வன்முறைக்கு மாறும் மாணவர்கள்..!
கால மாற்றங்களும், வசதி வாய்ப்புக்களும் மனிதர்களை நாகரீகப்படுத்தினாலும், செயற்பாடுகளும், அதற்கான விவாதங்களும் சுற்றியிருப்பவர்களை வாட்டுகின்றது.
ஒரு கல்வி நிறுவனத்தில் ஊழியர்கள் முன்மாதிரியாக நடந்தால்
தான் மாணவர்களும் அவ்வாறு நடப்பார்கள். மாறாக நடப்பார்களாயின், மாணவர்களும் அவ்வாறே
நடப்பார்கள்.
நேற்றும், இன்றும் இரு மாணவர்கள் பரீட்சை நோக்குணர்களுடன் முரண்பட்டுள்ளார்கள். தவறுகளைச் செய்துவிட்டு, அதனை
மறைக்க முனைந்துள்ளார்கள். ஒவ்வொரு நிலை மேல்
அதிகாரிகளுடனும் கெஞ்சுவதும், மிஞ்சுவதுமாக இருந்துள்ளார்கள்.
இவ்வாறான நிலை ஏன்வருகின்றது என சிந்திக்கும் போது, எமது
முன்மாதிரியான கல்வியாளர்களே காட்டுமிராண்டிகள் போல் நடந்தால், அதனைப் பார்த்து வளரும்
மாணவர்கள், அந்த முறை தான் சரி எனவாழ்வார்கள்..! வாழவும் முற்படுகின்றார்கள்..!
கல்வியை விட ஒழுக்கம் முக்கியம்.
பிழை செய்வது கூடாது என்று ஒவ்வொருவரும் உணர்ந்தால் தான்
நாடு முன்னேறும். யாரும் பார்க்கவில்லை..!, ஏமாற்றலாம்..! பார்த்தாலும் பரவாயில்லை..!,
என்னை யார் கேட்க முடியும்..? மற்றவர்கள் இருந்தால் என்ன..? செத்தால் என்ன..? என்று
வாழ்பவர்களால் ஒரு நாடு நிறைவான முன்னேற்றத்தை ஒருபோதும் அடைய முடியாது. தற்போது உலகம் அதனை உணரத்தலைப்படுகின்றது. நிலைமைகள்
தலைகீழாக மாறியுள்ளன. வல்லரசுகள் கலங்க, வளர்முக நாடுகளில் வளர்ச்சிகள் வருகின்றன.
இடம்பெயர்ந்து வாழ்வதும், நிலைத்து நிற்பதும் காலம் காலமாக
இருந்துவரும் பழக்கம் தான்..!
இதன் பின்னாலுள்ள உண்மையைப் புரிந்து, நிலைத்தோ அன்றி நகர்ந்தோ நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழப்பழக வேண்டும்.
இறுதியாக, மாணவர்களின் முரணான நிலைகள் தொடர்ந்தால், மேலும்
கல்வியாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் சிக்கல்கள் வருவது தவிர்க்க முடியாமல் போய்விடும்.
அது வராமல் தடுக்க, ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுத்து, மாணவர்களை நெறிப்படுத்தவேண்டிய
பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனைப் புரிந்து, நாமும் தவறுகள் செய்யாமல், மற்றவர்களும்
அதனைச் செய்யாமல் பார்த்து, நாடு முன்னேற உழைக்க வேண்டும். அது எம்மையும் நாட்டையும்
ஒன்றுசேர உயர்த்தி, உலகையே ஆச்சரியப்பட வைக்கும்.
ஆ.கெ.கோகிலன்
09-08-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக