் இவை அமைந்திருக்கும். அத்துடன் நான்கு கால்கள் அல்லது கைகள் மாத்திரமே
அவ்வுலக மனிதர்களுக்கு இருக்கும். நடப்பதற்கு அல்லது பிடித்து உண்பதற்கு என அந்நான்கு
கைகால்கள் உதவும்.
இவ்வாறு நேர்த்திலுள்ள உயிர்கள் பற்றியும் குறிப்பாக நேர்த்மனிதர்கள்
பற்றியும் கூறிய மின்னல்தேவதை, உன்னை இப்போது
ஜூசுவாவின் உடலுக்குள் அனுப்பி, அவனை உயிர்பெறச்செய்து குடும்பத்தாருக்கு நன்மை செய்யப்போகின்றேன். உன்னை
மதிக்காத பொலீச்சுஸ் குடும்பத்திற்கு ஒரு படிப்பினையாக நான் உன்னை அவர்களிடமிருந்து
பிரித்தேன். ரேடியன்கமாஸ் இனி ஜூசுவாய் இருந்தாலும் நீ உண்மையில் ரேடியன் கமாஸ்
தான். எனச்சொல்லி, ரேடியன் மூலம் ஜூசுவாயை உயிர்பித்தாள் மின்னல் தேவதை..!
ஜூசுவாய் வழமைபோல் சில மாதங்கள் பின்னர் தனது கல்வி மற்றும் திறனாய்வு கழகத்திற்கு
சென்றான். அங்கு இவனையே எதிர்பார்த்து காத்திருந்தாள்
கிறிஸ்டயா என்பவள். உண்மையில்
கிறிஸ்டயாவும் ஜூசுவாவும் காதலர்கள். ஆனால் ஒரு நோயால் சில மாதங்கள் முன்பிருந்து ஜூசுவா கழகத்திற்குச் செல்லவில்லை. அதேநேரம் அந்த ஆய்வுக்கல்வி நிறுவனத்தில் இருக்கும்
கிறேமியன் டுவி என்பவனும்
கிறிஸ்டயாவைக்காதலித்தான். ஆனால் இந்தக்காதல்
கிறிஸ்டயாவுக்குப் பிடிக்கவில்லை. இவன் ஒரு தலையாகக் காதலித்தான். ஆனால் கிறிஸ்டயா ஜூசுவாவைக்காதலிப்பதைப் பொறுக்க முடியாத கிறேமியன் டுவி தனது ஆய்வில் கண்டறிந்த நினிகோஸ்
என்ற ஒரு உயிர் கொல்லி நுண்ணங்கியைச் செலுத்தி, ஜூசுவாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றான்.
இருந்தாலும் இவன் கிறிஸ்டயாவை உண்மையாகவே காதலித்தான்.
இந்த விடயங்கள் அனைத்தையும் அறிந்த, ரேடியன் கமாஸ், ஜூசுவா
உடலில் இருந்தே கிறேமியன் டுவியின் நினிகோஸ் என்ற அந்தக்கொடிய நுண்ணங்கியை அழிக்கின்றான்.
அன்பால் அவனைத் திருத்துகின்றான். கிறிஸ்டயாவிற்கு அவனின் காதலை உணர்த்தி, தான் ஜூசுவா
அல்ல என்றும் ரேடியன் கமாஸ் என்ற வேறு உலக மனிதன் என்றும், சொல்லி, இருவரையும் இணைத்து
வைக்கின்றான். அதுமாத்திரமன்றி, அன்பையும் மகிழ்ச்சியையும் பரப்பும் புதிய உயிரங்கி
ஒன்றை கண்டுபிடிக்கின்றான். கபாசீன் என்ற அந்த உயிரங்கியை நேர்த் என்ற அந்த உலகம் பூராகப் பெருக்கி, அனைத்து
உயிர்களையும் அன்பாகவும் நிம்மதியாகவும் வாழ வைக்கின்றான் ஜூசுவாய் எனும் ரேடியன் கமாஸ். அவனது நேர்த் பெற்றோரும் மகனின் சேவையாலும், சாதனையாலும்
மகிழ்கின்றார்கள். நேர்த் மக்கள் வணங்கும் மின்னல் தேவதையும் மகிழ்கின்றாள். ரேடியன் கமாஸை பாராட்டுகின்றாள். அத்துடன் ஜூசுவாக
இருக்கப்போகின்றாயா இல்லை, உனது பூமிக்கு திருப்ப
போகின்றாயா எனக்கேட்க, நேர்த் பெற்றோருக்கு ஜூசுவாக இருந்து, இந்த உலகை அன்பால் ஆளப்போகின்றேன்
எனச்சொல்கின்றான் ரேடியன் கமாஸ். அதனைக் கேட்ட மின்னல் தேவதையும் சம்மதிக்க, நேர்த்தையே
அன்பால் ஆளுகின்றான் ரேடியன் கமாஸ் என்ற ஜூசுவா.
ஆ.கெ.கோகிலன்
(Fantacy Type)
05-04-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக