ஜெயில்..!

 


சில படங்கள், படம் தொடங்கும் போது நல்ல நம்பிக்கையைத் தந்துவிட்டு, படம் போகும் போது கொலைகளையும், போதைவஸ்துக்களையும், சண்டைகளையும் தொடர்ந்து காட்டி வெறுப்பேற்றிவிடும். இந்தப்படத்திலும் இதனைச் செய்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன்.

இறுதியில் காட்டப்பட்ட முடிவும் பொருத்தமாக இருக்கவில்லை. வெயில், அந்தாடித்தெரு போன்ற சிறந்த படங்களைத் தந்த இந்த இயக்குனர் கோட்டைவிட்டது ஆச்சரியம்.

சொந்த இடங்களிலே அகதிகளாக அலையும் அபலை மக்களாக காவேரி நகர மக்கள் தொடர்பாக வேறுநல்ல விடயங்களைப் பற்றிப்பேசி, அப்படியான  மக்களுக்கு தீங்குகள் செய்யாது, அரசு எவ்வாறு உதவமுடியும் என கதையூடாகச் சொல்லியிருக்கலாம். இங்கு மக்களை, குறிப்பாக அப்பிரதேச இளைஞர்களை

அடிபடவிட்டு, போதைப்பொருள் கடத்துவதும், கொள்ளையடிப்பதும், தண்ணியடிப்பதும் எனக்கெட்ட விடயங்களை காட்டி கதையில் ஒன்றிக்க  விடாமல் தடுக்கின்றார்.

நடிப்பு என்று பார்த்தால் ஜி.வி.பிரகாஷ், ராதிகா, அபர்ணாதி, போன்றோர் நன்றாக நடித்துள்ளனர். பாடல், இசை, ஒளிப்பதிவு, எடிரிங் எல்லாம் சிறப்பாக இருந்தும்  கதைகவர மறுக்கின்றது.

வன்முறைக்காட்சிகளும், காதல் காட்சிகளும் கொஞ்சம் ஓவராக இருக்கின்றது.



கதாநாயகியின்   நடிப்பு சில காட்சிகளில் மிகச்சிறப்பாக, அதுவும் உண்மையாக எடுக்கப்பட்டது போல் இருப்பது சிறப்பு. பசங்க படத்தில் நடித்த இளைஞரையும் அங்காடித்தெருவில் நடித்த பெண்ணையும்  காதலராகக் காட்டிவிட்டு,  இறுதியில் ஒரு காதலைப்பிரித்து, ஹீரோவைக் கொன்றது ஒன்றும் புதுமையாக இருக்கவில்லை. வெறுப்பாக இருந்தது.  சேரிகளை ஆக்கிரமிக்க மக்களுக்கு, வீடுகொடுப்பதாகக் கூட்டிச்சென்று, இன்னும் கஷ்டமான வாழ்வியலுக்குள் மாட்டிவிடுவதும், அந்தச் சேரி இடங்களை கோப்பறேட் கொம்பனிகளுக்கு கொடுப்பதும் அதனூடாகப் பெரும் பணம் சம்பாதிப்பதும் அரசியல்வாதிகளின் வாடிக்கை என்ற உண்மையை  சொல்லவெளிக்கிட்டதற்காக வசந்தபாலனைப் பாராட்டலாம்.



எனக்குப்படம்  பிடிக்கவில்லை. ஆனால் சிலருக்குப் பிடிக்கலாம்.

 

ஆ.கெ.கோகிலன்

07-04-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!