படப்பிடிப்பு..!

 


பல நாட்களாகத் திட்டம் போட்டும் நடக்காத ஒருவிடயம் இன்று திடீரென நடந்து முடிந்துவிட்டது..!

ஆம், மகளின் சாமத்தியவீடு நடந்து ஏறக்குறைய  2 மாதங்கள் ஆகின்றன. வீடியோ மிக்சிங் கொஞ்சம் செய்ய கேட்டார்கள். அவர்கள் கேட்ட நாட்கள் எல்லாம் ஏதோ தடைகள் வந்து, அதனைச் செய்ய முடியாமல் போவதே சகஜமாகிவிட்டது.

நேற்று, மாலை கமேராமேனிடம்  இது  தொடர்பாகக் கேட்டேன். அவரும் சம்மதித்தார். நேற்று மாலையே பெரிய ஒரு செலவைச் செய்து, மகள்களுக்குத் தேவையான துணிமணிகளை வாங்கி, இன்று காலை தொடங்கி மாலை வர முன்னரே காங்கேசன்துறைமுக விடுதியில் மிகுதி இருந்த சூட்டிங்கை முடித்துவிட்டோம்.

பிள்ளைகள் படம் எடுப்பதில் தீவிரமாக இருக்க, நான் அந்தப்பொழுதுகளை ரசிக்கவும் பயன்படுத்தவும் தொடங்கினேன். கடுமையான வெயிலும், புளுக்கமும் இருப்பதால், கடலில் இறங்கி நல்ல குளியலைப் போட்டேன். போதாததற்கு, பல வகையான உணவுகளையும் உண்டு, வயிற்றைக் குளிர்ச்சிப்படுத்தினேன்.

கொரோனாவிற்குப் பிறகு, பல நாட்களாக விடுதியில் தங்கவேண்டிய நிலை ஏற்படவில்லை. இன்று, படம் எடுப்பதற்காகவும், உடைகள் மாற்றுவதற்காகவும் விடுதியறை ஒன்றை வாடகைக்கு எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. வீடியோ எடுப்பதற்கு, 5 மணித்தியாலத்திற்கு  5000 ரூபாயும்,  தங்குவதற்கு 7000  ரூபாயும் என ரூபா.12000 செலவானது. ஏறக்குறைய இதே அளவான  செலவு உணவு மற்றும் குளிர்பாணங்களுக்கும் தேவைப்பட்டது.

இன்று போயா விடுமுறை என்பதாலும், கடும் வெப்பமான காலநிலை நிலவுவதாலும் எல்லோரும் கடல்குளிப்பை விரும்புவார்கள். சான்றாக கடல்கரையே மக்களால் நிரம்பியிருந்தது.  நானும் அதற்கு விதிவிலக்கல்ல..!  விடுதித் தடாகத்தில் குளிக்க முதலில் நினைத்தேன்.  அந்நேரம் தடாகத்திற்குள் குளோரின் வீசியதால், அதனைத் தவிர்த்து, கடலில் குளித்தேன்.

எதிர்பார்க்காமலே ஒரு விடுமுறை நாள், பயனுள்ள நாளாகவும், மனதிற்கு மகிழ்ச்சியும் நிறைவும் கொடுத்த நாளாகவும் மாறியது ஆச்சரியம்.

 

ஆ.கெ.கோகிலன்

01-08-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!