மூத்த மகளின் பிறந்த நாள்..!

 



இன்று பல, மனதிற்கு மகிழ்வைத் தரும் நிகழ்வுகள்  நடந்தன.  அதில் முக்கியமானது மகளின் பிறந்த நாள் கொண்டாட்டமும், சிற்றூண்டிகள் பரிமாறலும்..!

எனது மூத்த மகள் பிறந்து, இந்த வருடத்துடன் தனது கட்டிளமைப்பருவத்தைத் தாண்டி ஒரு யுவதியாக மாறுகின்றாள்.  சுருக்கமாகச் சொன்னால் 19 வயதைக் கடக்கின்றாள். இனி ஒரு முதிர்ச்சியான பெண்ணாகவே அவளைக்கருத வேண்டும்.

காலம் கிடு கிடுவென ஓட கைகளில் குழந்தையாகக் கிடந்தவள் எனக்கே அறிவுரை சொல்லும் அளவிற்கு குமரியாக வந்துவிட்டாள்.  அவளிற்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்தை  தெரிவித்துக்கொண்டேன். அவளுக்குப் பிடித்த வகையில்  எளிமையாகவும், இனிமையாகவும் அவளது பிறந்த நாளைக் கொண்டாடி, அவள் பேரில் எமக்குப் பிடித்த பண்டங்களை உண்டு வயிற்றை நிரப்பினோம். அருகிலுள்ளவர்களையும், உறவுகளையும் மகிழ்விக்க அவ்வாறே செய்தோம்.

போன் கூட பொறுமை இழக்கும் அளவுக்கு அதனை முழு நேரக்கமராவாக மாற்றினோம். மகளும் விடுவதாய் இல்லை. தன்னால் முடிந்த அளவு போனுக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டாள்.  ஏறக்குறைய இரவு 10.00மணிவரை  புதைத்தல் நடந்தது.  அதோடு அவளின் ஆசையும் முடிந்தது. பாடசாலை மாணவர்களும், தனியார் வகுப்பு மாணவர்களும் அவரை வாழ்த்தியதாகவும், தானும் இனிப்பு வழங்கியதாகவும் கூறினாள்.

வருடத்தில்  ஒரே ஒரு நாள் தான் இவ்வாறான நிகழ்வு வருகின்றது. அதனைச் சந்தோசமாகக் கொண்டாடுவோம்.

யாருக்கும் சொல்லாவிட்டாலும், வீட்டோடு மட்டும் என்றாலும் கொண்டாட சூழல் வந்ததற்கு அந்த இறைவனுக்கு நன்றி.

 

ஆ.கெ.கோகிலன்

17-04-2023.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!