மாமனிதன்

 


 


வெயில் நாட்டில் மிகக்கடுமையாக உயிர்களை குறிப்பாக மனிதர்களை தற்போது வாட்டுகின்றது. வீடுகளுக்குள் இருக்க முடியவில்லை. நானும் வெளியில் எங்கும் போக முடியாமல், வேலைகளும் செய்ய முடியாமல் இருக்கும்போது ஏதாவது ஒரு படத்தைப் பார்க்கலாம் என்று இதுவரை பார்க்காத மாமனிதன் என்ற டீவிடியில் இருந்த படத்தை போட்டுப்பார்த்தேன்.

விஜய்சேதுபதி, காயத்திரி மற்றும் ஜோக்கர் குரு சோமசுந்தரம் போன்ற பலர் நடித்திருந்தார்கள். படம் மெதுவாக தொடங்கி, அன்பு, பாசம், காதல், நட்பு, நம்பிக்கை, பயம், துரோகம், சோகம்,  உதவி,  அர்ப்பணிப்பு, வைராக்கியம் மற்றும் மன்னிப்பு என அனைத்து உணர்வுகளும், கதையின் போக்கிற்கு தேவைப்பட்டுள்ளது..! அனைவரும் மிக அழகாக நடித்திருந்தார்கள்.

படம் தொடங்கும் முதல் காட்சியே  பொலிசிற்குப் பயந்து விஜய் சேதுபதி மறைவாக ஓடுகின்றார்.

அடுத்து, உதவி செய்யச்சென்று, மனைவியைப் பெற்று, அதனூடாக  குழந்தைகளைப் பெற்று, நிம்மதியாக போகும் வாழ்க்கையில், குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க நினைக்க, கெட்ட நேரம் ஊரைவிட்டே ஓடவேண்டிய நிலை வருகின்றது. போதாததற்கு மனைவி பிள்ளைகளை நடுத்தெரிவில் விட நேரிடுகின்றது.



இருந்தாலும், எதையும் தாங்க வேண்டும் என்ற உணர்வோடு, நட்பின் துணையுடன் தூரத்தில் இருந்தே குடும்பத்திற்கு உதவிசெய்து, நினைத்த மாதிரி பிள்ளைகளைப் படிப்பித்து தானும், ஒரு நல்ல கணவன், தந்தை, நண்பன் மற்றும் மனிதன் எனச்சொல்லும் கதைதான் மாமனிதன்..! அவன் என்னைக்கவர்ந்தான். பல தடவைகள் கண்களுக்குள் நீர்வந்தது.  ஏமாற்றியவன் காசியில் சாவதும், துரோகத்தால், பயந்து ஒளிந்தவன், காசியில் வெளிப்படுவதும், ஆன்மீகம் என்று எதையோ தேட, ஒவ்வொரு நேர்மையான வாழ்வியலிலும் ஆன்மீகம் உண்டு என்பதை படம் அழகாக உணர்த்தியது.

தேனி மாவட்ட பண்ணைபுரம், கேரளா ஆலப்புலா மற்றும் காசி வாரணாசி போன்ற பகுதிகளின் காட்சிகள் கண்களுக்கு  விருந்தாக அமைந்தன.

தயாரித்த யுவன் சங்கர் ராஜா மற்றும் இசையமைத்த இசைஞானி இளையராஜா, நிறைவாக இயக்கிய சீனு ராமசாமி அனைவருக்கும் நல்ல படத்தைக் கொடுத்த திருப்தி நிச்சயம் இருக்கும். வணிக வெற்றி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மத நல்லிணக்கத்தைக் கூட இப்படம் சொல்லுவது சிறப்பு. மதம் கடந்த நட்பு கடைசிவரை தொடர்வது அன்பே எல்லாம் என்பதன் உண்மைத்தத்துவம்..!

2022இல் வெளிவந்த இந்தத்திரைப்படம் விஜய்சேதுபதிக்கு மேலும் ஒரு நல்ல படமாக அமைந்துள்ளது.

 


ஆ.கெ.கோகிலன்

22-04-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!