மறதிக்கு மரியாதை..!
சில வருடங்களாக ஞாபகசக்தி சிதறுவதை அவதானித்து வருகின்றேன். சில சமயம் தேகப்பயிற்சி செய்யும் போது எண்ணலைத் தவறவிட்டு, திரும்பத்திரும்ப ஒரே இடத்தில் நிற்பதை, நேரத்தை வைத்துக் கண்டுள்ளேன்..! சில சமயங்களில் எனது மகளின் பெயரை உச்சரிக்க நினைத்து தங்கையின் பெயரை உச்சரிப்பதோ அல்லது எனது அலுவக ஊழியர்களின் பெயர்களை உச்சரிக்கும் போது ஆளை மாற்றி உச்சரிப்பதோ, பலகாலமாக எனக்கு இருக்கும் ஒரு பிரச்சனை..! சிறுவயதில், நான் இடக்கையால் எழுதுவதே வழக்கம் என்றும், எனது தாயார் என்னை பலவந்தமாக, வலது கையால் எழுதிப்பழக்கியுள்ளார்..! இதனால், இன்றுவரை இடம், வலம் கண்டுபிடிப்பதற்கு சிறிது நேரம் எனக்குத் தேவைப்படும். எமது உடலின் அமைப்பே இறைவனின் அருளால் அமைந்தது தான். நாம் வெளியில் பார்ப்பது போல் உள்ளேயும் இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. பலசாலியாக உடலைவைத்து நினைக்கும் பல மனிதர்கள் மிகவும் மென்மையானவர்கள் என்பதை அவர்களுடன் பழகினால் தான் புரியும். அதேபோல் மென்மையானவர்கள் தோல் தோற்றம்கொண்டவர்கள், மிகவும் இறுக்கமான, கொடூரமான எண்ணங்களுடனும் இருக்கின்றார்கள்..! உருவத்தைப் போலவே உள்ளத்தைக்கொண்ட...