பொருளாதாரக் கொடுமைகள்..!

 


நல்லவர்களையும் கெட்டவர்களையும் இனம் காட்டுவது எது..? காலமா காசா..?

உலகமே மாயத்திற்குள் மூழ்கி, மாண்டுகொண்டிருக்கின்றது. உண்மைகளுக்கும் நியாயங்களுக்கும் மதிப்புக்கள் தெரிவதில்லை. மாறாக ஆடம்பரங்களுக்கும், பணத்திற்கும் மரியாதை செய்யும் மனிதர்கள், அன்பையும், உறவுகளையும் இழந்து பணத்துடன் அநாதைகளாகவே வாழவேண்டிய நிலைக்கு, ஆணவம் தள்ளிக்கொண்டே  செல்வது  வேதனையானது.

நானும் வாழவேண்டும்.. கூட உள்ளவனும் வாழ வேண்டும்.. அனைவரும் வாழ வேண்டும்.. என்ற கொள்கையோடு நாம் வாழ்ந்தால் தான் இயற்கையும் வாழ்த்தும். எம்மை வாழ வைக்கும். ஆனால் தற்போது இயற்கை செய்வதைப் பார்த்தால் நாம் சரியான பாதையில் செல்வதில்லை என்பதை பல விதங்களில் புரிய வைக்கின்றது. கடந்த சில வருடங்கள் கொரோனாவால் முடங்கினோம். பின்னர் பொளுளாதாரச் சிக்கலால் முடங்கினோம். தற்போது கடும் வெப்பத்தாலும் அவிகின்றோம்..!

வெப்பம் தலைக்கு ஏறி, மூளை குழம்பி எது சரி..? எது பிழை..? என்பதை புரியமுடியாமல் திணறுகின்றோம்.  சுயநலமாகச் சிந்திக்காமல் பொதுநலமாகச் சிந்திக்கும் போது சில உண்மைகள் புலப்படும். நியாயங்கள் புரியும். அவற்றை பின்பற்றுவதோடு, ஏற்கனவே குழம்பி உள்ளவர்களை மேலும் கஷ்டப்படுத்தாமல் அமைதியாக இருக்க நியாயமான வழிகளைக் காட்டினால், அனைவரும் நிம்மதியடைவார்கள்.

நான் பணிப்பாளராக வந்து ஏறக்குறைய ஆறு வருடங்களுக்கு கிட்டவருகின்றது. எனக்கும் வயது 55 ஐ நெருங்குகின்றது. எனது நிர்வாகத்தில், எல்லோருடனும் கூடிக்கலந்து சரியான திசையில் நிறுவனத்தைச் செலுத்த நினைத்தேன். அதற்காக பல செயல்திட்டங்களை முன்னேடுத்தேன்.  ஊழியர்களிடையே அன்பையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்த சுற்றுலாக்கள், சிரமதானங்கள், பல விழாக்கள், கொண்டாட்டங்கள் எனப்பலவாறு முயன்றேன். ஓரளவு வெற்றி கிடைத்தது என்று சொல்லலாம்.

ஒருவர், அனைவருக்கும் மதிப்பளித்து, நடக்கும்போது, அவரைப்பற்றிப்புரிய வேண்டும். தமக்கு என்ன நன்மைகள் செய்துள்ளார் என்பதை உணரவேண்டும். அவர் நியாயமாக நடக்கின்றாரா என்பதை  கணிக்க வேண்டும். பக்க சார்பாக இருக்கின்றாரா என்பதை அவதானிக்க வேண்டும்.  குறிப்பாக, பொதுக்கூட்டங்களை வைக்கின்றாரா என்பதைப் பார்க்க வேண்டும். ஒருவர் சரியான நிலையில், நியாயமாகவும், வெளிப்படையாகவும் செயல்படுவராயின் யாருக்கும் பயப்படத்தேவையில்லை. நிச்சயம் உண்மை வெல்லும். பிழையான கோணத்தில் பார்த்தால் எல்லாம் பிழையாகத் தான் தெரியும். சரியான கோணத்தில் பார்த்தால் எல்லாம் சரியாகத் தெரியும். இவற்றைத் தாண்டி சரியான நிலையில் இருந்து பார்த்தால் தான் உண்மை புரியும். அந்த உண்மைக்கே பலம் அதிகம். அதை கண்டுபிடித்தால், நிச்சயம் வெற்றி வந்தே தீரும்.

யாருக்கும் கெடுதல் செய்யக் கூடாது. எம்மைநோக்கி வரவும் விடக்கூடாது. உண்மையாக இருந்தால் வராது. பொய்யாக இருந்தால் வருவதைத் தடுக்க முடியாது. பொதுவாகச் சரி, பிழை என்பதே ஒரு நூலிழையில் தான் மாறுகின்றது. ஆனால் உண்மையான சரிக்கும் உண்மையான பிழைக்கும் இடையே தூரம் அதிகம்.

அன்பாய் இருப்போம்..! அன்பால் ஆளுவோம்..!

 

ஆ.கெ.கோகிலன்

09-08-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!