வெளிநாட்டு நண்பர்..!

 


கடந்த சில நாட்களாக வெளிநாட்டுத் தொடர்புகளே அதிகம் வருகின்றன. பல நாடுகளில் இருந்து, அதிலும் குறிப்பாக கனடாவில் இருந்து, பல நண்பர்கள், உறவினர்கள் வந்து செல்கின்றார்கள்..!

நேற்று, பல தடங்கல்கள் தாண்டி, நண்பருடன் சந்திக்கத் திட்டமிட, எதிர்பாராமல் நிலமை மேலும் சிக்கலாகி, இறுதியில் ஏதோ வழியில் ஒரு முடிவுக்கு வந்தது.

திட்டமிட்டே வாழவேண்டும். ஆனால் போடும் திட்டங்கள் எல்லாம் பலிக்கும் என்று சொல்ல முடியாது..! எந்தப்புற்றில் எந்தப்பாம்பு இருக்கும் என்று யாருக்குத் தெரியும்..? எல்லாம் படைத்தவனுக்கே வெளிச்சம்.

கனடாவில் இருந்து வந்த பாலிய நண்பர் என்னைச் சந்திக்க நாள் கேட்டார். இன்று சந்திப்போம்..! நாளை சந்திப்போம்..! என்று நாட்கள் செல்ல, சந்திப்பே நடக்காது என்ற அளவில் நிலமை  வந்துவிட்டது..!

என்னுடைய பாடசாலை நண்பர்கள் என்று பார்த்தால் அதிகம் ஜந்து பேர் தான் இங்கே உள்ளார்கள். அனைவரும் நன்றாக இருக்கின்றார்கள். ஆனால் தற்போதைய சூழலில் ஒருவரையும் சந்திக்க முடியவில்லை.

பல நாட்கள் ஒருவருக்கு ஒருவராக ஏதாவது தவிர்க்க முடியாத சூழலால் ஒன்றுசேர முடியாது போய்விடுவது தொடர்ந்தது..!

இறுதியில் நானும் அந்த வெளிநாட்டு நண்பரும், மாத்திரம் எனது வீட்டில் சூடான பானம் மற்றும் மெதுவான பானம் என்பதுடன், கொக்குவில் செல்வாவில் கட்டிய கோழிக்கொத்துடன், இரவு உணவை முடித்து, சந்திப்பை ஒருவாறு முடித்துக்கொண்டோம். அவரும் பல இடங்களுக்குப் போகவேண்டிய சூழல் இருக்கின்றது. அதேபோல் எனக்கும் சூழல் அமைந்துள்ளது.    சந்திப்பு முடியாமல் போய்விடுமோ என்ற நிலையில், குறைந்த பட்சம் நாமிருவதும் சந்தித்ததே பெரிய நிறைவாக அமைந்தது. பின்னர், அந்த நண்பரும் ஏனைய நண்பர்களைத் தனித்தனியே சந்தித்துள்ளார். அவை தொடர்பான விபரங்களை வட்சப்பில் போட்டு, என்னையும் குஷிப்படுத்தினார். நாளை என்பது நம் கையில் இல்லை. இருக்கும்போது நிம்மதியாக இருக்க வேண்டும். அதற்கு என்ன விலைகொடுத்தாலும் தகும் என்பதே இன்றைய தலைமுறையினரின் எண்ணம். நாமும் குறைந்த அளவிலாவது, அவ்வாறு எண்ணுவோம்..!

 

ஆ.கெ.கோகிலன்

09-08-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!